துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.11.08

வலையை வரவேற்று.....

விரைவில் ஒரு வலைப்பதிவைத்தொடங்குமாறும்,அது நிறையத்தொடர்புகளைப்பெற்றுத்தரும் என்றும்,அதன் வழி நான் மிகுதியான செயலூக்கம் கொள்ள வழி பிறக்கும் என்றும்,இரண்டு மாதங்களுக்கு முன்பு,திரு ஜெயமோகன்,எனக்கு ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார்.சத்தியமான அந்த வார்த்தைகளின் வீரியத்தை,இத்தருணத்தில் நான் பூரணமாக உணர்ந்து கொள்கிறேன்.எனதுபுதிய வலைப்பூவின் வருகையை வரவேற்றும்,வாழ்த்துக்கூறியும், அது குறித்துத்தங்களது தளங்களில் அறிவித்தும் பல எழுத்தாளர்களிடமிருந்தும்,நண்பர்களிடமிருந்தும்,முகம் தெரியாத பல தமிழ் ஆர்வலர்கள்-மற்றும் வாசகர்களிடமிருந்தும்வந்துள்ள செய்திகள் என்னை உற்சாகம் கொள்ள வைத்து
ஊக்கத்தோடு செயல்படத்தூண்டுதல் அளிக்கின்றன.நன்றியின் நெகிழ்வோடு,
அவற்றில் சில பதிவுகள் இங்கே பார்வைக்கு.....

ஜெயமோகன்(எழுத்தாளர்):நன்றி-வலைப்பதிவு -எம்.ஏ.சுசீலா,லதானந்த்-பரிந்துரை,நவ.5.08
http://www.jeyamohan.in/


எஸ்.ராமகிருஷ்ணன்(எழுத்தாளர்
)http://www.s.ramakrishnan.com/:சுசீலா மேடம்,உங்களது
புதிய வலைப்பக்கம் சிறக்க வாழ்த்துகிறேன்.


ராகவன் தம்பி(எழுத்தாளர்,வடக்குவாசல்ஆசிரியர்,http://www.sanimoolai.blogspot.com/
அன்புள்ள திருமதி சுசீலா அவர்களே!வலையுலகுக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.வலைப்பதிவராக,நீங்களும் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
வாங்க.பொளந்து கட்டுங்க.வானம் மட்டுமே எல்லையாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள
(வ.ந.கிரிதரன்,http://www.pathivugal.com/
வணக்கம்.தாங்கள்,வலை தொடங்கிய விவரம்,அறிந்து கொண்டேன்.சைபர்உலகிற்கு,உங்கள் வரவு,
நல்வரவாக எமது வாழ்த்துக்கள்.பியோதர்தஸ்தஎவ்ச்கியின்"குற்றமும் தண்டனையும் "என்னும் புகழ் பெற்ற நாவலை (எனக்கும் மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று)தாங்கள் மொழிபெயர்த்துள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்....
உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நா.அனுராதா,தமிழ்ப்பேராசிரியர்,பாத்திமா கல்லூரி,மதுரை:,என் அன்பிற்கும் .மதிப்பிற்கும் என்றும் உரிய சுசீலாஅவர்களின் வலைப்பூ விதைத்த சில எண்ணங்கள்....வலைப்பூ,மொட்டு அவிழும்போதே,நன்றாக மணக்கிறது.வலைப்பூ தரும் வாய்ப்புக்களை(பார்க்க:வலைப்பூவின் இலக்கு)சொல்லி இருக்கும் விதம்,மிக நன்று.நுழை வாயில் சிந்தனைகள்,சிறப்பானவை.சக ஹிருதயர்களோடு எண்ணங்களைப்பகிர்ந்து,வாழ்வின் தருணங்களை நித்தியத்துவம் ஆக்கத்துடிக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற அன்பு அனுவின் வாழ்த்துக்கள
சந்தோஷ்குமார்;அன்புள்ள திரு சுசீலா அவர்களுக்கு,உங்களுடைய வலைப்பதிவு,சிறப்பாகவே உள்ளது.என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சிவகுமார்:உங்களுடைய பிளாக்ஸ்பாட்டில் உள்ளவற்றைப்படித்தேன்.ஒரு தனி அனுபவமாகவும்,தமிழ் அனுபவமாகவும் இருந்தது.தொடர்ந்து படிக்கிறேன்.
கிருஷ்ணன்:வாழ்த்துக்கள் சுசீலா அவர்களே,திரு ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து,இங்கே வந்தேன்.அடிக்கடிவருவேன்.
சரவணன்:http://www.oorsuththi.com/வலைப்பக்கங்களில்பூத்துள்ள புதிய பூவிற்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்
j.ரவிச்சந்திரன்: congrats madam! wish you all the best in your new innings!
காசிலிங்கம்,www.kasilingam.com/wiki/doku.php?id=tamil blogging:
அன்புள்ள திருமதி. சுசீலா அவர்களுக்கு,
உங்களைப் போன்றவர்கள் ஆழமான சிந்தனைகளும் அனுபவங்களும் உடையவர்கள் வலை வழியாக பலருக்கும் தங்கள் படைப்புகளை அளிக்கத் தொடங்குவது நல்ல மகிழ்வளிக்கும் செயல். அதற்கு என் வலைப்பக்கமும் ஒரு சிறு கருவியாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்ட தங்கள் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
உங்கள் எழுத்து முயற்சிகள் அனைத்திலும் பெருவெற்றியடைந்து மேலும் சாதனைகள் பல நிகழ்த்த வாழ்த்துகிறேன்.
திரு ஹரன்பிரசன்னா(கிழக்குப்பதிப்பகம்,http://www.nizalkal.blogspot.com/ ):புதியவலையை வரவேற்றதுடன்,இதை மேலும் செம்மைப்படுத்தி உதவியிருக்கிறார்.அவருக்கு, என் உளமார் நன்றிகள்!

2 கருத்துகள் :

manjoorraja சொன்னது…

இனிய வாழ்த்துக்கள்

உங்கள் பதிவை பற்றி ஜெயமோகன் மூலம் அறிந்தேன்.

உங்களுக்கு நேரமிருந்தால் முத்தமிழ் குழுமத்திலும் பங்களிக்கலாம்

http://groups.google.com/group/muththamiz

பெயரில்லா சொன்னது…

//சக ஹிருதயர்களோடு எண்ணங்களைப்பகிர்ந்த//

எனக்கு புதுசா ,அழகா இருக்குதே கடவுளே !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....