துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.12.12

விஷ்ணுபுரம் விழா-கோவையில்..


விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 / 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
கவிஞர் தேவதேவன்
நிகழ்ச்சியில் தேவதேவனின் கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘ஒளியாலானது’என்னும் நூலும் வெளியிடப்படவிருக்கிறது.

                                   தலைமை- எழுத்தாளர் நாஞ்சில்நாடன்                                            பரிசளிப்பு- இசைஞானி இளையராஜா
நூல் வெளியீடு- கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்)
பெற்றுக்கொள்பவர் - கோபி ராமமூர்த்தி
தொகுப்புரை-செல்வேந்திரன்
வரவேற்புரை- கே.வி.அரங்கசாமி
வாழ்த்துரைகள்
                                                     எழுத்தாளர் ஜெயமோகன்

விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா
ஏற்புரை - கவிஞர் தேவதேவன்
          நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .

 தேவதேவன் கவிதை ஒன்று

’இக்கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
“ஐயோ இதைப்போய்…” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துடன்
என்னை சரித்துவிட்டாய்
சொல்லொணா
அந்த மலைவாச ஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கு
என எண்ணினேன்.
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளினூடாக ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின் அத்தனை செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுதும் கொண்டு
தன் ரசனை அனைத்தும் கொண்டு
படைத்த ஓர் அற்புத சிருஷ்டி
நிறத்தில் நம் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்திற்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்’

(கூழாங்கற்கள்)

தொடர்புள்ள இணைப்புக்கள்;

விஷ்ணுபுரம் விருது விழா-2012

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

விஷ்ணுபுரம் விழாவிற்கு வரணும் என்று விரும்பினேன். அது இந்த முறையும் இயலாமல் போய்விட்டது. இளையராஜா, ஜெயமோகன், நாஞ்சில்நாடன் என்ற ஆளுமைகளை பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று பெருவருத்தமாகயிருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....