தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான
எழுத்தாளர் ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால்
உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம்
ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தால்,
பலப்பல ஊர்களிலும்,நாடுகளிலும் சிதறிவாழ்ந்துகொண்டிருக்கும்
நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.
இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப்பயிற்சியை மேம்படுத்திக்கொள்வதோடுபிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..
அல்லது உரியவகையில் அங்கீகாரம்தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக்கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் இந்த
இலக்கிய அமைப்பு,ஒவ்வோர் ஆண்டும் திரு ஜெயமோகன் அவர்கள் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு
’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை அளித்துச்சிறப்பித்து
வருகிறது.
திருவனந்தபுரத்தைச்சேர்ந்த மூத்தஎழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு
தொடர்ந்து,
2012ஆம் ஆண்டுக்கான ’விருது’
கவிஞர் தேவதேவனுக்கும்,
2014ஆம்
ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ,நவீனகவிதை வெளியின் மூத்த கவிஞரான திரு
ஞானக்கூத்தனுக்கு வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞரான திரு தேவதச்சன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் விருதை வழங்க இருக்கிறார்
தேவதச்சன் குறித்த ஆவணப்படமும் வெளியிடப்படுகிறது.
படத்தை வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன்
தேவதச்சன் கவிதைகள் குறித்த விமரிசன நூலை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியிட
எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன், லட்சுமி மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள்.
ஏற்புரை திரு தேவதச்சன்
விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு வாழ்த்துக் கூறுவதோடு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,
'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு
அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.
பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்முகநூல்களிலும் வெளியிடவும்
பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்
விஷ்ணுபுரம் விருது விழா-2013
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக