துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.9.16

விஜய் டி வியில்.....36 ஆண்டுகள் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றி ஒரு  கல்வியாளர்,எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் என்று பெற்ற முகவரிகள்   மட்டுமே என்னுடையவை அல்ல.

குடும்ப உறவில் தாய், பாட்டி என்ற பந்தமும் , பிரிக்க முடியாத பிணைப்பும் பாசமும் கொண்ட என் பேத்தி மற்றும் பேரன் ஆகியோரின் அளவிட முடியாத விருப்பத்தை  நிறைவு செய்யும் கடமையும் எனக்கு உண்டு என்பதை ஒவ்வொரு கணமும்நான் உணர்ந்திருக்கிறேன்..அதனாலேயே விஜய் டிவி நடத்தும் ‘’நீங்களும் வெல்லலாம்’’நிகழ்ச்சிக்கு நான் செல்ல வேண்டும் , அதில் வெல்ல வேண்டும் என்று அவர்கள்  இருவரும் முன் வைத்த  அன்புக்கோரிக்கையைச் சற்றுத் தயக்கத்தோடு  நான் உடன்பட, நான் கூறிய பதிலை வைத்து அவர்கள் விண்ணப்பிக்க -
 கோவையில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்  என் பேத்தி சோபனா கிருஷ்ணா இரண்டாவது பங்கேற்பாளராக  என்னோடு இணைந்து கொள்ள ஆகஸ்ட் தொடக்கத்தில் அந்த நிகழ்ச்ச்சிக்கு நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். ஆகஸ்ட் 18 அன்று சென்னை ஏ வி எம் படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவு நடந்து முடிந்து 29,30 தேதிகளில் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருக்கிறது...
நிகழ்ச்சியை நடத்திய திரு அரவிந்தசுவாமி அவர்கள்  எங்களோடு மிகுந்த உற்சாகத்துடனும்  அறிவார்ந்த தளத்திலும் உரையாடியது என்றென்றும் எங்கள் இருவரின் நெஞ்சங்களிலும் பசுமையாகநிலைத்திருக்கும்.
விஜய் டிவியில் அந்தக்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகப்  பணியாற்றுவோர் எங்களுக்கு அன்போடு செய்த பல உதவிகளும் எங்களால் மறக்க இயலாதவை.

மகிழ்ச்சியோடு   நாங்கள் கலந்து கொண்ட அந்தநிகழ்வில் பெற்ற வெற்றி  ஒரு புறமிருக்க... தொலைக்காட்சி ஒளிபரப்புக்குப் பிறகு   உலகின் எங்கேங்கொ மூலைகளிலிருந்தெல்லாம் என் அன்பு மாணவிகளும் 40 , 45 வருடங்களுக்கு முன் சந்தித்துப்பழகியநட்புக்களும்  என்னோடு தொடர்பு கொண்டு தாங்கள் என்  மீது கொண்டிருக்கும் நட்பையும் அன்பையும் மதிப்பையும் கைபேசி மின்னஞ்சல் எனப்பலவகைகளில் பரிமாறியபடி என்னை அன்பு வெள்ளத்தில் திக்கு முக்காடச்செய்து வருகிறார்கள்...ஊடகத்தின் வலிமை அத்தைகையது....

குடும்பத்திலுள்ள குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்னும் மகிழ்ச்சியோடு நான் ஒரு நல்ல ஆசிரியையாக இன்னும் கூட என் மாணவியர் நெஞ்சில் உறைந்திருக்கிறேன் என்ற பெருமிதமும் நிறைவும் என்னை நெகிழச்செய்து கொண்டிருக்கிறது.... 

நிகழ்ச்சியைக்காண்பதற்கான இணைப்புக்கள்;

http://www.hotstar.com/tv/neengalum-season-3/9265/great-expectations/1000108337

http://www.hotstar.com/tv/neengalum-season-3/9265/little-shobhanas-surprise/1000108475கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....