திரு இளங்கோ என் வலையுலக நண்பர்.
எனது மொழிபெயர்ப்பான குற்றமும் தண்டனையும் நாவல் குறித்த தனது பதிவின் வழி எனக்கு அறிமுகமான அவரைச் சென்ற டிசம்பர் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் நேரில் ஓரிரு நிமிடங்கள் காணும் வாய்ப்பு கிடைத்தது.
சமூக அக்கறையுடன் விழுதுகள் என்னும் தன்னார்வ அமைப்பை[கல்வி,சுற்றுச் சூழல் சார்ந்தது] நண்பர்களோடு இணைந்து நடத்தி வரும் இளங்கோவின் இலக்கிய ஆர்வமும் வியக்க வைப்பது.
விழுதுகள்-நனவாகியதொரு கனவு |
ஆனால் இளங்கோ போன்ற இளைஞர்கள் அந்தச் சோர்வை நீக்கும் மாமருந்தாகிறார்கள். மலைப்போ அலுப்போ இன்றி நூலையும் படித்து முடித்துவிட்டு அதே வேகத்தோடு ஒரு விமரிசனக் கட்டுரையும் எழுதும் இவர்களைப் போன்றவர்களே படைப்பாளிகளுக்கும்,மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கிரியா ஊக்கிகள். அந்த வாசக மனங்களைப் பாராட்டுவதற்காகவே அசடன் நாவலின் பின் இணைப்பாகக் குற்றமும் தண்டனையும் குறித்துப் பலரும் தங்கள் வலைப் பதிவுகளில் எழுதிய கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறோம். அவற்றில் ஒன்றாகத் தனது கட்டுரையும் இடம் பெற்றிருப்பது இளங்கோவுக்கு ஓர் இனிய அதிர்ச்சி! அசடன் நூலை வாங்கி அது கிடைத்த உடன்..அவர் எழுதியுள்ள பதிவிலிருந்து சில பகுதிகள்...
எம்.ஏ. சுசீலா அவர்களின் முந்தைய மொழிபெயர்ப்பான, குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றிய எனது பதிவை இந்தத் தளத்தில் எழுதி இருந்தேன். அந்தப் பதிவை, அசடன் நாவலின் பின் பகுதியில் அச்சிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனது எழுத்தை அச்சில் பார்ப்பது இதுவே முதல் முறை, அதுவும் எனக்குத் தெரியாமலே. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
புத்தகம் என் கைக்கு கிடைக்கும் முன்னர், புத்தகத்தில் எனது பதிவு வெளியான செய்தியைத் தெரிவித்து, வாழ்த்திய சஹிதா அக்காவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். சுசீலா அம்மாவுக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.
அசடன் நாவலைப் படிக்கத் தொடங்கி, நூறு பக்கங்களை கடந்து விட்டேன். முழுவதும் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
மேலும் படிக்கhttp://ippadikkuelango.
நாவலின் 100 பக்கங்களைக் கடந்திருக்கும் இளங்கோ விரைவில் முழு நாவலையும் படித்த பின் எழுதப் போகும் விரிவான பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வணக்கம் அம்மா,
பதிலளிநீக்குஎனது பதிவுகள் பற்றியும், விழுதுகள் பற்றியும் பதிவிட்டமைக்கு எனதன்பு நன்றிகள்.