துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.12.11

’அசட’னின் வருகை...

அக்டோபர் மாதமே வரக் கூடுமென எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும் பதிப்புப் பணியில் நேரிட்ட ஒரு சில நடைமுறைச் சிக்கல்களால் சற்றுத் தாமதமான ‘அசட’னின் வெளியீடு இப்போது நிகழ்ந்து நூலும் வெளிவந்து விட்டது. நடப்பாண்டுக்குள் அந்த வெளியீடு சாத்தியமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

மதுரை பாரதி புத்தக நிலையம் வெளிட்டிருக்கும் இந்த மொழியாக்க நாவலை வாங்க எண்ணுவோரும்,முன்னமே முன் பதிவு செய்து கொண்டவர்களும் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
"durai pandi pandi" <bharathibooks@yahoo.co.in>

பதிப்பாளரிடமிருந்து நூலின் பிரதிகள் போதிய அளவு அனுப்பி வைக்கப்பட்டபின்பு,ஆன்லைன் வழி உடுமலை.காமில் பதிவு செய்து கொண்டவர்களுக்குப் பிரதிகள் கிடைக்கும்.

நூலின் பிரதிகள் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன்,மற்றும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும்  அவர்கள் மின்னஞ்சல் வழி எனக்கு அளித்த வாழ்த்துச் செய்திகள்...

திரு ஜெயமோகன்;
அன்புள்ள சுசீலா
அசடன் நாவல் நேற்று கூரியரில் வந்தது. சிறப்பான கட்டமைப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. 
வாழ்த்துக்கள்

திரு எஸ்.ராமகிருஷ்ணன்
அன்பு சுசீலா அம்மா அவர்களுக்கு
அசடன் நூல் கிடைத்தது, மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, உங்களின் அயராத மொழியாக்கப்பணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
மிக்க அன்புடன்
எஸ்ரா


7 கருத்துகள் :

Aranga சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா , நான் காத்திருக்கிறேன் .

viki சொன்னது…

நானும் முன்பதிவு செய்துள்ளதால் ஆவலாக காத்திருக்கிறேன்!

Unknown சொன்னது…

அன்புள்ள அம்மா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
வாசிக்க காத்துக் கொண்டுள்ளேன்

viki சொன்னது…

பதிப்பகத்துக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லை!தொலைபேசியும் வேலை செய்யவில்லை போல!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்களுக்கு நன்றி..
திரு விக்கி,உங்களுக்கு விரைவில் நூலை அனுப்பி வைப்பதாகப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

viki சொன்னது…

புத்தகம் இன்று கிடைத்தது!மிக்க நன்றி! :)

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Great service! Great writer! Great mother! Great Tamil! Great Indian!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....