துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.12.18

யாதுமாகி மதிப்புரை- அரும்பு இதழில்..

வாழ்க்கை வரலாற்றை நாவல் புனைவுகளாக்கும் முயற்சி தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.அவற்றின் அண்மைக்கால - பெண்படைப்பின்- உதாரணங்களாக எழுத்தாளர் பொன்னீலனின் தாய் அழகிய நாயகி அம்மாள் எழுதிய'கவலை',வத்சலாவின்'வட்டத்துள்', சிவகாமியின்'உண்மைக்கு முன்னும் பின்னும்',முத்துமீனாளின்'முள்',பாமாவின் 'கருக்கு'என்று பலவற்றைச் சொல்லலாம்.அந்த வரிசையில் என்னோடு நெருங்கிய ஆளுமை ஒருவரின் வாழ்வைப்புனைவாக்கி 2014 இல் நான் வெளியிட்ட நாவல் 'யாதுமாகி'.இப்படைப்பு குறித்து'சங்கவை' நாவலின் ஆசிரியரும்,எழுத்தாளருமான பேராசிரியை ஜெயசாந்தி அவர்கள் எழுதியிருக்கும் விரிவும் ஆழமுமான விமரிசனக் கட்டுரை, டிச,'அரும்பு' இதழில் வெளியாகி இருக்கிறது.
இது,என் நூல் குறித்த ஆய்வு என்பதற்காக மட்டுமே நான் இங்கே இதை முன்னிறுத்தவில்லை.பொதுவாகவே ஒரு நூலை முழுமையாக உட்செரிக்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தபடி,அதை வானளவாப் புகழ்வதுஅல்லது ஒரேயடியாய்த் தூற்றுவது என்ற இருவகைப்போக்குகளே மலிந்து வரும் இன்றைய சூழலில்,ஒரு படைப்பின் எல்லாப் பரிமாணங்களையும் ஆழமாய் உள்வாங்கி எழுதப்பட்டிருப்பதாலேயே இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.அத்தகைய ஆய்வுகள் மட்டுமே ஒரு படைப்பாளியை முழுநிறைவு பெறச்செய்பவை.
கட்டுரையாளர் ஜெயசாந்தி அவர்களுக்கும் கட்டுரையை வெளியிட்டிருக்கும் ' அரும்பு' இதழுக்கும் என் நன்றி.

இந்து தமிழ் திசையில் என் நேர்காணல்- 9.12.18

இன்றைய இந்து தமிழ் திசையில் என் நேர்காணல்- 9.12.18

170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் பல ஆயிரம் பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் எம்.ஏ.சுசீலா. தஸ்தயேவ்ஸ்கியின் சில கதைகள், குறுநாவல்கள் எனச் சொற்பமான எழுத்துகளை வைத்தே நாம் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’, ‘இரட்டையர்’ என அவரது பேரிலக்கியங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தருவதற்காகத் தன் பேராசிரியப் பணிக்குப் பின்பான ஓய்வுகாலத்தை அர்ப்பணித்துக்கொண்ட சுசீலாவின் பணி போற்றுதலுக்குரியது. ‘அசடன்’ நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதைக் கொண்டாடும் விதமாக தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க் குரல் எம்.ஏ.சுசீலாவுடன் உரையாடியதிலிருந்து..
நன்றி:த ராஜன்,இந்து
உங்களது முதல் மொழிபெயர்ப்புப் பணியே ‘குற்றமும் தண்டனையும்’ நாவலிலிருந்து தொடங்குகிறது. ஆயிரம் பக்கப் பேரிலக்கியத்தை மொழிபெயர்க்க எப்படித் தயாரானீர்கள்?
எந்த வகையான தயாரிப்புகளோ, முன் ஆயத்தங்களோ இல்லாமல் தற்செயலாகத்தான் என் முதல் மொழியாக்கப் பணியில் இறங்கினேன். சொல்லப்போனால், ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டபோது தஸ்தயேவ்ஸ்கியின் எந்த எழுத்தையும் நான் வாசித்திருக்கவில்லை. பேராசிரியப் பணியிலிருந்து ஒய்வுபெற்றிருந்த நேரத்தில் என்னை வந்தடைந்த ஒரு வாய்ப்பு அது. சிறு வயது முதல் என்னைப் பற்றிக்கொண்ட இலக்கிய வாசிப்பும், புனைவு எழுதுவதற்காக மொழியைக் கூர்தீட்டத் தொடர்ந்து மேற்கொண்டுவந்த முயற்சிகளும் எனது மொழிபெயர்ப்புக்குத் துணை நின்றிருக்கின்றன எனலாம். ஒரு பணியாகத் தொடங்கிய எனது மொழிபெயர்ப்புப் பயணத்தைப் பிறகு படைப்புச் செயல்பாடாக நான் முன்னெடுத்ததற்கு தஸ்தயேவ்ஸ்கி எனும் மாமேதையின் ஆளுமையே காரணம்.
அதிக பக்கங்கள் கொண்ட நாவலை வாசிப்பதே சவால் நிறைந்தது. உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் எப்படி இருந்தன?
இளமைக்காலம் முதல் இன்று வரையிலும் வாசிப்பு உற்ற தோழமையாக இருந்துவருவதால் எந்த மொழி வாசிப்பென்றாலும் எத்தனை ஆயிரம் பக்கங்கள் என்றாலும் வாசிப்பு என்பது ஒருநாளும் சோர்வூட்டும் அனுபவமாக இருந்ததில்லை. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை வாசிக்கத் தொடங்கி ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயேவ்ஸ்கி மிகவும் நெருக்கமானவராகிவிட்டார். தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிகழும் மாயம் அது. ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது எந்த முயற்சியும் செய்யாமல் எவரோ டிக்டேட் செய்வதுபோல தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன. மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் மண்டிக்கிடக்கும் சபலங்களையும் சலனங்களையும் அழுக்குகளையும் மட்டுமல்லாமல் அன்பையும் காருண்யத்தையும் அளவற்ற மனித நேயத்தையும் அவரது எழுத்து வெளிச்சத்துக்கு இட்டுவந்துவிடும். அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் உருகி, உட்கலந்து, கசிந்து, கண்ணீர் மல்கி என்னையே தொலைத்துவிட்டிருக்கிறேன். கூடுவிட்டுக் கூடுபாய்வதுபோல தஸ்தயேவ்ஸ்கியே என்னுள் புகுந்துகொண்டு தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டுபோகிறாரோ என்ற மனமயக்கம்கூட எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எட்டு மாதங்களில் ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பின் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு என்னை ஆட்கொண்டு இயக்கியது அதுவே.
அதைத் தொடர்ந்து நீங்கள் மொழிபெயர்த்த ‘அசடன்’ நாவலும் பக்க அளவில் இன்னும் பெரியது. ஆனால், ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவல் மொழி சவாலானது இல்லையா?
‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப் போல ஒருமுகத்தன்மை கொண்டதல்ல ‘அசடன்’. கிட்டத்தட்ட 2000 பக்கங்களுடன் நான்கு பாகங்களாகப் பல்வேறு முடிச்சுகளுடனும் பலரின் உணர்வுப் போராட்டங்களுடனும் விரிந்துகொண்டுபோகும் நாவல் ‘அசடன்’. நாவலில் இடம்பெறும் பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் தில்லியில் இருக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழக பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவநிலையில் பல நாள் அலைந்துதிரிந்த அனுபவமும் அதிலுள்ள சிக்கலான பல முடிச்சுகளைத் தமிழ் மொழியில் அவிழ்க்க நான் கைக்கொண்ட முயற்சிகளும் என் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதவை. மிகப் பிரம்மாண்டமான ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ எனும் இரண்டு உலகப் பேரிலக்கியங்களை மொழிபெயர்த்ததைவிடவும் கடுமையான சவாலை முன்வைத்த ஆக்கம் ‘நிலவறைக் குறிப்புகள்’. தஸ்தயேவ்ஸ்கியின் பிற நாவல்கள்போல எண்ணற்ற கதைமாந்தர்களையோ, விறுவிறுப்பான கதைப்பின்னலையோ, மூலக்கதையோடு பிணைந்துவரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டிருக்காமல் எதிரும்புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி தன்னைத்தானே முரணிக்கொண்டும் பழித்துக்கொண்டும் ஓயாமல் உள்ளுலையும் மனங்களின் விசித்திரங்களை ஒரு தனிமனிதனின் குரலாக்கி முன்னிறுத்தியிருப்பார்.
உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன?
நான் பின்பற்றும் பாணி எனக்கே வியப்பூட்டுவது; விசித்திரமானதும்கூட. மொழிபெயர்க்கும் எண்ணத்தோடு தஸ்தயேவ்ஸ்கியின் எந்த நாவலை வாசிக்கத் தொடங்கினாலும் நான்கைந்து அத்தியாயங்கள் கடந்ததுமே மொழியாக்கத் தொடங்கிவிட வேண்டும் என்ற வேகம் ஆட்கொண்டுவிடும். முழு நாவலையும் வாசித்து முடிக்கும் வரை பொறுமை காக்க இயலாத உத்வேகம் அது. ஒரு படைப்பாளியின் பித்தேறிய மனநிலைக்கு நிகரானது. அதுவரை வாசித்து முடித்திருக்கும் பகுதியில் சிலவற்றை மொழிபெயர்ப்பேன். அடுத்து, நாவல் வாசிப்பைத் தொடர்ந்துகொண்டிருப்பேன். முழு வாசிப்பு, மொழிபெயர்ப்பு முடிந்ததும் பிறகு சரளம், சொற்கோவை, தொடரமைப்பு, ஆங்கில மொழியாக்கத்தோடு ஒப்பிடல் என செம்மையாக்கம் தொடரும். என் ஐந்து மொழியாக்கங்களிலும் பின்பற்றியது இந்த வழிமுறையைத்தான். என் உள்ளுணர்வு என்னைச் செலுத்திய பாதை அது.
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரே படைப்புக்கு வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் நடந்திருக்கின்றன. உங்கள் மொழிபெயர்ப்புக்காக யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்?
தஸ்தயேவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் மொழியாக்கமே நம்பகத்தன்மை வாய்ந்ததென்று பரிந்துரைக்கப்படுவதால் அவருடையதையே அடிப்படையாக வைத்துக்கொண்டேன். கூடுதல் தெளிவு தேவைப்படும் இடங்களில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம், வெர்ட்ஸ்வர்த் க்ளாஸிக்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவெர்சிடி ப்ரஸ், நியூயார்க் மாடர்ன் லைப்ரரி போன்ற முன்னணிப் பதிப்பகங்கள் வெளியிட்ட மொழியாக்கங்களும் எனக்கு உதவியிருக்கின்றன.
தஸ்தயேவ்ஸ்கியின் எந்தப் பாத்திரம் உங்களுக்கு நெருக்கமானது?
அப்படிப் பிரித்துச் சொல்ல என்னால் இயலவில்லை. அவரது ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பாத்திரமும் எனக்கு நெருக்கமானதே. ரஸ்கோல்நிகோவோடு ஒன்றிய என் உள்ளம், அசடன் மிஷ்கினின் மாசுமருவற்ற இயல்பின் மீது மாளாத நேசம் கொண்டது. நிலவறைக்குள் தன்னைத் தொலைத்து சுயவதை செய்துகொண்ட மனிதனுக்காகக் கசிந்தது. இரட்டையரில் வரும் கோல்யாட்கினின் பரிதவிப்பில் நெகிழ்ந்தது. மொழிபெயர்ப்பாளருக்கு நிகழும் இத்தகைய நெருக்கம் ஓர் அபேத நிலை. மூலத்துக்குப் பக்கத்தில் மொழியாக்கத்தைக் கொண்டுசேர்க்கத் தன்னிச்சையாய் அமைந்துவிடும் துணை அது.
தஸ்தயேவ்ஸ்கி நடந்துசென்ற வீதிகளை நீங்கள் நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?
பள்ளி நாட்களில் மாமல்லபுரம் சுற்றுலா சென்றபோது அங்கே சிவகாமியையும் ஆயனச் சிற்பியையும் தேடிய மனநிலையே மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கு சென்றபோதும் இருந்தது.
தஸ்தயேவ்ஸ்கி திடீரென நேரில் உங்கள் முன் தோன்றினால் அவரிடம் என்ன பேசுவீர்கள்?
குக்கிராமம் ஒன்றின் கடைக்கோடியில் தையல் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர் ஒருவர் ‘அசடன்’ நாவலைப் படித்துவிட்டு என்னிடம் மனமுருகிப் பேசியதையும், தமிழ் மொழிபெயர்ப்புகளின் வாசகர் ஒருவர் தன் மகனுக்கு மகிழ்நன் என்று தூய தமிழில் பெயர் வைத்துவிட்டு அதன் முன்னொட்டாக ஃபியதோர் என்று சேர்த்திருப்பதையும் தமிழ் வாசகர்கள் அவரிடம் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாக அவருடன் பகிர்ந்துகொள்வேன்.
புனைவாளராக அல்லாமல் மொழிபெயர்ப்பாளராக அடையாளம் காணப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்த நாற்பது ஆண்டுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாவலையும் எழுதியிருக்கிறேன். அதைக் காட்டிலும் தஸ்தயேவ்ஸ்கி என்ற மாமேதையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளம், மிகச் சிறந்த அங்கீகாரங்களைப் பெற்றுத்தந்திருப்பதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆயினும், என் தாயின் வா

https://tamil.thehindu.com/g…/literature/article25702325.ece

இந்த நாற்பது ஆண்டுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாவலையும் எழுதியிருக்கிறேன். அதைக் காட்டிலும் தஸ்தயேவ்ஸ்கி என்ற மாமேதையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளம், மிகச் சிறந்த அங்கீகாரங்களைப் பெற்றுத்தந்திருப்பதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆயினும்,
 என் தாயின் வாழ்க்கையைப் புனைவாக்கி ஒரு வாழ்நாள் தவம்போல நான் இயற்றிய ‘யாதுமாகி’ நாவல் எனக்களித்த மனநிறைவு அலாதியானது. தடைகள் நிறைந்த பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தைப் பற்றியபடி வென்ற என் தாய்க்கு மட்டுமல்லாமல் அவர் போன்ற எத்தனையோ பல ஆளுமைகளுக்கும் நாவல் வழி என்னால் எழுப்ப முடிந்த ஓர் எளிய நினைவுச்சின்னம் அது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....