தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான
எழுத்தாளர் ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால்
உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம்
ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இந்த விருது.
திருவனந்தபுரத்தைச்சேர்ந்த மூத்தஎழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு
இவ்விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, 2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’,கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கும்,
2012ஆம் ஆண்டுக்கான ’விருது’
கவிஞர் தேவதேவனுக்கும்,
2014ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ,நவீனகவிதை வெளியின் மூத்த கவிஞரான திரு ஞானக்கூத்தனுக்கும் 2015ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞரான திரு தேவதச்சன் அவர்களுக்குவழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞரும்,சிறுகதைப்படைப்பாளியுமான கல்யாண்ஜி என்னும்
திரு வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
மிகச்சரியாக இதே வேளையில் வண்ணதாசன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருதும் அறிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி...
25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கில் [ஆர் எஸ் புரம் கோவை] விழா நிகழ்கிறது.
கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும்.
விஷ்ணுபுரம் விருதைப் பெறும் வண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதோடு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,
'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு
அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.
பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்முகநூல்களிலும் வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்