துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.5.24

‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ நாவல் விமரிசனம்

 இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் - 18.05.24- என் ‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ நாவல் ( ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு) பற்றிய விமரிசனக் குறிப்பு.12.5.24

தேவந்தி- தமிழ் இந்து திசை ‘தொன்மம் தொட்ட கதைகள்’வரிசையில்...

 ‘தொன்மம் தொட்ட கதைகள்’ என்ற வரிசையில் தமிழ் இந்து திசை நாளிதழில் ஆய்வாளர் திரு சுப்பிரமணி ரமேஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரை வரிசையில் இன்று -12.05.24- இடம் பெற்றிருக்கும் சிறுகதை நான் எழுதி தில்லி வடக்கு வாசல் இதழில் (2007)வெளியான ‘ தேவந்தி’ - சிலப்பதிகார தேவந்தி கதையின் மறு உருவாக்கம்.விமரிசனத்தோடு கதையையும் வாசிக்க விரும்புவோருக்கான இணைப்பு.
2.5.24

‘ அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ - ‘ கவிதை உறவு’ பரிசு

 சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தில் ‘ கவிதை உறவு’ ( மனித நேய இலக்கியத் திங்கள் இதழ்) என் அண்மை நாவலாகிய ‘ அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்னும் படைப்பைப் பெண்ணியம்/ பெண் நலம் என்ற வகைப்பாட்டில் தேர்வு செய்திருக்கிறது. அமைப்பாளர்களுக்கும்,நடுவர்களுக்கும், செய்தியை என்னிடம் தெரிவித்த கவிஞர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி. நூலை வெளியிட்ட ஹெர் ஸ்டோரீஸுக்கும் நன்றி பல.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....