விஜயா வாசகர் வட்டம் சார்பில் இவ்வாண்டு -2022, திரு கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் நினைவாகப் புதிதாக நிறுவப்பட்ட மொழியாக்க விருது எனக்கும் கன்னட த்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் திரு நல்லதம்பி அவர்களுக்கும் 28/8/2022 அன்று அளிக்கப்பட்டது. விஜயா பதிப்பக நிறுவனர் திரு வேலாயுதம் அவர்கள் ஜூன் மாதமே இச்செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டினார். விருதை விடவும் உளப்பூர்வமான அந்தப்பாராட்டு என்னை மகிழ்வித்தது. திரு வேலாயுதம் அவர்களுக்கும் விஜயா வாசகர் வட்டத்தார்க்கும் என் நன்றி.