துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.6.20

கனலி - இணைய வழிக் கலந்துரையாடல்

கனலி இணைய இதழ் தொடங்கிய முதற்கட்டத்திலிருந்தே என்னோடு நட்பின் இனிமையோடு பழகி வரும் திரு விக்னேஸ்வரன், அவ்விதழில் என் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக்களும் வெளிவர வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.அவரது தூண்டுதலால் தஸ்தயெவ்ஸ்கி குறித்த கட்டுரை ஒன்றும்,செக்காவின் சிறுகதை மொழிபெயர்ப்பு ஒன்றும் கனலி இணைய இதழில் வெளிவந்திருக்கின்றன.தற்போது என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்த கலந்துரையாடலாக- ஒரு இணையக்கூடலை 21/6/20 ஞாயிறு மாலை 6 மணிக்கு கனலி கலை இலக்கிய தளம் ஏற்பாடு செய்திருக்கிறது.ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் அனைவரும் ஸூம்செயலி வழி நிகழ்வில் பங்கு பெறலாம்.

17.6.20

ஜெயந்தன்-84 (காணொளி)

எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் 84வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி ’சிந்தனைக்கூடல்’ நடத்திய இலக்கிய நிகழ்விற்காக அனுப்பிய காணொளி
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....