*இணையத்தில் எழுத்துக்களைப் பதிக்கத் தொடங்கி மிகச் சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று (வலைப்பூ தொடங்கியது நவ.2008இல்) மூன்றாம்ஆண்டில் அடி வைக்கும் தருணத்தில் இவ்வார நட்சத்திரப்பதிவராகத் தமிழ்மணம் என்னைத் தேர்வு செய்திருப்பதை இந்த வலைத் தளத்துக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.
31.10.10
28.10.10
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 6
பெண்ணிய வகைகள்;
பெண்ணியக் கோட்பாட்டின் காலப்போக்கிலான வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு
மிதவாதம்,
சமத்துவம்/மார்க்ஸியம்,
தீவிரம்
ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக (இன்னும் சில உட்பிரிவுகளாகவும் கூட)
பெண்ணியத் திறனாய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
இப் பாகுபாடுகள் அனைத்துமே பெண் எழுச்சியையும்,மறுமலர்ச்சியையும் இலக்காய்க் கொண்டவை என்றபோதும் அவற்றின் அணுகுமுறைகளில் சில மாறுபாடுகள் உண்டு.
27.10.10
ஒரு கடிதம்...
நாராயணன் கிருஷ்ணன் |
எனக்கு வந்த இந்தக் கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணி இப்பதிவில் அதை வெளியிட்டிருக்கிறேன்.
23.10.10
குற்றமும் தண்டனையும்-இரு எதிர்வினைகள்
புகழ்பெற்ற ரஷிய நாவலாசிரியர் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின்
‘குற்றமும் தண்டனையும்’,மற்றும் ‘இடியட்’(அசடன்-அச்சில்..)ஆகிய படைப்புக்களை நான் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது இவ் வலைப்பதிவைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் அறிந்ததே.
குற்றமும் தண்டனையும் நூல் சார்ந்ததாகக் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இரு வகையான எதிர்வினைகள் எனக்கு வந்து சேர்ந்தன.
‘குற்றமும் தண்டனையும்’,மற்றும் ‘இடியட்’(அசடன்-அச்சில்..)ஆகிய படைப்புக்களை நான் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது இவ் வலைப்பதிவைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் அறிந்ததே.
குற்றமும் தண்டனையும் நூல் சார்ந்ததாகக் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இரு வகையான எதிர்வினைகள் எனக்கு வந்து சேர்ந்தன.
21.10.10
புதுமைப்பித்தன் முன்மொழியும் ‘கற்பு’
’’கண்ணகி உருவில் வீர வணக்கம் செய்யப்பட்ட கற்பை மணிக்கொடி எழுத்தாளர்கள் கேள்விக்கு உட்படுத்தினர்’’
என்று மார்க்சீய விமரிசகரான திரு கேசவன் குறிப்பிடும் கருத்து , அக் காலகட்ட எழுத்தாளர்கள் வேறெவரையும் விட - தமிழ்ச் சிறுகதையின் பிதாமகராகப் போற்றப்பட்ட புதுமைப்பித்தனுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
17.10.10
வாசிப்பின் நாள்...
வாசிப்பின் நாளாகிய இன்று ...தற்செயலாக - முதன்முதலில் படிக்க வாய்த்த அருமையான ஆக்கம்...,.
’புத்தகம் பேசுது’,அக்.2010 இதழில் வெளிவந்துள்ள எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘’புத்தகம் படிப்பது எப்படி?’’என்ற அருமையான கட்டுரை.
’புத்தகம் பேசுது’,அக்.2010 இதழில் வெளிவந்துள்ள எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘’புத்தகம் படிப்பது எப்படி?’’என்ற அருமையான கட்டுரை.
9.10.10
காட்டுக்குள்ளே திருவிழா !
பணி நிறைவு பெற்றதிலிருந்து,கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் புது தில்லியில் மகள் மருமகனுடன் வாசம் !
கண்ணாடியில் என் இளம்பருவத்தைப் பார்த்துக் கொள்வது போல...என்னின் நீட்சியாய்..என்னைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பிரதி எடுத்த இளசுகளாய்க் காலைச் சுற்றிவரும் இரு பேரப்பிஞ்சுகள் !
புழுதி படிந்து புறாப்பறக்கும் புராதனக் கோட்டைகள் !
இலக்கிய இளைப்பாறலுக்குப் புத்தகங்கள்..,வடக்கு வாசல்..,மற்றும் கணினியின் வலைகள்!
கலாசார,ஆன்மிகத் தொடர்புகளுக்குத் தமிழ்ச்சங்கமும்,மனவளக் கலைமன்றமும்!
படிக்க எழுதத் தெரிந்திருந்தாலும் பேச வராமல் அடம் பிடிக்கும் ஹிந்தி !
ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ தெற்கு நோக்கிய பயணம்!
முப்பதாண்டுக் காலம் ஒன்றிக் கலந்து, நட்பு வட்டத்திலிருந்த ஒவ்வொருவரைச் சந்திப்பதற்கும் முப்பது மணித் துளிகளை மட்டுமே
ஒதுக்கிவிட்டு....அடுத்த மதுரைப் பயணம் குறித்த மாளாத ஏக்கத்துடன் தில்லி திரும்பியாக வேண்டிய அவதி !
வழக்கமான இந்த வாழ்க்கை நியதியிலிருந்து சற்றே விலகி...எதிர்பாராத இனிமையான ஒரு மாற்றத்தை எனக்குப் பரிசாக அளிக்க விரும்பிய என் மகள் இவ்வாண்டு மார்ச் மாத வாக்கில் இவ்வாறு அறிவித்தாள்...
7.10.10
4.10.10
வெட்டுப் புலியின் வீச்சுக்கள்
நாவலாசிரியர் தமிழ்மகன்,மற்றும் இசை விமரிசகரும்,குடும்பநண்பருமான சிவகுமார் ஆகியோருடன் நான்.. |
குறிப்பிட்ட அந்தக் கால கட்டத்தில் தங்கள் பாலிய மற்றும் பதின் பருவங்களைக் கடந்து வந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்த பலரின் நினைவுச் சேமிப்பிலும் இதன் சுவடுகளைக் காண முடியும்
2.10.10
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 5
உலக அரங்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த பெண்ணியக் கருத்துக்களின் தாக்கங்களை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிலும் காண முடிந்தாலும்,இங்கு நிகழ்ந்த சமூக மாற்றங்கள் முழுவதுமே அயலகப் பாதிப்பினால் நேர்ந்தவை என்று கூறி விட முடியாது.உரிமை எழுச்சிக்கான தூண்டுதலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)