துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

அறிமுகம்

எம்.ஏ.சுசீலா 
 கல்வித் தகுதி;
B.Sc.,Chem.-பள்ளத்தூர்,சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி
M.A.Tamil-காரைக்குடி அழகப்பா கல்லூரி,(வ.சு.ப.மாணிக்கனாரின் மாணவி)
தமிழ்இலக்கியத்தில் முனைவர்(Ph.d)பட்டம்
(பணிக்காலத்திலேயேபகுதிநேரப்படிப்பாக) 
(தலைப்பு;’காலப்போக்கில் தமிழ்ச்சமூக நாவல்களில் பெண்மைச்சித்தரிப்பு’)’
Diploma in Linguistics(பட்டயப் படிப்பு- மொழியியல்  )-மாலைக் கல்லூரி
Certificate in Sanskrit(சான்றிதழ்-சமஸ்கிருதம்)-மாலைக் கல்லூரி
Certificate in Malayalam(சான்றிதழ்-மலையாளம்  )-மாலைக்கல்லூரி
 
எம்.ஏ.முதுகலைப்பட்டம்-‘யோகமும்,மனித மாண்பும்’-2009-2011-
[பாரதியார்பல்கலை தொலைநிலைக்கல்வித் துறை,ஆழியாறு அறிவுத் திருக் கோயிலுடன் இணைந்து நடத்துவது.]
 
பணி;
மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி. 
36 ஆண்டுகள்(1970-2006);
 (இடையே இரண்டு ஆண்டுகள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும்.)
2006 ஜூனில் பணி நிறைவு பெற்றபின்,தற்போதைய தற்காலிக வாசம்,புதுதில்லியில்.
 
படைப்புக்கள்;
சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர்.  
முதல் சிறுகதையே "அமரர் கல்கி நினைவுசிறுகதைப்போட்டி"யில் முதல் பரிசுபெற்றது(1979).
 
எழுபதுக்கும்  மேற்பட்ட சிறுகதைகள்,கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,அமுத சுரபி,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன;
அவற்றுள் சில,மலையாளம்,கன்னடம் முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களில் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
 
"கண் திறந்திட வேண்டும்"என்னும் சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்'தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.
நூல் மதிப்புரைகள்,சமூக அக்கறையுள்ள கட்டுரைகள்,ஒரு சில கவிதைகள் ஆகியனவும் இதழ்களில் வெளிவந்துள்ளன.சொற்பொழிவு;
 இலக்கிய,சமூகச் செய்திகளை நீர்த்துப் போகச் செய்து விடாத சொற்பொழிவுகள் ஆற்றுவதில் ஆர்வம் உண்டு.

பொதுவான சமூக அக்கறை கொண்ட கூட்டங்கள் ,

பல்கலைக் கழகங்கள்-மதுரை காமராசர்,நெல்லை மனோன்மணியம்சுந்தரனார்,அன்னை தெரசாமகளிர் பல்கலை,காந்தி கிராம கிராமீயப்பல்கலை.(அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் உட்பட)

தமிழ்நாட்டில் பல கல்லூரிகள்,

இலக்கிய மேடைகள் ஆகியவற்றில் சொற்பொழிவுகள் ஆற்றியமை,

150 க்கும் மேற்பட்ட வானொலிச் சொற்பொழிவுகள்

பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆய்வுக்கட்டுரைகளை அளித்துள்ளமை

நாடகம்;
திருச்சூர் நாடகப் பள்ளியில் நாடகப் பட்டறைப் பயிற்சி(திரு ராமானுஜம் அவர்களிடம்)
கல்லூரியில் பல நாடகங்களை எழுதி இயக்கியமை
மதுரை நிஜ நாடகக் குழுவினரின்’இருள் யுகம்’நாடகத்தில் பங்கேற்று நடிப்பு.

புதிய ஆர்வங்கள்-பணிஓய்வுக்குப் பின்;
1.கணினி; கணினியில் தமிழ் எழுதப் பழகி 2008 நவ. முதல் வலைப்பூ எழுதி வருதல்
http://www.masusila.blogspot.com
2.யோகப்பயிற்சி;புது தில்லி மனவளக்கலை (வேதாத்திரிமகரிஷிகள்) அமைப்பில் இணைந்து யோகம் பயிலுதல்

என்றுமுள்ள ஆர்வம்;
வாசிப்பதும்,எழுதுவதும்
பெண்ணுக்காகக் குரல் கொடுப்பதும்.

நிறைவுறாத ஆர்வம்
;
 குறும்படம் எடுப்பது

தொடர்புக்கு;
susila27@gmail.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....