துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.1.15

சென்னையில் ‘சங்கவை’

11.1.2015 மாலை 6மணி அளவில் பேராசிரியை ஜெயசாந்தி அவர்களின்
                                                                       ’சங்கவை’
நாவல்  வெளியீட்டு விழா நிகழவிருக்கிறது.

நாள்; 11/1/2015
இடம்;ஜீவன் ஜோதி சென்டர்[இக்சா]-எழும்பூர் மியூசியம் எதிரில்
நேரம்;மாலை 6 மணி

எழுத்தாளர் இமையம்,டாக்டர் சேது குமணன்,பேரா சரசுவதி,ஓவியர் செந்தில் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கும் இவ்வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்று சங்கவை நாவல் குறித்த மதிப்புரையையும் வாழ்த்துரையையும் ஆற்ற இருக்கிறேன்.

சென்னை வாழ் இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். 

20.2.14

உ வே சா அறக்கட்டளைப்பொழிவு-மதுரை

தமிழ் படித்தால் மதிப்பில்லை என்னும் பொய்யான பிம்பங்களைச் சென்ற நூற்றாண்டின் காலகட்டத்திலேயே தகர்த்து....தமிழால் தன்னைத்தகுதிப்படுத்திக் கொண்டு தமிழையும் தகுதிப்படுத்திய பெருமகனார் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாத ஐயர்.

தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த காதல் சொல்லுக்கடங்காதது.

தமிழ் அவரது தாகம் தணிக்கும் நன்னீர்;
தமிழ் அவரது பசியாற்றும் இனிய அமுது....
தமிழையும் தமிழ் ஆராய்ச்சியையும் தவிரப்பிற சிந்தனை அற்று வாழ்ந்த அவர் தொன்மைத் தமிழிலக்கியப்பதிப்பின் முன்னத்தி ஏர் .

பல காவதம்  நடந்து - பல நாள் பசித்திருந்தும் தனித்திருந்தும் தூக்கம் தொலைத்தவராய்த் தமிழ்ப்பசி ஆற்றும் ஒரே நோக்குடன் காலமும் கரையானும் அனலும் புனலும் அழித்து விட்ட-அழிக்கக்காத்திருந்த சுவடிகளைத் தேடிச் சீரமைத்து ஒப்புநோக்கித் திருத்தம் செய்து சிந்தாமணியையும் பத்துப்பாட்டையும் ,எட்டுத்தொகையையும்,சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையையும் மணிமேகலையையும் உரைக்குறிப்புக்களோடும், ஆசிரியர் வரலாற்றோடும் இன்னும் பல குறிப்புக்களோடும் அவர் அன்று பதிப்பிக்காமல் போயிருந்தால் இன்று செம்மொழித் தகுதி தமிழுக்குக்கிடைத்திருக்குமா என்பது சிந்தனைக்குரியது.
ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
     எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
     பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
     நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
     கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!
- இரா.இராகவையங்கார்

வ வே சு [அய்யர்] வுக்கும் உ வே சாவுக்கும் கூட வேறுபாடு தெரியாத நம் போலித் தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையிலே உ வே சா தன் பதிப்புப்பணிகளால்..
இயல்பான-மிகைகள் அற்ற - சரளமான தமிழ் உரைநடைக்கு அடிகோலிய தன் வாழ்க்கைவரலாற்று நூலான  ‘என் சரித்திரத்தால்’ நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

தன் தமிழ்க்காதல் பற்றி உ வே சா இப்படிச்சொல்கிறார்.....
’’கல்யாணத்திலும், பொருள் வருவாயிலும், ஊர்ப்
பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோற்றவில்லை. எனக்கு
ஒன்றுதான் நாட்டம். தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப்
பசிக்கு உணவு; எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை
அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம்,
நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி
உண்டாகின்றன. .அன்றும் சரி, இன்றும்சரி, இந்த நிலைமை மாறவே இல்லை...’’

உ வே சாவின் 160ஆம் பிறந்த நாளை ஒட்டி 
மதுரையிலுள்ள மதுரைக்கல்லூரியில்
‘’ உ வே சா - வாழ்வும் பணியும் ’’ 
என்னும் தலைப்பில் 
நான் நாளை [21/2/2014 ] காலை 11 மணி அளவில் அறக்கட்டளைச்சொற்பொழிவாற்றவிருக்கிறேன்.

அழைப்பு இத்துடன்...

மதுரை வாழ் தமிழ் ஆர்வலர் வருக என அன்புடன் அழைக்கிறேன்.





14.1.14

தாயகம்கடந்த தமிழ் -அனைத்துலகமாநாடு கோவையில்...


தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில் ஓர் அனைத்துலக மாநாடு கோவையில், ஜனவரி 20, 21, 22 ஆகிய நாள்களில் நிகழவிருக்கிறது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டின் துவக்க விழா காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் NGP கலை அறிவியல் கல்லூரியில் 20ம் தேதி மாலையும் கருத்தரங்க அமர்வுகள் 21. 22 ஆகிய நாள்களில் KMCH மருத்துவ மனையில் உள்ள கருத்தரங்க அறையிலும் நடைபெறவுள்ளன.
[எழுத்தாளர் மாலன் அவர்களிடமிருந்து வந்திருக்கும் அழைப்பும் செய்தியும்....]





2.4.13

தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்

தில்லி தமிழ்ச்சங்கம் ஏப்ரல் 6ஆம் நாள்[2013] மாலை வழங்கவிருக்கும் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகளுக்குரியவர்களில்  நானும் ஒருத்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.சிறுகதைத் துறைக்கான ‘அமரர் சுஜாதா விருது’ எனக்கு அளிக்கப்படவிருக்கிறது.

தில்லி தமிழ்ச்சங்கத்தாருக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் மூத்த எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.

எழுத்துத் துறையில் முனைப்போடும்,மேலும் உற்சாகத்தோடும் இயங்க இவ்வாறான விருதுகள் புத்துணர்வு நல்கும் என்ற நம்பிக்கையோடு அதனை ஏற்கவிருக்கிறேன்.

தினமணி செய்தி-கீழே...
http://dinamani.com/edition_new_delhi/article1526394.eceபுது தில்லி,
First Published : 02 April 2013 12:59 AM IST
தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது',பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.

9.11.12

தில்லிகை-நவம்பர் நிகழ்வு

தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இலக்கியச் சந்திப்பு: 2012/9
பயணம்

தமிழ் இலக்கியத்தில் பயணம் 
அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்

பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல்
கயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்

கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் 
எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி  



10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


12.10.12

தில்லிகை-அக்டோபர் நிகழ்வு



                                                  தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8

பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.

வசனங்களில் உருவான நாயகத்துவம்
முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.

24.7.12

கேரளப்பயணம்-ஆனகட்டி,மஞ்சூர்-2

மேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் நீந்திச்செல்லும் எழில்...
ஜூன் மாத மத்தியில் கேரளப் பயணத்தின்போது தமிழக-கேரள எல்லையிலுள்ள ஆனகட்டி மற்றும் மஞ்சூர் அருகில் நான் கண்ட இயற்கை எழிலின் சில துளிகளைக் காமராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்.

இந்தப்பயணத்தில் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது...ஓய்வு ஒழிவின்றி வானில் ஊர்ந்து கொண்டும் மலை அடுக்குகளில் தவழ்ந்து கொண்டும் இருந்த மேகங்கள்..... மேகங்கள்....மேகங்கள் மட்டும்தான்.

’’மஞ்சு துஞ்சும் மலை’’ எனப் படித்ததெல்லாம் கண்ணில் காட்சியான தருணத்தில் திகட்டாத அந்தப் பேரனுபவத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் கண்ணுக்கும் மனதுக்கும் அலுக்கவில்லை....
[மரபான பழந்தமிழில் மஞ்சு என்பது மேகம்..மஞ்சூர் என்பதற்கும் பெயர்க்காரணம் அதுவாகவே இருக்கக்கூடும்.]

விண்ணில் நிகழும் மேக ஊர்வலம்  எதுவரை எங்கே எதை நோக்கி நீண்டு செல்கிறது என அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சுகமான பிள்ளை விளையாட்டுத்தான்..ஆனாலும்  சொல்லில் விளங்காத..சொல்லுக்கடங்காத புத்துணர்வளிக்கும் பேரானந்தப் பரவசம் அது..

முதிராத - முற்றாத இளம் மேகத்தை ’முகில் குழவி’[மேகக்குழந்தை]என்ற அற்புதமான வார்த்தையால் வடித்து வைத்திருக்கிறான் சங்கக் கவிஞன்.கவிதையில் கிடைத்த அதன் தரிசனம்...நேரில் கிடைத்த கிளர்ச்சியில் நெகிழ்ந்து கரைந்து நின்றேன்.....






கேரளப்பலவுடன்....
கிளைகளுக்கு நடுவே தன்னைப் பொதித்துக் கொண்டிருக்கும் சிறு பறவை....
சலசலக்கும் சிற்றோடை...


7.6.12

தில்லிகை-ஜூன் நிகழ்வு


புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூன் மாதக் கூட்டம் 9 ஜூன் 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் ; தில்லியும் தமிழ் இலக்கியமும்

24.3.12

’குற்றமும் தண்டனையும்’-இரண்டாம் பதிப்பு

2007ஆம் ஆண்டின் இறுதியில் என் மொழியாக்கத்தில் வெளிவந்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவரவிருக்கிறது என்னும் நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதல் பதிப்பை வெளியிட்ட மதுரை பாரதி புத்தக நிலையத்தாரே இரண்டாம் பதிப்பையும் வெளியிடவிருக்கிறார்கள்.
அண்மையில் என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயெவ்ஸ்கியின்அசடன்மற்றும்குற்றமும் தண்டனையும்’ ஆகிய இரு மொழியாக்க நூல்களையும் பதிப்பகத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு,உடுமலை.காம் முதலிய விற்பனை நிலையங்களின் வழி, ஆன்லைனில் கிடைக்கவும் ஆவன செய்யப்படவிருக்கிறது எனப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.


நேரில்,அஞ்சலில்;பாரதி புத்தக நிலையம்,மதுரை
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001


 bharathibooks@yahoo.co.in



8.3.12

’தில்லிகை’இலக்கிய வட்டம்

புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால்‘தில்லிகை’என்னும் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.திரு மா. அண்ணாதுரை, திரு விஜய் ராஜ்மோகன், திருமதி சாய் அமுதா தேவி,திரு எம்.ஸ்ரீதரன்[சீன இலக்கியத்தின் நேரடித்தமிழ் மொழிபெயர்ப்பாக-’வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’என்னும் தலைப்பில் அண்மையில் கவித்தொகை நூலை வெளியிட்டவர்]ஆகியோர் இதனை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் முனைந்து செயலாற்றி வருகின்றனர்.


தில்லிகை’யின் முதல் இலக்கியக் கூட்டமும் தொடர்ந்து கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை 10/3/12-பிற்பகல் மூன்று மணியளவில் தில்லி தமிழ்ச்சங்க பாரதி அரங்கில் மதுரையை மையப்பொருளாகக் கொண்டு நிகழவிருக்கிறது.நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றுச்’சிலப்பதிகாரத்தில் மதுரை’என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன்.தில்லி வாழ் தமிழ் அன்பர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கூட்டத்தில்கலந்து கொள்ள வேண்டுமென ’தில்லிகை’யின் சார்பாக நானும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் தொடர்புக்கு..


13.12.11

’அசட’னின் வருகை...

அக்டோபர் மாதமே வரக் கூடுமென எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும் பதிப்புப் பணியில் நேரிட்ட ஒரு சில நடைமுறைச் சிக்கல்களால் சற்றுத் தாமதமான ‘அசட’னின் வெளியீடு இப்போது நிகழ்ந்து நூலும் வெளிவந்து விட்டது. நடப்பாண்டுக்குள் அந்த வெளியீடு சாத்தியமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

மதுரை பாரதி புத்தக நிலையம் வெளிட்டிருக்கும் இந்த மொழியாக்க நாவலை வாங்க எண்ணுவோரும்,முன்னமே முன் பதிவு செய்து கொண்டவர்களும் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
"durai pandi pandi" <bharathibooks@yahoo.co.in>

பதிப்பாளரிடமிருந்து நூலின் பிரதிகள் போதிய அளவு அனுப்பி வைக்கப்பட்டபின்பு,ஆன்லைன் வழி உடுமலை.காமில் பதிவு செய்து கொண்டவர்களுக்குப் பிரதிகள் கிடைக்கும்.

நூலின் பிரதிகள் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன்,மற்றும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும்  அவர்கள் மின்னஞ்சல் வழி எனக்கு அளித்த வாழ்த்துச் செய்திகள்...

திரு ஜெயமோகன்;
அன்புள்ள சுசீலா
அசடன் நாவல் நேற்று கூரியரில் வந்தது. சிறப்பான கட்டமைப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. 
வாழ்த்துக்கள்

திரு எஸ்.ராமகிருஷ்ணன்
அன்பு சுசீலா அம்மா அவர்களுக்கு
அசடன் நூல் கிடைத்தது, மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, உங்களின் அயராத மொழியாக்கப்பணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
மிக்க அன்புடன்
எஸ்ரா


23.9.11

’எட்டுத் திக்கும்’-கலந்துரையாடல்

திருப்பூர் வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நண்பர் திரு வெயிலான் அவர்களிடமிருந்து வந்துள்ள நிகழ்ச்சி அறிவிப்புக் கடிதம்..
வணக்கம்!
25 செப்டம்பர் 2011 அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை திருப்பூர் அரோமா உணவக வளாகத்தில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நண்பர்கள் அனைவரின் வருகையையும், வாழ்த்துகளையும் அன்போடு எதிர்நோக்கும்...........
நண்பர்கள் - சேர்தளம், திருப்பூர்.
s.raa.jpg

6.9.11

இலக்கிய,சூழியல் ஆர்வலர்களின் பார்வைக்கு....




சம காலத்தில் வாழ்ந்து மறைந்த வன உயிர் மருத்துவரும், 
தனக்குக் கிடைக்கும் பணம்,புகழ்,விருது என எதிலும் நாட்டம் செலுத்தாமல் கானுயிர்களின் நலனையும், விலங்குகளின் பாதுகாப்பையுமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த உன்னத மனிதருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதை யானை டாக்டர்.

அவரது வலைத் தளத்தில் வெளி வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்த அற்புதமான அந்தச் சிறுகதை,சூழலியல் குறித்த விழிப்புணர்வை அழுத்தமாகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், அது பலரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டநண்பர்களால் ஒரு சிறு பிரசுரமாக- இலவச வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 


(தனிச் சிறுகதை ஒன்று இவ்வாறு சிறு பிரசுரமாகும் நிகழ்வு தமிழ்ச் சூழலில் அரிதான சில கணங்களில் நிகழ்வதுண்டு.
எழுத்தாளரும்,பள்ளி ஆசிரியருமான இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா’ என்னும் சிறுகதை முன்பு இவ்வாறு சிறு பிரசுரமாக்கப்பட்டுப் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்திருக்கிறது.ஆசிரிய-மாணவ உறவின் கோளாறு ஒரு ஏழை மாணவியின் எதிர்காலத்தைப் பலியாக்கியதைக் கூறிய நெகிழ்வான கதை அது.குறும்படமாகவும் வந்திருக்கும் ‘ஆயிஷா’குறித்த பதிவை இந்த வலைத் தளத்திலுள்ள கசங்கும் ரோஜாக்கள் என்னும் இணைப்பில் காணலாம்)


கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனக்காப்பகங்கள் எனப் பல தரப்பினருக்கும் யானை டாக்டர் கதையின் பிரதி அளிக்கப்படவேண்டுமென்பது நண்பர்களின் விழைவு என்பதால் அத்தகைய இடங்களுக்கு நூலைக் கொண்டு சேர்க்கக் கூடிய முனைப்புக் கொண்ட எவரும் கீழ்க்காணும் தொலைபேசியிலோ மின் அஞ்சலிலோ தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆர்வமாக உள்ளது.
94421 10123 (தொலைபேசி), 
vishnupuram.vattam@gmail.com 
http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/

புது தில்லியில் இருப்பவர்கள் எனது மின் அஞ்சலில் 
தொடர்பு கொண்டு நூலைப் பெற்றுக் கொள்ளலாம்;
தில்லி சார்ந்த - தமிழறிந்த இலக்கிய,சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும்,களப் பணியாளர்களுக்கும் நூலை அளிக்கலாம். 
susila27@gmail.com

பி.கு;
ஒரு மின்னஞ்சலில் தகவல் தெரிவித்துவிட்டு  யார் வேண்டுமானாலும் இந்தக் கதையை சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் என்னும் திறந்த காப்புரிமையும்-open copy right-இந்நூலைப் பொறுத்தவரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இணைப்புக்கள்;

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய விக்கி பீடியா குறிப்பு..



டாக்டர் கே

இணையத்தில் யானை டாக்டர் தமிழ்ச் சிறுகதை மூலம்;
Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433
Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439


யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்;
http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm


18.7.11

வலைச் சரத்தில்....

இலக்கியத் தமிழ் என்னும் தலைப்பில் ’வலைச்சர’த்துக்காகப் பேராசிரியர் இரா.குணசீலன் அவர்கள் எழுதியுள்ள பதிவில் இத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.
திரு குணசீலனுக்கு நன்றி...

4.7.11

நூல் வெளியீடுகள்

தஸ்தயெவ்ஸ்கி எழுதிய இடியட் நாவல் அசடன் என்ற பெயரில் என்னால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு அச்சாகிக் கொண்டிருக்கிறது.
(இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரவிருக்கும் அந்நூல் 700க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது)
மதுரை பாரதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் இந்நூலுக்கு
அசடனும் ஞானியும்’
என்ற தனது அற்புதமான ஆய்வுரையை முன்னுரையாக அளித்திருக்கிறார் எழுத்தாளர் திரு ஜெயமோகன்அவர்கள்.
4/7/11 தேதியிட்டு,அவரது இணைய தளத்திலும் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.
http://www.jeyamohan.in/?p=15045
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

1979 ஆம் ஆண்டு தொடங்கி நான் அவ்வப்போது எழுதி,இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் ஒரு சிலவற்றை (36) மட்டும் தேர்ந்து தொகுத்து,
தேவந்தி
என்னும் தலைப்பில்,புது தில்லி ’வடக்கு வாசல்’ பதிப்பகம் ஜூலை 29ஆம் நாள் வெளியிடவிருக்கிறது.
‘வடக்கு வாசல்’இதழ் நடத்தவிருக்கும் இசை விழாவின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் எனது நூலையும்,
வடக்கு வாசல் வெளியீடாக வரவிருக்கும் வேறு நான்கு நூல்களையும் வெளியிடவிருக்கிறார்.
எனது சிறுகதைத் தொகுப்புக்குத் தன் முன்னுரையால் எழுத்தாளர் திரு பாவண்ணன் அவர்களும்,தன் பதிப்புரையால் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களும் அணி செய்திருக்கின்றனர்.

திரு ஜெயமோகன்,பாவண்ணன்,பென்னேஸ்வரன் ஆகியோர்க்கு என் நன்றி!



30.5.11

தில்லியிலிருந்து ’தினமணி..’

’தினமணி’ நாளிதழ் ஜூன் மாதத்திலிருந்து புதுதில்லிப் பதிப்பாகவும் வெளிவரவிருக்கிறது.
தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் போற்றவேண்டிய நற்செய்தி இது.
ஜூன் 3ஆம் தேதி நிகழவிருக்கும் வெளியீட்டு விழாவில்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு குரேஷி அவர்கள் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பிக்கவிருக்கிறார்.


பி.கு;
தில்லிப் பதிப்பை ஒட்டி வெளிவரவிருக்கும் தினமணி-சிறப்பு மலரில்
‘வைகையிலிருந்து யமுனைக்கு’என்ற என் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது.
மலர் வெளியான பின் என் வலைத் தளத்திலும் அது வெளியாகும்.

6.4.11

இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும்,  கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,
நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்ய ...
விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00
ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
முன் பதிவுத் தொகையை
‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.
நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.
எண்; 1013256227
இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..
உடுமலை.காம்.


காண்க இணைப்பு;

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்



14.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)


இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம்
 16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில் 

26.1.11

தினமணியில்...

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றபோது வெளியான தினமணி நாளிதழில் -14/01/11-
‘உங்களிடம் இருக்கிறதா?’என்ற தலைப்புடன்
என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயேவ்ஸ்கியின்
‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய குறிப்பு வெளியாகி இருப்பது தற்போதுதான் என் கவனத்துக்கு வந்தது.
(இங்கே புது தில்லியில் தினமணி கிடைப்பது மிக அபூர்வம்)
வாசகர்களுடனான பகிர்வுக்காக இங்கே அச் செய்தித் தாள் பக்கம்

..
பி.கு; குறிப்பிட்ட செய்தித் துணுக்கு பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்ட புது தில்லி அகில இந்திய வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
திரு குருமூர்த்தி அவர்களுக்கும், நான் அது குறித்து விசாரித்த மறுநாளே மின் அஞ்சல் வழி அச் செய்திப் பக்கத்தின் கோப்பை எனக்கு அனுப்பி உதவிய அன்பிற்குரிய எழுத்தாளநண்பர்-தினமணி உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்களுக்கும் என் நன்றி.

16.1.11

நூல் வெளியீடு-ஆய்வுரை

’யுகமாயினி’ சித்தன் அனுப்பி வைத்துள்ள நூல் வெளியீடு ,ஆய்வுரை குறித்த அறிவிப்பு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....