புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால்‘தில்லிகை’என்னும் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.திரு மா. அண்ணாதுரை, திரு விஜய் ராஜ்மோகன், திருமதி சாய் அமுதா தேவி,திரு எம்.ஸ்ரீதரன்[சீன இலக்கியத்தின் நேரடித்தமிழ் மொழிபெயர்ப்பாக-’வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’என்னும் தலைப்பில் அண்மையில் கவித்தொகை நூலை வெளியிட்டவர்]ஆகியோர் இதனை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் முனைந்து செயலாற்றி வருகின்றனர்.
’தில்லிகை’யின் முதல் இலக்கியக் கூட்டமும் தொடர்ந்து கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை 10/3/12-பிற்பகல் மூன்று மணியளவில் தில்லி தமிழ்ச்சங்க பாரதி அரங்கில் மதுரையை மையப்பொருளாகக் கொண்டு நிகழவிருக்கிறது.நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றுச்’சிலப்பதிகாரத்தில் மதுரை’என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன்.தில்லி வாழ் தமிழ் அன்பர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கூட்டத்தில்கலந்து கொள்ள வேண்டுமென ’தில்லிகை’யின் சார்பாக நானும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் தொடர்புக்கு..
5 கருத்துகள் :
வாழ்த்துக்கள் மேடம் !!!
2008-8
2009-84
2010-101
2011-106
2012-106 பதிவுகளுக்கு மேல் நீங்கள் எழத மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் மேடம் !!!
மதுரையை குறித்து கலந்துரையாடலா? கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மதுரை குறித்த நிகழ்வை பதிவு செய்யுங்கள். எங்களைப் போல தொலைவில் வாழும் மதுரை நெஞ்சங்கள் தங்கள் பதிவுமூலம் அறிந்து கொள்கிறோம். மதுரை மல்லிகை போல தில்லிகை இலக்கிய வட்டம் சிறக்க வாழ்த்துகள்.பகிர்விற்கு நன்றி. தெற்கு கோபுரத்தில் உள்ள படம்தானே அழைப்பிதழில் உள்ளது?
தில்லிகை மென்மேலும் வளர, பல நல்ல விதைகளை சமுதாயத்தில் விதைக்க, எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் அம்மா.
கருத்துரையிடுக