துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.3.12

காவல் கோட்டம்-வலைத்தளம்

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற திரு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல் குறித்த தகவல்களுக்காகவே -விழாக்கள்,நேர்காணல்கள்,விமரிசனங்கள்,பாராட்டுக்கள் என அனைத்தையும் உள்ளடக்குவதாக.ஒரு தனித் தளம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
http://www.kaavalkottam.com 
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவலுக்கு வந்த பாராட்டுக்களும் விமரிசனங்களும் நாவலை விடவும் நீண்டு சென்றுகொண்டே இருப்பதால்..இத்தகைய ஒரு தளம் கட்டாயம் தேவைதான்.
தேவையற்ற காழ்ப்புக்களைத் தவிர்த்தபடி..ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் வகையில் இத் தளம் செயல்பட வேண்டுமென்பதே நடுநிலை இலக்கிய வரலாற்று ஆர்வலர்களின் விழைவாக இருக்க இயலும்.
சாகித்திய அகாதமி பரிசு பரிசு பெற்றபோது..


பி.கு;சு.வெங்கடேசனுக்கு இன்று பிறந்த நாள்.
                                               வாழ்த்துக்கள் வெங்கடேசன்...


3 கருத்துகள் :

மா.சரவணகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள் வெங்கடேசன்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காவல்கோட்டத்தின் நாயகனுக்கு வாழ்த்துகள். காவல்கோட்டம் குறித்த தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல. நான் காவல்கோட்டம் குறித்து இப்பொழுதுதான் பதிவெழுதிக்கொண்டிருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு தொகுப்பு ! நன்றி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....