துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.4.19

goodreads.com இல் குற்றமும் தண்டனையும்


https://www.goodreads.com/review/show/2157576263

Rajesh Arumugam's Reviews > குற்றமும் தண்டனையும் [Crime and Punishment]

 
by 
5208411
's review 

it was amazing
bookshelves: russian-literatureclassical-literaturelife-time-reads,philosophy

crime and Punishment - one of the best piece in the literature. feeling so great after read this. i am so glad that I read the (tamil) translated version (by ma. susila) of this book. MA susila's language keeps the reader intrigued to the story . never makes us feel that we are reading an alienated story . i strongly feel that I didn't lose any or i didn't lose much in translation . highly recommended

5.4.19

நிலவறைக்குறிப்புக்கள் -ஓர் எதிர்வினைக்கட்டுரை

குற்றமும் தண்டனையும்,மற்றும் அசடனுக்குப் பல எதிர்வினைகள் வந்தன.
ஆனால் நிலவறைக்குறிப்புக்கள்  மொழிபெயர்ப்பு வெளிவந்து ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அதன் சரியான வாசகரை எட்டவில்லையே..அதை மொழிபெயர்த்த பயன் இன்னும் கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம் இருந்தது.காரணம் இந்தநாவல் பிறவற்றைவிட அளவில் சிறியதென்றாலும் சிக்கலானது,ஆழமானது.
கதை ஓட்டம் அதிகமற்றது.

இதை ஆழ்ந்து வாசித்து நீண்ட கட்டுரை ஒன்றையும் எழுத முனைந்திருக்கும்  பிரசன்னா பெங்களூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் .சிறு கதைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளில் கவனம் செலுத்துபவர். அவரது ஆர்வத்துக்கு என் கை கூப்பு. 
என் பணிகளை இன்னும் உத்வேகப்படுத்த இந்த எதிர்வினைகள் பயன்படும்.

அவர் எனக்கு எழுதியிருக்கும் மின் அஞ்சலையும் கட்டுரையயும் இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
வணக்கம் சுசீலா மேடம்,
என் பெயர் பிரசன்னா. பெங்களூரில் வசிக்கிறேன். திருச்சி சொந்த ஊர். 'நிலவறைக் குறிப்புகள்' என்ற தங்களுடைய மொழிபெயர்ப்பு புத்தகத்தை கடந்த விஷ்ணுபுரம் விழாவில் வாங்கி வந்து ஜனவரி மாதம் வாசித்தேன். எந்த வித மிகையுமின்றி கூறவேண்டுமானால், மன அலைச்சலுக்கும், ஒரு நிலையில்லாமைக்கும் தள்ளப்பட்டேன். சில சமயங்களில் ஏன் இந்த புத்தகத்தை வாசித்து தொலைத்தேன் என்றும் தோன்றியது. இந்த புதினத்தை பற்றி எழுதாமல் இதன் பிடியிலிருந்து விடுபட முடியாது என்றெண்ணி ஒரு நீண்ட கட்டுரை/தன்னுரையாடலை எழுதி முடித்தேன். அந்த கட்டுரை என்ற Bengaluru Review தளத்தில் வெளிவந்தது (https://bengalurureview.com/2019/03/07/dostoevsky-notes-from-underground/). இந்த கட்டுரையை மேலும் சில திருத்தங்களோடு இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து பார்க்கவும்.
தங்களின் மொழிபெயர்ப்பிற்காக ஆயிரம் நன்றிகள் :) அசடன் மற்றும் குற்றமும் தண்டனையும் வாசிக்க இன்னும் மனநிலை கிட்டவில்லை. ஆனால் அடுத்த புதினத்திற்குள் சிக்கி தவிக்க மனம் ஏங்குவதையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான நேரம் வரும்போது, அதனுள் நுழைந்து மீண்டும் இது போன்ற ஓர் அலைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கை பார்வை மாறும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் தாஸ்தயாவ்ஸ்கியின் எழுத்தை படிக்கும் போதும் மிகையே இல்லாமல் ஒருவர் புத்துயிர்ப்பு அடைகிறார். அவருடைய எழுத்தை எந்த வித குறையுமின்றி தமிழுக்கு கொண்டு வரும் உங்களுக்கு என் போன்றவர்கள் கடமை பட்டிருக்கிறோம். மீண்டும் ஒரு முறை, ஆயிரம் நன்றிகள் மேடம் :)
Thanks,
S.Prasannakris

புதினத்தினால் இயல்பாக எழுந்து வந்த தன்னுரையாடல்
பிரசன்ன கிருஷ்ணின் நிழலுடன் உரையாடும் மனிதன்.
இந்த கட்டுரையை விமர்சனம் என்று அழைக்க வேண்டாமென்று நினைக்கிறன்தாஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான்வாசித்துவிடல்லைஆனால் இந்த புதினத்தினால் இயல்பாக என்னுள் எழுந்து வந்ததன்னுரையாடலை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்நிலவறைக்குறிப்புகள் பற்றிய என் பார்வையை தொகுத்துப் புரிந்து கொள்ளும் முயற்சி இதுஇந்ததொகுத்துக்கொள்ளலின் மூலம் இந்த புதினத்தை நான் எந்த வகையில் புரிந்துவைத்திருக்கிறேன் என்று அறிய முடிகிறதுஉலக பிரசித்தி பெற்ற இப்புதினத்திற்குஇணையத்தில் பல விமர்சனங்களும் பார்வைகளும் குவிந்து கிடக்கின்றனஇருத்தலியலுடன் இணைத்து நவீன கால கட்டத்து மனிதனின் அக உலகம்அன்றாடத்திலிருந்து விலகி நின்று தத்துவ விசாரணை செய்யும் ஒரு மனிதனின் மனஅலைச்சல்ஒட்டு மொத்தமாக இந்த புதினத்தின் மூலம் தாஸ்தயேவஸ்கியை அறியமுயலுதல்ஏதோ ஒரு வகையில் கிறிஸ்துவை முன் வைக்கும் அவரின் சில கதாபாத்திரங்கள்சென்ற நூற்றாண்டின் ரஷ்ய கலாச்சாரத்தை பற்றிய வரலாற்றுபார்வை என பல்வேறு அவதானிப்புகளும் அதனூடாக மேலெழுந்து வரும்தொகுப்பாக்கலும் இணையத்தில் விரவி கிடக்கின்றனஅது போன்றவிமர்சனங்களையும்மதிப்பீடுகளையும், புதினத்தை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கமுயலும் அறிவு செயல்பாட்டையும்வியக்க வைக்கும் வரலாற்றுஅவதானிப்புகளையும் ஒரு நல்ல இலக்கிய வாசகனுள் திரண்டெழுந்து வந்தஎண்ணங்களாக நான் பார்க்கிறேன்அந்த விமர்சனங்களிலிருந்து புதினத்தைவாசிக்காதவர்கள் கூட அதை பற்றிய ஒட்டு மொத்த பார்வையை அறிய முடியும்.
ஆனால் இந்த நீண்ட கட்டுரையின் மூலம் நான் கூற வருபவை புதினத்தை வாசிக்கும்போது என்னுள் இயல்பாக தோன்றிய மனித மனங்களை பற்றிய எண்ணங்களும்குறிப்பிட்ட சில இடங்கள் என் அனுபவங்களுடன் தொடர்புகொண்டு அதனூடாகஎழுந்த கேள்விகளும் தான்ஒரு வகையில் இந்த புதினம் பேசி இருக்கும் அநேகமுக்கிய பகுதிகளையும்கருத்துக்களையும் எடுத்து வைத்திருக்கிறேன் என்றுநம்புகிறேன்பொதுவான விமர்சனங்கள் மேற்பரப்பில் நின்று கொண்டு ஒட்டுமொத்தமாக அந்த புதினத்தை அறிய முற்படும்கீழ்வரும் தன்னுரையாடல் போன்றபதிவுகள் அதற்கு மாறாக ஆழம் நோக்கி சென்று பகுத்தறிந்து அதனுள் சிக்கி தவிக்கும்முயற்சிஆம்புதினத்தினுள் சிக்கி தவிப்பது பேராபத்தாக இருந்தாலும்பெருங்களிப்பும் இணைந்து அதனுள் விடுகிறதுஇந்த கட்டுரையை படிக்கும்வாசகர்கள் அனைவரும் புதினத்தை வாசித்து விட்டு இங்கே வந்தால் நன்றுஇந்தபுதினம் முழுவதுமே ஒரு வித தன்னுரையாடல் தான்நிலவறையில் வாழும்மனிதனின் மனதிற்குள் நடக்கும் தன்னுரையாடல்ஆகஒரு மனிதனின்தன்னுரையாடலினால் விளைந்த தன்னுரையாடல் இந்த பதிவுநிலவறையில்வாழும் மனிதனை நிழல் மனிதன் என்றே இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்உளவியலில் ‘நிழல்‘ (Shadow) என்றால் மனிதனின் ஆழ்மனதில் அமைந்திருக்கும்அவனது இயல்பான குணங்கள்மனிதன் பொதுவாக அப்படிப்பட்ட நிழல் குணங்கள்இருப்பதை அறியாதவன்அறிய நேரும் தருணங்களில் கோபம் கொள்பவன்கார்ல்ஹுங் (Carl Jung) என்ற உளவியல் ஆராய்ச்சியாளர் இந்த கருத்தாக்கத்தைபிரபலமாக்கினார் என்று கூறப்படுகிறதுவாசகர்கள் அவரை பற்றியும்இந்த ‘நிழலை‘ பற்றியும் தெரிந்துகொண்டால் இப்பதிவையும் புதினத்தையும் வாசிக்க உதவியாகஇருக்கும்நாவல் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறதுமுதல் பாகத்தில் 11 அத்தியாயம்இரண்டாம் பாகத்தில் 10 அத்தியாயம்எம்.சுசீலா அவர்கள்மொழிபெயர்த்துநற்றிணை பதிப்பகம் வெளியிட்ட பிரதி இங்கேஎடுத்துக்கொள்ளப்படுகிறதுஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாக எடுக்கப்பட்டுஅந்த அத்தியாயத்தில் பொதுவாக (என்னால் கண்டறிய முடிந்தவற்றிற்கு மட்டும்கூறப்பட்டிருக்கும் நிழல் மனிதனின் மனநிலையும் அதன் சம்பந்தமான என்னுடையதனிப்பட்ட எண்ணங்களையும்கேள்விகளையும் தொகுத்திருக்கிறேன்முன்னரேசொன்னது போல்இது தன்னுரையாடலை பற்றிய தன்னுரையாடல்

எலிவளை

நிலவறைக் குறிப்புகள் பற்றி தோராயமான ஒரு பார்வையை மட்டுமே வைக்கமுடியுமே அன்றிஅதன் உள்பகுதி ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து ஆராய ஒருவர்அமர்ந்தாலே அந்த புதினத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய உளப்பகுப்பாய்வுகட்டுரை ஒன்றை எழுதக்கூடும்இருந்தாலும் என்னால் முடிந்தவரை உள்சென்று சிலஅடிக்கோடிட பட வேண்டிய பகுதிகளையும்வாக்கியங்களையும் எடுத்து கொண்டுவிரிவாக பேச முயன்றிருக்கிறேன். ‘எலிவளை‘, இப்படி தான் ஆரம்பமாகிறது முதல்பாகம்முதல் பத்தியிலிருந்தே நிலவறையில் வசிக்கும் நமது கதைசொல்லிஉச்சக்கட்ட மன அழுத்தத்தில் உள்ளான் என்பது நமக்கு தெரியவரும்வாசகனுக்குமுதல் பக்கத்திலேயே புதினத்தின் தன்மையை உறுதிப்படுத்திமேலும்துணிவிருந்தால் உள்ளே வா என்ற அறைகூவல் தான் அதுவாசகனின் மனநிலையும் இதில் முக்கியம்.

அத்தியாயம் 1 – ‘அவன் பேசப்போவது அவனைபற்றி‘. 

நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்கள் என்று யாராவது கேட்டால் ‘என்னால்எதுவாகவும் ஆக இயலாதுஏனென்றால் நான் ஒரு அறிவுஜீவி‘ இப்படி ஒரு பதிலைமட்டும் தான் நிழல் மனிதனிடமிருந்து எதிர் பார்க்க முடியும்இந்த எதுவாக ஆகவிரும்புகிறீர்கள் என்ற கேள்வி நாம் சிந்திக்கும் போதே ஒரு வித நேர்மறைசிந்தனைகளும் கற்பனைகளும் மட்டுமே நம்மை சூழ்கிறதுஆனால் நிழல் மனிதன்தன்னால் ஒருபோதும் முழு மனதுடன் வெறுப்பைக் கூட கக்க முடிவதில்லை என்பதுதான் இவனின் எரிச்சல்ஆம்இந்த மனிதன் தன்னால் முழுதாக வெறுப்பையோஅதிகாரத்தையோ கூட காட்ட இயலாமல் தவிக்கிறான்வயிற்று பிழைப்பிற்காகசிறிதளவு கூட மன ஒத்துழைப்பு இல்லாமல்அலுவலகத்தில் குமாஸ்தா வேலைசெய்து வரும் இந்த மனிதன் அலுவலகத்தில் வரும் சிலரை வேண்டுமென்றே சீண்டிபார்க்கிறான்கடுமையாக இருப்பது போல் நடித்து காட்டுகிறான்ஆனால்உண்மையிலேயே அவன் அப்படி இருக்க விரும்பவில்லை அல்லது அப்படிஇருக்கமுடியவில்லைதன்னால் ஒரு புழுவாக கூட மாறமுடியாததை நினைத்துதுன்புறுகிறான்எதுவாகவும் மாறமுடியாததின் அழுத்தம் தான் அவனைவதைத்துக்கொண்டிருக்கிறதுஇந்த மன நிலை புதினத்தின் கடைசி வரைபயணிக்கிறதுதான் இருக்கும் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறிமறுபடியும் வேறொரு நிலைக்கு பயணப்பட்டு அவனுக்கென்று ஒரு தன்னிலைஇல்லாமல் காற்றில் எப்போதும் நடனமாடிக்கொண்டிருக்கும் தீச்சுடராக அவனைஎண்ணுகிறான்அவனுக்கென்று சில பிடிவாத குணங்கள் மட்டும் முதல்அத்தியாயத்தின்  கடைசியில் தெரிவிக்கப்படுகிறதுவரும் சொற்ப சம்பளத்தைவைத்துஅவனால் பீட்டர்ஸ்பேர்க் போன்ற பெரு நகரத்தில் அவனால் வாழ்ந்துகட்டுப்படியாகவில்லைஆனாலும் அவன் அந்நகரத்தை விட்டு அகல மறுக்கிறான்

அத்தியாயம் 2 – ‘தன்னுணர்வு உள்ள ஒருவனால்புனிதத்தை தன்னுள் தக்கவைத்துக்கொள்ளமுடியாது

இரண்டாம் அத்தியாயத்தில் மன ஓட்டம் எங்கெங்கோ சென்று அடுத்தடுத்தஅத்தியாயத்திற்கு உரமாக அமைகிறதுதன்னுணர்வு என்ற வார்த்தையை இந்தபுதினத்தின் மையச் சொல்லாக கருதிவிடலாம்பார்க்க போனால்இந்த ஒருவார்த்தையின் விளைவே இந்த மொத்த புதினமும் என்று கூட சொல்லி விட முடியும்தன்னுணர்வு உள்ள ஒரு மனிதன் அவன் செய்யும் செயல்களையே கூர்ந்துநோக்குகிறான்ஈடுபடுகின்ற ஒவ்வொரு செயலிலும் தன்னை தானே எடை போட்டுக்கொண்டு மேலெதுவும் செய்யாமல் தன்னை சோம்பேறியாக ஆக்கிக்கொள்கிறான்தன்னுணர்வு சற்று தணிந்து காணப்படும் அனைவரும் அதிவேக செயலூக்கம்பெற்றவர்களாவாகவும்வாழக்கையை வாழ பழகிக்கொண்டிருப்பவர்களாகவும்இருக்கிறார்கள்இங்கே தன்னுணர்வு சராசரியை மீறி அமைந்த ஒருவனால் எந்தசெயலும் செய்ய முடியவில்லைஅதே சமயம்அதே தன்னுணர்வு தரும் மற்றொருநேர் அல்லது எதிர் மறை விளைவு என்பதுதுன்பங்கள் பெற்று அதன் வழியாகமகிழ்ச்சியை சென்றடைவதுஉன்னதம் மற்றும் எழில் என்று சிலவற்றை நம்பும்மனிதன்  அதை அனுபவிக்க தொடங்கும் போதே அவன் அந்த உன்னதத்திற்குகளங்கம் (அவன் மனதினுள் அவ்வாறாக வரையறுத்துக்கொள்கிறான்செய்திருக்கும்கீழ்த்தரமான செயல்கள் அனைத்தும் அவனுள் எந்த வித வடிகட்டியுமின்றிவந்தமைகிறதுஇறுதியில் அந்த இழிவு செயல்களினாலேயே அவனுடைய மனம்புண்பட்டு அந்த உன்னதத்தையும் எழிலையும் முழுதாக உணரச்செய்யாமல் இருக்கசெய்து விடுகிறதுஆனால் காலங்கள் கடந்து பார்க்கும் போது அவன் அந்த கீழ்தரமான செயல்களினால் இன்பமுறுகிறான்படிப்படியாக அவனுடைய குற்றஉணர்வும்செயலுக்கான கூச்சமும் அருகிவந்து வெறும் மகிழ்ச்சியாக மட்டுமேஎஞ்சுகிறதுஅப்படியான தரம் கெட்ட செயலுக்கு ஆளாகி போன அந்த மனிதன்வேறெப்போதும் தன்னை மீட்டு கொள்ளத் தவருகிறான். “இதிலென்ன பெரிய குற்றம்கூச்சம்.. இதில் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறேன்..’ என்றமன நிலையே அவனை வேறு ஒருவனாக மாறவிடாமல் அதே நிலையில் கட்டிவைக்கிறதுஇது அனைத்தும் இயற்கையின் விதி படியே நடக்கிறதுஇயற்கையின்கொடிய கரங்களால் உள அழுத்தம் பெற்ற நிழல் மனிதனும் தன் துன்பங்களினுள்இன்பம் காண்கிறான்துன்பத்தில் இன்பத்தை கண்டுவிட்ட போதை மேலும் மேலும்அவனின் கூற்றுக்கு வலுசேர்க்கும் பல சந்தர்ப்பங்களை மட்டுமே நம்மிடம் கடத்தவிரும்புகிறான்புனிதத்தை உயர்வாக விரும்பும் எந்த ஒரு மனிதனும் அந்த புனிதம் சிதையும் இழிவு செயல்கள் அனைத்தையும் உள்ளூர செய்ய உந்தப்படுகிறான். அந்தபுனிதத்தை களங்கப்படுத்தும் ஏதோ ஒன்றை இயற்கையின் விதி படியே அவனும்மேற்கொள்கிறான்குற்ற உணர்வின் பிடியிலிருந்து காலம் என்ற ஒன்று மட்டும் தான்அவனை காப்பாற்றுகிறதுஆனாலும் அவனை குற்ற உணர்விலிருந்து மீட்டு அவனைமிகவும் தரம் தாழ்ந்தவனாக மாற்றி மனிதனின் வன்மத்தை மட்டும்வெளிக்கொணர்ந்து அவன் அதில் மகிழ்ச்சியாக இருக்க செய்யும் செயல்இயற்கையின் விதிகளில் தவிர்க்கப்படமுடியாத ஒன்றுதரம் தாழ்ந்தவனாக தன்னைகருதிக்கொள்ளுதலே அந்த மோசமான மகிழ்வுக்கு காரணமாக அமைகிறதுஅந்தகீழ்மையான குணாம்சத்தை அடைந்த ஒருவனால் அங்கிருந்து வேறெதுவாகவும்ஆக முடியவில்லைஅவ்வளவு தீவிரமான தன்னுணர்வு கொண்ட ஒருவனால்எதுவாகவும் ஆக முடியாதுஇரண்டாம் அத்தியாயத்தின் பிற்பாதியில்முழுக்கமுழுக்க தன்னை ஒரு சுயவருத்தியாக காட்டிக்கொள்ளும் கதைசொல்லி அந்தசுயவருத்திக்கொள்ளுதல் இனிமையே என்பதற்கான கதைகளைதர்க்கத்தைசுயபிரகடனத்தை நம்முன் விலக்கிவிட்டு நம்மை அவனின் அக உலகத்திற்கு அழைத்துச்செல்கிறான்

அத்தியாயம் 3 – ‘கற்சுவருடன் முட்டி மோதிஇயற்கையின் விதிகளை கேள்வி கேள்

கற்சுவர் ஒன்றைக் கண்டால் அதன் முன் பிரம்மித்து போகாமல் அந்த சுவரைஏற்றுக்கொள்ளாமல் அதை சந்தேகப்பட்டு அதன் மீது வெறுப்பை உமிழ்வதும் அதன்தோன்றலை மனம் சதா நொந்துக்கொள்ளுதலும் ஆனால் உள்ளுக்குள் அதனால் ஒருசிறு உபாயம் கிட்டியதாக எண்ணுவதும் நம் கதைசொல்லியின் இயல்புஇங்கேகற்சுவர் என்பது நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு உண்டாகும் தடைஇயற்கையால் திட்டமிட்டபடி நாமிருக்கும் சூழலில் வந்து பொருந்திக்கொள்ளும்முட்டுக்கட்டைஆனால் முட்டாள்தனமான சாதாரண மனிதர்களோ அந்த கற்சுவரைபுரிந்துக்கொள்ளாமல் அது தோன்றிய விதமே அதை ஏற்று இயற்கை அன்னையின்கருணையால் தன் இயல்பிற்கு திரும்பிவிடுவார்கள்நிழலுடனும் இயற்கையின்கொடுங்கரங்களுக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கும் நம் நிழல் மனிதனோதன்னை எலி என்று கருதிக்கொண்டு (அதுவும் பிறர் யாரும் அவனை அப்படி கூறவேஇல்லைஅவனாகவே அவனை நினைத்து கொண்டிருக்கிறான்இயற்கையின் ஆதிசமன்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறான்ஒரு கட்டத்தில் நிழல் மனிதன் தன்  முட்டாள்தனத்தை நினைத்துப் பொறாமை பட கூட செய்கிறான்இப்படியானதன்னுணர்வுகளும்பிரக்னஞயும் இல்லாத சாதாரணர்களால் ‘இது இப்படி தான்‘ என்றுஎடுத்துக் கொண்டு போக முடிகிறதே என்று உள்ளுக்குள் இருண்மையான உணர்வுகளையும் அடைகிறான்கற்சுவரை நேரில் சந்தித்த நிழல் மனிதன்அதற்கெதிராக போராடும் மன நிலையில் சுழன்று கொண்டிருக்கும் போதேஅவனையும் அறியாமல் பல்வேறு துன்பகர செயல்களில் சிக்கித் தவித்துக்கொண்டுஅதன் மூலம் தனக்கு கிடைக்கப்பெற்ற உவப்பையும் அடைகிறான்இந்த நோயுற்றமன நிலையில் தன்னை சுற்றி இருக்கும் மனிதர்கள் எலி போன்று தன்னைகேலிச்சிரிப்பு சிரிப்பதாக எண்ணிக்கொண்டு அதில் மேலும் வருத்தம் அடைகிறான்இரண்டும் இரண்டும் நான்கு என்று நன்கறியப்பட்ட சமன்பாட்டைகேள்விக்கேட்கறான்இதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது என்று சாதாரணமனிதர்கள் ஐயப்பட்டாலும் தன்னை எலி என்று வருணித்துக்கொள்ளும் நம்கதாநாயகன் துணிந்து கேள்வி கேட்கிறான்அதனாலேயே அவனுடைய இருப்பு 150 வருடங்கள் கடந்தும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதுஎதிர்ப்பட்ட கற்சுவர் தங்களின்தவறே என்றும் அதன் மூலம் சமநிலைக்கு வரும் எளிய மனிதர்களுக்கு நடுவேகதைசொல்லி அதை ஏற்க மறுக்கிறான்அந்த கற்சுவர் தான்தான் என்பதை மறுத்துஅவனுடைய கண்ணுக்கு அகப்படாத கண்கட்டு வித்தை அது என்று தர்க்கம்புரிகிறான்எந்த அளவுக்கு அந்த வித்தை தன் மூளைக்கு அகப்படாமல் இருக்கிறதோஅந்த அளவுக்கு தலைவலிமனிதன் தனக்கு நேரும் துன்பங்கள் அனைத்திற்கும்யாரையாவது பழி சுமத்தி தன் மேல் ஒரு குற்றமும் அல்ல என்று சமாதானம் செய்துகொள்ள விழைவார்கள்குற்றம் சுமத்தப்பட யாருமே இல்லாத ஒருவன் தன் மீதுதான் தவறு என்பதையும் உணர்ந்து கொள்வான்அந்த கற்சுவரை வெளிப்புறமாகவோஅல்லது உட்புறமாகவோ பிம்பப்படுத்தி நடக்கும் தீங்குகளுக்கு ஓர் அர்த்தம் தேடிக்கொள்ள முனைவான்மனிதனுக்கு எந்நாளும் அர்த்தங்களும்தர்க்கங்களும் தேவைபடுகிறதுஅரிதாகவே தன் மீதே அனைத்து பழிகளையும் சுமந்து திரியும் மனிதன்அந்த கற்சுவரை எளிதில் கடந்து போய் விடுகிறான்கதைசொல்லியை போல் ஒருசிலரே அந்த கற்சுவரை முழுக்க முழுக்க இயற்கையின் கண்கட்டு வித்தையாகபார்த்து பழகி அதை நினைத்துக் கொண்டேஉள்ளுக்குள் வெந்து புழுங்கிமரணப்படுக்கை வரை அதை தாங்கி செல்கிறார்கள்இயற்கை விதிகளையும் அதன்முன் தீர்மானிக்கப்பட்ட திட்டங்களையும் எதிர்க்கும் ஒருவனாகவே நம் நிழல்மனிதன் இருந்து வருகிறான்.   

அத்தியாயம் 4 – ‘உன் இருப்பை நீ பிரகடனப்படுத்து

பல்வலி மற்றும் வயிற்று வலி எப்போதும் வலிகளின் உச்சம் என்று கூறப்படும்அந்தபல்வலியை எடுத்துக் கொண்டு நான்கு பக்கங்களுக்கு தனக்கு தோன்றியஎண்ணங்களை பதிவு செய்கிறான் நிழல் மனிதன்தமக்கேற்படும் துன்பங்களுக்குஎவருமே காரணம் காட்டமுடியாமல் போகும் போது தான் மனிதன்பரிதாபத்துக்குள்ளாகிறான்பழிவாங்கவும்தூசனங்களை அள்ளித் தெறிக்கவும்சதாவெறுமையில் உழன்று எதிராளியை மாய்க்கும் திட்டத்தை தீட்டவும்மனிதனுக்குஏதோ ஒரு வகையில் ஓருருவம் தேவை படுகிறதுஅது ஒரு மிக பெரிய இயக்கமாகஇருக்கலாம்அல்லது தனி மனிதனாக இருக்கலாம்ஆனால் துன்பத்தின் மூலகாரணியை புரிந்துக்கொள்ளமுடியாமல் போகும் நேரத்தில் அவன் வெறுமனேசுவரை குத்திக் கொள்கிறான்தன்னையே நொந்துகொள்கிறான்கிடைப்பவற்றின்மீதெல்லாம் காழ்ப்புணர்ச்சியை கக்குகிறான்இப்படிப்பட்ட துன்பியல் நிகழ்விற்குஏற்றார் போல் இருப்பது பல்வலி தான்இந்த வேதனையிலும் மனிதனின் நார்சிசதன்மை வெளிப்படுகிறதுதன்னை எப்படியாவது எவரேனும் திரும்பி பார்க்கவேண்டும் என்ற ஆவலாக அது மாறுகிறதுஅதனூடே ஏதோ ஒரு குறைந்தளவுஉவப்பு அந்த துன்பத்தின் மூலம் கடத்தப்படுகிறதுமுனகி கொண்டே இருக்கும்பல்வலிக்காரன் சுற்றி இருப்பவர்களுக்கு எதை கூற முயல்கிறான்துன்பத்தில்உழலும் எந்த மனிதனும் சுற்றி இருப்பவர்கள் தன்னை கண்டுகொள்கிறார்களா என்றுஒற்றை கண்ணை எப்போதும் அருகில் இருப்பவர்கள் மீது வைத்திருக்கிறான்சுற்றியுள்ள கண்கள் அனைத்தும் தன் மீது ஒற்றை நொடியாவது அவன் மீதுபடவேண்டும் என்ற ஆர்வமே அவனின் அந்த தீரா முனகலுக்கு காரணம்ஆழ்ந்துநோக்குகையில்அந்த முனகல்களுக்கு பாதி காரணம் தன்னுடைய இருப்பை நிறுவிகொள்ளும் தவிப்பே

அத்தியாயம் 5 – ‘குற்ற உணர்வின் பிறப்பும்தாற்காலிகத்தன்மையும்

 சுயமதிப்பு கொண்ட ஒருவனால் சுய வீழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாதுதன்னுணர்வு கொண்ட ஒருவனால் சுயமதிப்புடன் இருக்கவியலாதுமுந்தையஅத்தியாயத்தின் கடைசி வரிகளை இப்படி அமைத்து விட்டு அடுத்த அத்தியாயத்தில்மனதின் ஆழத்திற்கு பயணிக்கிறான் நம் நிழல் மனிதன்குற்ற உணர்வின் அடிப்படைஎன்னஅது அறம் சார்ந்த விழுமியங்களை ஒட்டியோமனிதனின் விம்மி எழும்மனதின் வெளிப்பாடாகவோ இருக்கலாம்ஆனால் குற்ற உணர்வு கொள்ளும் மனதின்அல்லது அப்படி கூறிக் கொள்ளும் மனிதன் அந்த குற்ற உணர்வை உணர்கிறானாசில நாட்களுக்குள்ளேயேஅவனின் குற்ற உணர்வு வடிந்து இல்லாமல் போகிறதுஅவனுக்கே தெரியவருகிறதுகுற்ற உணர்வின் தீவிரம் குறைகிறதுமழுங்கடிக்கப்படுகிறதுஓருணர்வு நம்முள் மறைந்து போகிறது அல்லதுமறக்கப்படுகிறதுஅப்படி பட்ட குற்ற உணர்வின் நேர்மை தான் என்னமனிதன் குற்றஉணர்வின் பிடியில் உண்மையிலேயே சிக்கிக்கொள்ளாமல்அதை ஒரு பகடையாகஎடுத்துக் கொண்டு தனக்கு தானே தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒன்று பெரிதாகநடந்திருக்கிறது என்று கற்பிதம் செய்து கொள்கிறான்அதன் மூலம் அவனின்செயலற்ற பொழுதுகளோசலிப்புடன் செல்லும் வாழ்க்கையோ சற்றுவிறுவிறுப்புடன் செல்கிறதுநம் நிழல் மனிதன் அந்த குற்றவுணர்வு கூடஉண்மையானதாக இல்லையே என்று வருந்துகிறான்உண்மையிலேயே குற்றஉணர்வு என்பது மனிதனின் சுயநலத்தின் வேறொரு வெளிப்பாடாகவே உள்ளதுஅவனுக்கு ஒரு பொருளோபெண்ணோஅதிகாரமோஅந்தஸ்தோ கிடைக்கப்பெறாமல் அமையும் சூழ்நிலைக்கு அவன் செய்த ஏதோ ஒரு செயல் அமைந்துவிடுகிறதுஅதன் மூலமே அவனின் குற்ற உணர்வு பிறக்கிறதுஅதையே தான் செய்தஉண்மையான குற்றமாக கருதுகிறான்அடுத்தவருக்கு செய்த குற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் குற்ற உணர்வையும் மனிதன் ஒருபோதும் நெடுங்காலத்துக்குஎடுத்து செல்ல விரும்பவில்லைஅல்லது எடுத்து செல்ல இயலவில்லைவெகுசொற்ப கால அவகாசத்திலேயே தெரிந்து விடுகிறதுஅவனின் குற்ற உணர்வின்வலிமைஇந்த காரணத்தால் நம் நிழல் மனிதன் வெறுப்பை மட்டுமே அடைகிறான்அவன் குற்ற உணர்வு என்று நம்பும் அனைத்தும் பொய்யேநிரந்தரமற்றவைஆனாலும் நிழல் மனிதன்சலிப்பின்றி வாழும் வாழ்க்கைக்கு அஞ்சி தன்முனைப்போடுசெயற்கையாக கூட பல குற்ற உணர்வு கொள்ளும் சம்பவத்தைதானே உருவாக்கிக்கொள்கிறான்அதன் வழியே அவன் சலிப்பில்லா வாழ்க்கையைமேற்கொள்கிறான்இதன் தொடர்ச்சியாகஅந்த செயலின்மைக்கு காரணம் தேடிஅலைகிறது நிழல் மனிதனின் உளப்பகுப்பாய்வுஎளிய முட்டாள்களுக்குவாய்த்திருக்கும் வரையறுக்கப்பட்ட பார்வையால் அவர்கள் எந்த ஒரு செயலையும்முன் பின் யோசிக்காமல் முழுதாக தங்களை அர்ப்பணித்து கொண்டு அதில் ஒருநோக்கத்தையும்அர்த்ததையும் உருவாக்கிக்கொள்கிறார்கள்ஆனால் தன்னுணர்வுஉள்ள நம் நிழல் மனிதனுக்கு அவனுடைய தன்னுணர்வாலேயே அந்த ஒற்றைசெயலில் மனதை ஈடுபடுத்த முடியாமல் தவிக்கிறான்அதன் நோக்கம் அவனுக்குஅவ்வளவு நம்பிக்கையை அளிக்கவில்லைஒன்றன் மீது கவனம் குவியும் போதேஅடுத்தடுத்த காரியங்களுக்கும் அவன் மனம் அலைகிறதுஆகஇறுதியில் எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக முடிக்காமல் அவனின் வழக்கமான செயலின்மைக்கேவந்து சேர்கிறான்இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது செய்யும்காரியத்தினில் ஏற்படக்கூடிய சந்தேகம்தன்னுணர்வு கொண்ட ஒருவனால் இதைஎப்படியும் நிராகரிக்க முடியாதுநிழல் மனிதன் இந்த ஒரு குணத்தால்தன்னை தானேபழிவாங்கிக்கொள்ளும் செயலிலும் அரைகுறையாக நிற்கிறான்அதற்கானநோக்கத்தில் கூட அவன் உறுதியாக இருந்தபாடில்லைஇறுதியில் இப்படி பட்டசுயவெறுப்பை வெளிப்படுத்துவதில் கூட தன் இயலாமையை வருந்தி கொண்டுவெறுப்பை மட்டுமே அடைகிறான் நம் நிழல் மனிதன்இந்த அத்தியாயத்தின்கடைசியில் நிழலை சந்திக்கும் நேரடி இடம் ஒன்று வருகிறதுஎந்த வித காரணகாரியமும் பார்க்காமல் ஏதோ ஒரு உணர்விடம் முழுதாக தன்னை ஒப்படைக்கும்மனிதனுக்கு கூட சொற்ப நாட்களில் தன்னை தானே அந்த உணர்வுக்குள் ஏமாற்றி சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று விலங்கிவிடுகிறதுவழக்கம் போல் மீண்டும் எந்தவித செயலூக்கமும் அன்றி சலிப்பூட்டும் வாழ்க்கைக்கே திரும்புகிறான்இருந்தாலும்நிழல் மனிதன் நன்றாக வாயடித்துக்கொண்டிருக்கும் புத்திசாலி தான்.

அத்தியாயம் 6 – ‘நிலையில்லா அடையாளம்

நீங்கள் ஒரு வரையறைக்குள் அடைக்கப்படும் போது (ஆசிரியர்தச்சர்மது விற்பனைதொழிலாளி,..) அதன் பின் உங்களை சுற்றி இருக்கும் உலகின் அனைத்துநன்மையையும் நீங்கள் நுகர தொடங்கி விடுவீர்கள்ஆம்ஏதேனும் ஒருஅடையாளப்படுத்தலுக்கு பின் மனிதனுக்கு இருப்பது சுற்றி இருக்கும் உலகைரசிப்பது தான்அந்த அடையாளத்துடன் அவன் மிக நிம்மதியாகவும்உயர்வாகவும்வாழ்வான்மற்றவர்கள் அவனை உயரத்தில் தூக்கி வைத்து பிடிப்பார்கள்நம் நிழல்மனிதனோ அப்படியான ஒரு அடையாளம் ஏதுமின்றி எந்த சட்டகத்திற்குள்ளும்அடைபடாமல் வெவ்வேறு ஆளாக மாறிக் கொண்டே இருக்கும் நிலையின்மையைதன் இயல்பாக உணர்கிறான்இதனூடே அவனுடைய வாழ்வும் எந்த வித நிம்மதியும்முன் சொன்ன துன்பத்தில் உழன்று வேறு வழியே இல்லாமல் அதை ரசிக்கதுவங்குவதும்சலிப்பின்றி வாழ்வு நகர அந்த துன்பத்தை உருவாக்கிக் கொள்ளவும்பழகிக் கொண்டிருக்கிறான்உண்மையிலேயே மனிதன் என்பவன் குறைந்தஅறிவோடுதனக்கு விதிக்கப்பட்டது இது மட்டும் தான் என்று ஏற்றுக் கொள்ளும்மனப்பான்மையோடு செயலில் மூழ்கி அதில் இன்பம் அடைகிறான்இவ்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழும் 95% சதவீத மனிதர்களை பார்த்து நிழல்மனிதனுடன் சேர்ந்து நானும் நிறையவே பொறாமை படுகிறேன்பக்கங்கள் கடக்ககடக்கநிழல் மனிதனுடன் நாமும் பல இடங்களில் ஒன்றிப்போவது இயல்பாகநடைபெறுகிறதுஇல்லையினில் இந்த புதினத்தை வாசிக்கவே இயலாதுஎன்றே நினைக்கிறேன்.

அத்தியாயம் 7 – ‘எது நன்மை?’

இப்படியாக முடிந்த கடைசி அத்தியாயத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்தஉண்மையான நன்மை எது மனிதனுக்கு?’ என்ற உச்சக்கட்ட விவாதத்திற்குசெல்கிறதுமனிதனை ஒன்றினுள் அடைக்கப்பார்க்கும் இந்த சமூகமும், (அந்தமனிதனே அப்படியாக அடைக்கப்பட தான் காத்திருக்கிறான்ஏற்கனவே இயற்றப்பட்டவிதிகளும் நம் நிழல் மனிதனுக்கு மிகவும் அருவருப்பூட்டுபவையாக உள்ளதுஇன்னது இப்படி தான் என்று வகுத்து வைக்கப்பட்டது தான் மகிழ்ச்சி என்றும் அதுவேநன்மை என்றும் மனிதன் நெடுங்காலமாக நம்பி வருகிறான்நம் காலத்தில் இந்தஆட்டு மந்தை கூட்ட மனநிலைக்கு பெயர் தான் பக்குவம்எந்த முடிவையும்பக்குவத்துடன் எடுஎப்போதுமே சமநிலையில் நின்று அடுத்த செயல்களையெல்லாம்செய் போன்ற கட்டுக்கதைகளெல்லாம் இந்த விதிக்கப்பட்ட அல்லதுவரையறுக்கப்பட்ட நன்மையை மற்றும் நிம்மதி மனநிலையை அடைவதற்கேஒருவன் அவ்வாறு அந்த விதிகளுக்கு எதிராகவோ அல்லது எதிர்த்து செயல்படதுணிந்து விட்டாலே அவனை இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக பார்க்கிறதுஒருவித முட்டாள் தான் இவன் என்றும் முத்திரை குத்துகிறதுநன்மையையும்மகிழ்ச்சியையும் அனுபவிக்க தெரியாத கிறுக்கன் என்று உச்சப்பட்சவார்த்தைகளையும் தெளிக்கிறதுஇந்த சமூகத்திடம் இந்த நிழல் மனிதனை போல்இருக்கும் பலரும் காலம் காலமாக போராடி வரும் ஒன்று தான் இதுதனக்கானநன்மையை சிலர் தாங்களாகவே வகுத்துக் கொள்கிறார்கள்அதன் விளைவால்நிச்சயம் சுற்றியிருக்கும் பெரும்பான்மை சமூகத்தினரை காட்டிலும் அந்த சிலர்மிகவும் வாழ்வியல் துன்பத்துக்கு உள்ளாவார்கள்ஆனால் கடைசியில் அவர்கள்எடுத்த தனித்த பாதையில் நின்றுகொண்டிருப்பதாலேயே அவர்களின் நன்மைஅவர்களுக்கு மேலானதுசமூகம் வகுத்து வைத்தப் பொதுப்படையான நன்மைகள்எதுவும் நிழல் மனிதன் போன்றோர்களுக்கு வெறும் வெற்றுக் கூச்சல்களாகவேதெரியும்இந்த அத்தியாயத்தின் கடைசியில் அந்த தனிப்பட்ட நன்மையைபிசாசென்று விளக்குகிறான் நிழல் மனிதன்ஆம்மனிதனை இருப்புக் கொள்ளாமல்ஆட்டு மந்தை கூட்டத்திற்குள் சேர விடாமல் தனியே விலகிச்செல்ல வைக்கும் அந்தஉத்வேகம் ஒரு வகை பிசாசாக மட்டும் தான் இருக்க முடியும்இல்லையேல்அத்தனை தீவிரமும்அக எழுச்சியும் இவனுக்குள் அமைவது சாத்தியமில்லை.
இந்த அத்தியாயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய தனி விவாதம் ஒன்றுஉள்ளதுமனிதன் எவ்வாறு நாகரீகம் அடையுந்தோறும் அவன் மேலும் மேலும்வக்கிர புத்தியுடன் மாறுகிறான் என்பதுஎன்னை பொறுத்தவரையில் இந்தகருத்தாக்கமும் அதை ஒட்டிய நிழல் மனிதனின் பகுப்பாய்வும் இந்த மொத்தஅத்தியாயத்தின் மைய சாரத்தை விட்டு சற்று விலகியே இருப்பதாக படுகிறதுஎண்ணங்கள் அர்த்தத்தோடும் தர்க்க முறையுடனும் கட்டுமானத்துடன் அமையுமாஎன்னஆனால் தாஸ்தயேவ்ஸ்கி என்ற எழுத்தாளரின் ஒட்டு மொத்த ஆளுமையைபுரிந்து கொள்ள இந்த எண்ணங்கள் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்அவருடைய பிற புனைவுகளிலும் இந்த நாகரீக வளர்ச்சிக்கு எதிர்மறையாக தான்அவருடைய எழுத்து பிரதிபலிக்கிறது என்று பரவலாக கூறப்படுகிறது

அத்தியாயம் 8 – ‘விதியை மீறுவது என்றால்என்ன?’

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாக நிழல் மனிதன் எப்படியெல்லாம் தனக்குள்ஏற்படும் தன்னிச்சையான தூண்டுதலுக்கு விளக்கம் தருகிறான் என்பதே இந்தஅத்தியாயம்சாதாரண முதிர்ச்சியான மனிதன் அவனின் அன்றாட செயல்களைஇயந்திரத்தனமாக செய்துவிட்டு அதன் மூலம் வரும் வகுக்கப்பட்ட சந்தோஷங்களைஅனுபவித்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவன் ஒரு பியானோ கட்டையாகமாறுவதாக கருதுகிறான் இந்த நிழல் மனிதன்குறிப்பிட்ட இச்சையை பிடித்துதொங்கிக்கொண்டு வாழும் நிழல் மனிதனோ அந்த செயல் அல்லது சுய இச்சைதனக்கு துன்பம் ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் அதன் பின்னே மட்டும் தான்சென்றுகொண்டிருப்பான்ஏனென்றால் அந்த பின்தொடர்தல் மட்டுமே அவனுக்குஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான ஒரு வெளிப்பாடாக மாறுகிறதுவிவேகமானமனிதர்களுக்கு கிடைக்கக்கூடியது என்னவோ காரண காரியங்களைஅறிந்துகொள்ளும் திறனால் வரும் அற்ப சந்தோஷமேஇந்த வெறும் அறிவுசெயல்பாட்டினால் அவனுடைய ஒரு பகுதியான அறிவுத்திறன் மட்டுமே முழுமைஅடைகிறதுநிழல் மனிதனின் கூற்றுப் படி தன்னிச்சையாக அமையக்கூடியசெயல்களுக்கு முழு வாழ்க்கையையும் அர்த்தம் நிரம்பியதாக மாற்றக் கூடியஇயல்பிருக்கிறதுஅதே சமயத்தில் இந்த பகுதியில் எழுப்பப்படும் இன்னொருமுக்கியமான கேள்விஇந்த கணித விதிகளின் படி அமையும் சூத்திரங்கள் தனிஒருவனுக்கு ஏற்படும் இச்சைக்கு காரணமாக அமைந்து விட்டால்இரண்டும்இரண்டும் நான்கு என்ற விதிக்குட்பட்டதாகிவிடும்அதே போன்று ஒருவனின்தன்னிச்சையான (அப்படி அவன் நம்பும் ஒரு செயல்விருப்பம் என்பதும் முன்பேநிச்சயிக்கப்பட்டுவிட்டால்நிழல் மனிதன் இந்த இடத்தில் free will பற்றி பெரிதும் பேசவிரும்புகிறான்ஒருவனுக்கு அப்படிப்பட்ட விதிகளின் கணக்கு தெரிந்துவிட்டால்அவன் நிச்சயம் அதையும் மீறதான் உத்தேசிப்பான்உதாரணமாக எனக்கு ஜாதககணிப்பில் அளவு கடந்த மன கசப்பு உள்ளதுஅதன் கூற்று ஒவ்வொன்றையும்பொய்யாக்கிப் பார்க்க வேண்டும் என்ற கொடூர எதிர்மறை மனநிலை உள்ளதுஅதைநிறைவேற்றும் விதமாகஜாதக கணிப்பின் படிக் கூறப்படும் பலவற்றிற்கு எதிராகசெயல்பட்டு கொண்டே இருப்பேன்அப்படி செயல்பட முடியாத நேரங்களில் அதைஎன் தோல்வியாக ஒத்துக்கொள்வேன்ஆனால் இன்று வரை என் வாழ்நாளின்முக்கிய விஷயங்கள் அனைத்திலும் ஜாதக கணிப்பிற்கு எதிராக செயல்பட்டுவெற்றியும் அடைந்திருக்கிறேன்ஐரோப்ப தேசத்து புராண கதை ஒன்று ஒண்டுகடவுள் ஒரு பணியாளை ஏதோ ஒரு செயலைச் செய்ய சொல்கிறார்ஆனால் அந்தபணியாள் அதற்கு மாறாக வேறு எங்கோ தப்பிச் செல்ல நினைக்கிறார்ஆனால் அந்தபணியாள் விதிப்படி நடக்கவில்லை என்று கோபமுற்று அந்த பணியாள் செல்லும்இடங்களுக்கு எல்லாம் பேராபத்தை உருவாக்கி கடவுள் அவனை ஒரு கட்டத்தில்அழிக்கவும் செய்வதாக முடியும்விதிக்கும்ஜாதகம் போன்ற கணிப்புகளுக்கும்எதிராக செயல்படும் ஒவ்வொருவருக்கும் சுய விருப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே காப்பாற்றும்இவ்வாறு தன் சுய இச்சையின் படிமனிதன் எப்போதும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விதிக்கு எதிராக சென்றுதனக்குபேராபத்து என்று தெரிந்தும் அந்த சுய இச்சையின் பின்னேயே தொடர்வான்அவன்எந்நாளும் கணக்கு விதிகளுக்கு உட்பட்டவிதிகளின் கரங்களில் சிக்காமல் ஒரு விதஅடம்பிடித்தலோடு தன் நிலைப்பாட்டிலிருந்து விலகவே மாட்டான்இப்போதுஎனக்குள் ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறதுஉண்மையிலேயே மனிதன்தன்னுடைய மனதின் இச்சை படியே சென்றுகொண்டிருந்தால்கணக்கு விதிகளைபற்றி எல்லாம் எதற்குமே கவலை படாத சுய மகிழ்ச்சியை மட்டுமே எண்ணி அவன்பயணிக்க நேர்கையில்ஏதோ ஒரு வித கணக்கு விதிக்குள் அவன் அடங்கிவிடுவதுதானே சாத்தியம்ஒரே வித்தியாசம் சற்று மடைமாறி போன விதிகளுக்குஉட்பட்டவன்அவ்வளவேஇறுதியில் விடாப்பிடியாக கணக்கு விதிகளை தெரிந்துவைத்துக் கொண்டு அதற்கு எதிராக இருக்கும் தன் சுய இச்சையை மேலும் மேலும்செய்து கொண்டுவிதிகளை முற்றிலுமாக தவிர்க்க நினைப்பவன் தானே இந்த நிழல்மனிதன்இந்த அத்தியாயத்தின் இறுதியில் சமூகத்த்தின் குரலாக ஒரு வரிவருகிறது. “யாரும் நம் இச்சைகளை கட்டுப்படுத்த சொல்லவில்லைஆனால் அந்தசட்டகத்திற்குள் அடைபட்டு உன் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்.” நம் நிழல்மனிதன் மிக தெளிவாக இந்த குரலை எதிர்க்கிறான்இரண்டும் இரண்டும் நான்குஎன்று தெரிந்த பின்பு எப்படி சுய விருப்பம் அல்லது சுய இச்சை என்பது சாத்தியம்என்ற கேள்வியை முன்வைக்கிறான்இந்த ஒற்றை கேள்வியிலிருந்துஉண்மையிலேயே நிழல் மனிதன் சுய விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துகொள்ள விரும்புகிறானாஅல்லது சூத்திரங்கள் சொல்லும் அனைத்தையும் எதிர்க்கமட்டுமே சுய விருப்பம் என்பதை முன்மொழிகிறானாஅப்படியான சுய விருப்பம்எப்படியும் துன்பகரமானது என்று தெரிந்தும் அதை தேர்ந்து கொள்ளும் இந்த நிழல்மனிதன் நிச்சயம் அவனுடைய குறிக்கோளை இன்னும் தெளிவாக வெளிப்படுத்திஇருக்கலாம்.

அத்தியாயம் 9 – ‘வாழ்வின் நோக்கமே இலக்கைஅடையும் முயற்சியும் அதற்கான பாதையும் தான்

இப்படியாக தான் தொடங்குகிறது அடுத்த அத்தியாயம்முன்னரே சொன்னகருத்துக்களின் நீட்சியாகவே இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறதுஒவ்வொருசிந்தனை செய்யும் மனிதனும் தனக்குள் என்றாவது ஒரு நாள் இப்படி நினைப்பதுண்டுஇலக்கை விட அதை அடைவதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகள் நம்மை நிறைவுசெய்ய வேண்டும் என்றுஅந்த நிறைவே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறதுஎன்றும்அந்த நிறைவிற்காக மட்டுமே வாழ்வதாகவும் பலர் எண்ணியிருப்பர்நிழல்மனிதன் ஓரளவுக்கு யோசிக்கும் மனிதனுடன் நேர்கோட்டில் இருப்பது இந்த ஒற்றைகருத்தில் மட்டும் தான் என்பது விளங்குகிறதுஅதாவது மனிதர்களை நான் இவ்வாறுபிரிக்கிறேன்ஒன்றுமற்றவர்களின் சொல்பேச்சுஅனுபவங்கள் கேட்டு அதிகமாகஎதுவும் சிந்திக்காமல்முதிர்ச்சியாகவும்விவேகமாகவும் நடந்து இயற்கையின்விதிப்படி வாழ்பவன்இரண்டுசற்றேனும் யோசிக்கக் கூடிய மனிதன்இருத்தலியல்நெருக்கடியால் அவதிப்பட்டு ஒன்றையும் அனுபவிக்க முடியாமல் தத்தளித்துபிடித்தமான வற்றை (அதே சமயம் சற்று விலகிய பாதையை தேர்ந்தெடுத்துதொடர்ந்து யாசித்துக் கொண்டே இருக்கும் மனிதர்கள்மூன்றுபெரிதும் விளக்கம்அளிக்க தேவை இல்லாத கதைசொல்லி போன்ற நிழல் மனிதர்கள்தங்களுடையநிழல்களை இன்னதென்று தெரிந்துவைத்துக் கொண்டுதுன்பங்களையும் இன்பமாககருதி அதிகம் யோசிக்கும் ஒரு வகையான பிறழ்ந்த மனநிலை கொண்ட மனிதர்கள்இவர்களுக்கு எந்நாளும் மேற்சொன்ன முதல் வகுப்பின மக்களோடு தொடர்பேகிடையாதுஇரண்டாம் வகுப்பின மக்களோடு சற்றேனும் தொடர்பிருந்தாலும்அவர்களையும் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பிராணிஜந்துக்கள்இந்த அத்தியாயத்தில் வைக்கப்பட்டுள்ள முக்கியமான இன்னொருபார்வை இலக்கை அடைந்ததும் ஏற்படும் சூன்யமும்அடுத்த இலக்கை தேடும்மனநிலையும்தொடர்ந்த தேடுதல் மட்டுமே வாழ்க்கையாக அமைய முடியும் என்றுநிழல் மனிதம் எண்ணுகிறான்இதை சற்று கூர்ந்து நோக்கினால்நிழல் மனிதனைபோன்றோர்கள் எந்த வித வெளிப்புற சாதனைகளையும் வெற்றிகளையும்எதிர்பாராமல் தொடர்ந்து அவர்களுக்குள்ளாகவே நிர்ணயித்த இலக்கைஅடைந்துவிட்டு அடுத்த இலக்கிற்கான தேடுதலை தொடங்கிவிடுவார்களோஅப்படிஇருக்குமாயின்அதாவதுவெளிப்புற வெற்றிகளுக்கும்இலக்கைஅடைந்துவிட்டோம் என்ற அங்கீகாரத்திற்கும் காத்திருக்காத (அப்படி தான் நிழல்மனிதர்களை உருவகம் செய்ய வேண்டியுள்ளதுஏனென்றால் அவர்கள் ஒருகூட்டிற்குள் அடைந்து கிடக்கும்வெளி உலகிலிருந்து மிகவும் மாறுபட்டுமனதளவில் தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள்நிழல் மனிதர்களுக்கு ஏன்இலக்கு என்ற ஒன்று வேண்டும்அவர்களின் இலக்கு எப்படியேனும் அவர்கள்உணர்வதாக மட்டுமே இருக்க போகிறதுஅதுவும் அந்த இலக்கை அடைந்தவுடன்அடுத்த இலக்கை அடையும் முயற்சியில் இறங்கிவிட போகிறார்கள்இதையடுத்துமறுபடியும் துன்பப்படுதலும் அதன் மூலமே இன்பமடைவதும் தன் இன்றியமையாகுணம் என்று கூறுகிறான் நிழல் மனிதன்இவ்வாறான துன்பத்தில் இன்பம் காணும்மன நிலைக்கு நிழல் மனிதனின் தன்னுணர்வு தான் காரணம் என்று அவன்நம்புகுகிறான்இந்த சுய விருப்பம்துன்பத்தின் வழியே இன்பம்இவை எல்லாம்நிழல் மனிதனின் வாழ்க்கையை உயிர்ப்போடு இருக்க செய்கிறது என்று கூறுகிறான்.

அத்தியாயம் 10 & 11 – ‘உங்களுக்கு நீங்களேஉண்மையாக இருப்பது எவ்வளவு கடினம்தெரியுமா?’

முதல் பாகம் இறுதி இரண்டு அத்தியாயங்களின் மேலோட்டமான கருத்து இது தான்வாசர்கள் என்ன நினைப்பார்கள் என்று நிழல் மனிதன் தனக்கு தானேகேள்விக்கேட்டுக்கொண்டு இரண்டு பக்கங்கள் தன்னையே கிழித்துதொங்கவிடுகிறான்வாசகர்களாகிய நாம் இந்த நிழல் மனிதனை நிச்சயம் ஏதோ ஒருகட்டத்தில் செயலின்மைக்கு காரணங்களை அடுக்கும்கர்வம் கொப்பளிக்கும் ஒருமனிதனாக நினைத்திருப்போம். (என்னை போன்றவர்கள் நிழல் மனிதனின்தவிப்பைப் புரிந்து கொண்டு சுற்றி உள்ள மனிதர்களின் வாழ்க்கையை ஒரு நிமிடம்ஏளனமாக கூட நினைத்திருக்கக் கூடும்). நிழல் மனிதன் இவ்வாறாக வெளியாள்பார்வையிலிருந்து தன்னை கேள்விக்கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும்அளிக்கிறான்உள்ளுக்குள் இருக்கும் நேர்மையை சந்திக்கும் பொருட்டே இப்படிஎல்லாம் எழுதி பார்ப்பதாக நிழல் மனிதன் கூறுகிறான்இந்த புதினத்தை படிக்கும்வாசகர்கள் அனைவரும் சற்றேனும் துணுக்குறுவார்கள் இந்த வாக்கியங்களைபடிக்கும் போதுஉள்ளுக்குள் இருக்கும் இருண்ட உண்மைகளை சந்திக்கும் மன பலம்நிச்சயம் சாதாரண எண்ணங்களையும்பகட்டுகளை சுமந்து திரியும் மனிதர்களுக்குஇல்லைஅவர்கள் உள்ளார்ந்த எண்ணங்களை பற்றி எண்ணுவதற்கே அஞ்சுவார்கள்உதாரணமாகநம்மில் இருக்கும் உடைமையாக்கும் குணத்தையும்பொறாமைஉணர்வையும் எத்தனை பேர் வெளிக்கொணர்கிறோம்அவ்வாறு நாம் இருப்பதைகண்டு நம் மனம் பதட்டப்படுவதன்றி வேறு எதுவாக மாறுவதையும் அதைவெளிப்படையாக கூறுவதையும் விரும்புவதில்லைநிழல் மனிதன்நிழல்மனிதனாக அறியப்படுவதே அவனுடைய உள்ளொடுங்கிய நிழல் எண்ணங்களைஉணர்வுகளைசிந்தனைகளை நம்முன் வைப்பதனால் தான்வீரத்தின் உச்சம் என்பதுதான் உணர விரும்பாத எண்ணங்களைசமரசமின்றி உள்ளுக்குள் அதை ஆராய்ந்துஎதிர்கொள்வது தான்அந்த வகையில்என்னை பொறுத்தவரை நிழல் மனிதனைபோன்றவர்கள் தான் இந்த உலகின் மிக பெரிய தைரியசாலிகள்அவர்களின் நேர்மைமற்றும் கோழையின்மைக்கு முன் ஐம்புலன் மட்டும் திருப்தி அடையுமாறு வாழும்சாதாரண மனிதர்கள் அச்சப்படுவார்கள்ஆம்நிழல் மனிதர்களை கண்டு சாதாரணமனிதர்கள் அஞ்சுவார்கள்ஏனென்றால்அவர்கள் வாழும் வாழ்க்கையின் அடிப்படைநம்பிக்கையை அசைத்து பார்க்க வல்லது இந்த நிழல் வாழ்க்கையும் அதில் நடக்கும்தனிப்பட்ட உரையாடல்களும்எனக்கு தெரிந்து போலியும்சுய தம்பட்டமும்ஏமாற்றுவதில் பெருமைக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும் இந்த புதினத்தின் முதல்பாகத்தை படிக்கும் போது சிறிதளவாவது மன அழுத்தத்திற்கும்மனஅமைதியின்மையையும் அடைவான்இடையில் இவ்வாறாகவும் நிழல் மனிதன்எண்ணுகிறான்நாகரீகம் வளர வளரநாகரீகமடைந்த மனிதர்கள் அனைவருமேதங்கள் நிழலை பார்க்க அஞ்சுவார்கள்.
முதல் பாகத்தின் கடைசியில் இந்த எண்ண வலைகளோடு முடித்து கொண்டுநிழல்மனிதன் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு உச்சக்கட்ட காட்சிக்கு நம்மை அழைத்துசெல்கிறான்புதினத்தின் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க நடைமுறை செயல்கள்விவரிக்கப்பட்டு ஒரு கதையாக விரிவதால்என்னுடைய தொகுத்து கொள்ளலும்தன்னுரையாடலும் சற்று சுருங்கியே இருக்கும்முதல் பாகத்தின் ஒவ்வொருஅத்தியாயத்திற்கும் என்னுடைய அவதானிப்பும்அதை ஒட்டி எழுந்த எண்ணங்களும்கேள்விகளும் தேவை என்று பட்டதுஆனால்இரண்டாம் பாகம் வழக்கமானதாஸ்தயேவஸ்கியின் நாவலுக்கு உரிய ஒழுங்கில் அமைந்துள்ளதுஆகவேஅதில்கூறப்பட்டுள்ள முக்கிய தருணங்களையும்உணர்ச்சிமிகு இடங்களை மட்டும்எடுத்துக் கூறலாம் என்றிருக்கிறேன்

பாகம் 2, அத்தியாயம் 1 – ‘கூட்டத்தை விட்டு விலகிநிற்கும் மனிதர்கள் அந்த கூட்டத்திடம்அங்கீகாரத்தை எதிர் பார்க்கிறார்கள்

இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் உதிரி உதிரியாக நிழல் மனிதன்தன்னுடைய இளமை நாட்களை பற்றி கூறுகிறான்இளமையிலும் நம் நிழல் மனிதன்மிகவும் தனியனாகவும்தனக்குள்ளேயே உருவாக்கிக் கொண்ட உலகினைநம்புபவனாகவும் இருக்கிறான்தன்னுடைய அலுவலக வேலைகள் பற்றி கூறதொடங்குவது மூலம் அவனுக்கும் அலுவலக சகாக்களும் உள்ள உறவை பற்றியும்அவர்களை பற்றிய தன்னுடைய பார்வையையும் கூறிக்கொண்டே போகிறான்அலுவலக நண்பர்கள் அனைவரும் அவனுக்கு முற்றிலும் முட்டாள் போலதெரிகிறார்கள்தன்னை மிக உயர்நதவனாக எண்ணுகிறான்அவர்களும் இவனைஎந்த வித மரியாதையோடும்அணுக்கத்தோடும் நடத்துவதில்லைஇவ்வாறாக நிழல்மனிதனின் எண்ணங்கள் சென்றுகொண்டே இருக்கும் போது இடையிடையேமனிதர்களை பற்றிய அவதானிப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறதுஉதாரணமாகமனிதர்கள் எப்போதும் ஏதோ ஒன்றில் திறமைசாலியாக இருப்பதை நினைத்துமகிழ்வுறுகிறார்கள்ஆனால் ஏதோ ஒன்றில் அப்படி திறமைசாலியாக இருப்பவர்கள்வேறு சிலவற்றில் சராசரியை விட கீழிருக்கிறார்கள்ஒரு மனிதன் ஒருவாழ்க்கையை மட்டுமே வாழக்கூடும்அதுவும் அவனுக்கு ஏற்றார் போலசூழ்நிலைகள் அமைந்தால் மட்டுமேஒரு நிமிடம் இந்த கருத்தை மட்டும் எடுத்துகொண்டு ஆராய்ந்தால்சற்று திகிலாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்நம்மில்எவ்வளவு பேருக்கு நம்முடைய வாழ்க்கையில் திருப்தியும்நாம் ஏதோவொருவிஷயத்தில் சிறந்தவன் என்ற தற்பெருமையும் அகங்காரமும் இருக்கிறதுஅதிசயமாக அப்படி தோன்றும் மனிதர்களுக்கு அவன் வேறொரு விஷயத்தில்மிகவும் பின்தங்கியவனாக இருப்பதை நினைவுறுத்தி சமூகம் நிச்சயமாகஉடனுக்குடன் திருப்பி அவனை வீழ்த்தும்.
நிழல் மனிதனுக்கு உள்ள மிக பெரிய மன உளைச்சலே தன்னை தனியன் என்றுஅவனே நினைத்துக்கொள்ளும் தருணங்கள் தான்சுற்றி இருக்கும் நண்பர்களைமுற்றிலும் வெறுத்துமுட்டாள்கள் என்று முத்திரை குத்தும் இவன் ஒட்டு மொத்தரஷ்ஷிய மக்களின் மன அமைப்பை பற்றி ஒரு வெளிக்கோட்டு சித்திரத்தையும்அளிக்கிறான்உண்மையில் ரஷ்ஷிய மக்கள் கற்பனாவாதிகள் என்றும்அதேநேரத்தில் லௌகீகத்தை கைவிடாதவர்கள் என்றும் கூறுகிறான்எதார்த்தத்தைவிடாப்பிடியாக பிடித்து கொண்டிருப்பர்வர்கள்ஆனால் லட்சியத்திற்காகஉருகுபவர்கள்இந்த இரட்டை குணமுள்ள ரஷ்ஷிய மக்களை போன்று தான் தானும்இருக்கிறோமோ என்று ஓரிடத்தில் எண்ணுகிறான்நிழல் மனிதன் ஒருபோதும்தன்னுடைய சலிப்பான அலுவலக வேலையை மற்றவர் முன் பழித்ததில்லைஅவனுக்குள் எங்கோ ஓர் மூலையில் எதார்த்தம் பயமுறுத்திக்கொண்டிருக்கவேண்டும்அதே சமயம் இருத்தலியல் நெருக்கடி தரும் அர்த்தமில்லா வாழ்க்கையைபற்றியும் தொடர்ந்து எண்ணி வருகிறான்
நிழல் மனிதன் எவ்வளவு தான் சுற்றி இருக்கும் சமூகத்தை வெறுத்தாலும்அப்படிதன்னால் வெறுக்கப்படுகின்ற ஒன்று தன்னை உயர்வான இடத்தில் வைத்து மதிக்கவேண்டும் என்றும் எண்ணுகிறான்அவனுடைய அகங்காரம் அவனை எப்போதுமேமற்ற மனிதர்களை காட்டிலும் அவனை பெரியவன் என்று எண்ணச்செய்கிறதுபுத்தகம் வாசிப்பதிலேயே கணிசமான நேரங்களை கழிக்கும் இந்த நிழல் மனிதன்அவ்வப்போது அச்செயலையும் சலிப்பூட்டுவதாக எண்ணுகிறான்இதன்தொடர்ச்சியாகநிழல் மனிதன் பல குறிப்பிடமுடியாத கீழ்த்தரமான செயல்களிலும்ஈடுபடுகிறான்யோசித்து பார்த்தால் அவன் உண்மையிலேயே அப்படியானகீழ்த்தரமான செயல்களை செய்வதினூடாகவே தன் மீது மிகுந்த தன்னம்பிக்கைஅற்றவனாகவும்அதை ஈடுகட்டவே ஏதேனும் ஒரு சமூக மரியாதையையும்எதிர்பார்க்கிறான் என்று தோன்றுகிறதுதனக்கு இருந்த மோசமான இரவு வாழ்க்கைவழக்கத்தை கீழ்மையாக கருதும் சமூகத்திடம் தான் மதிக்கத்தக்கவன் தான் என்றுகோரும் ஒரு மனிதனின் அகங்கார பிடிவாதமாகவே படுகிறதுஉதாரணமாகநம்மைதவறு செய்தவர்களாக எண்ண வாய்ப்புள்ள ஒருவரிடம் நம்மை நாம் வலிந்துதவறற்றவனாக காட்டிக்கொண்டு அவரிடம் மரியாதையை எதிர்பார்ப்பது போல.
இனிமேல் புதினத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே நிழல் மனிதனின் இளவயதில் ஒளிந்திருக்கும் அகங்கார திமிரின் வெளிப்பாடு மட்டுமேஅதற்கானஎடுத்துக்காட்டாக ஒரு சிறிய சம்பவத்திலிருந்து தான் எந்த அளவுபுண்பட்டிருக்கிறோம் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறான்வெளியிலிருந்துபடிக்கின்ற எந்த வாசகனுக்கும் இந்த சிறிய சம்பவம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும்அயர்ச்சி தர கூடிய வாசிப்பாகவும் இருக்கலாம்ஆனால் நிழல் மனிதனின் மனஅலைச்சலை போன்று நாம் அனைவருமே அந்த அலைக்கழிப்பின் சிறிய அளவைஅனுபவித்து அதற்காக பல நாட்களாக நம்மை நாமே வருத்தி கொண்டுநிம்மதியின்மையுடன் இருந்திருப்போம்நிழல் மனிதன் அந்த சிறிய அவமானத்தால்தான் எதிர்கொண்ட அனைத்து மன நெருக்கடிகளையும்அதை நீக்க எடுத்துக்கொண்டஅனைத்து முயற்சிகளையும் விரிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறான்அவமான கணம்என்று நாமே ஒன்றை முடிவு செய்து கொண்டு அதை நேருக்கு நேர் சந்திப்பது சிறந்தவழியாஅல்லது அதை விட்டு விலகுவது சிறந்த வழியாநிழல் மனிதனைபோன்றோர்கள் தாங்கள் அவமான பட்டுவிட்டோம் என்று அவர்களுக்குள்தீர்மானமாக உறுதியாக நம்பிய பிறகுஅவர்கள் தொடர்ந்த சூழல் சிந்தனைக்குஉண்டாகிஅதிலேயே சிக்கி மேலும் மேலும் தங்களை தாங்களேகாயப்படுத்திக்கொள்கிறார்கள்நிழல் மனிதனும் அப்படியான ஒரு அவமானகணத்தை நேரில் எதிர்கொண்டு அதிலிருந்து விடுபடுவது என்று தீர்மானிக்கிறான்

பாகம் 2, அத்தியாயம் 2 – ‘உன்னதமும் அழகும்அதன் உச்ச நிலையை அடைவது பகல் கனவுகளில்மட்டும் தான்

அடுத்த அத்தியாயத்தில் வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தஅத்தியாயம்கனவுகள் காணும் வாழ்க்கையை நிழல் மனிதன் விவரிக்கும் போதுநமக்கும் நமது கனவு கண்டு சுகமாக கழிந்த நாட்களை பற்றி நினைக்காமல் இருக்கமுடியாதுகனவுகளினூடே நாம் அடையமுடியா இலக்கையும்அனுபவிக்கமுடியாசந்தோஷத் தருணங்களையும் அனுபவித்துக் கொண்டே இருப்போம்பகல் கனவுகாணும் தருணங்கள் அனைத்தும் சுயமைத்தனத்தின் உச்சப்பட்ச தருணங்களைஒத்தது எனலாம். இங்கே இரண்டு முக்கியமான மன பதிவுகள் பற்றி நிழல் மனிதன்கூறுகிறான்கனவு காணும் வாழ்க்கை நேரில் நடந்து விடாதா என்று ஏங்கும்அனைத்து மனிதர்களும் ஒரு கட்டத்தில் தான் வாழ்ந்து கண்டிருக்கும் இந்த உப்புசப்பில்லாத வாழ்க்கை சட்டென்று விலகி கனவில் வரும் சம்பவங்கள் அதுவாகவேதன்னை நிறைவேற்றி கொள்ளும் என்ற மூட நம்பிக்கையுடன் இருந்துவந்திருப்பார்கள்நிழல் மனிதன் இந்த ஓரிடத்தில் மட்டும் தான் நான் முன்னரேபகுத்து சொன்ன மனித பிரிவுகளில் முதல் வகுப்பினரோடு சேர்கிறான்இவன்இன்னும் நிறைய புள்ளிகளில் அந்த முதல் மனித வகுப்பினரோடு சேர்ந்தாலும்உள்ளார்ந்த அக செயல்பாடுகளில் இந்த மூடநம்பிக்கையின் மேல் மோகம் கொள்ளும்குணம் ஆழமானது
மற்றொரு முக்கியமான மனித அக அவதானிப்புநிழல் மனிதன் அவன் காணும்கனவுகளில் அவனே ராஜாஅவனே உலகின் வறுமைகளை போக்க வந்த ரட்சகன்அனைத்து வித சௌகரியங்களுடனும்அன்புடனும்அதிகாரத்துடனும் தான்இருப்பதாக பகல் கனவு காண்கிறான்கனவில் மட்டுமே அவனால் அதீத அன்பையும்பாசத்தையும் அனுபவிக்க முடிகிறது. ‘உன்னதமும் அழகும்‘ அதன் உச்சக்கட்டதருணத்தை அடைவது அவனுடைய கனவுகளில் மட்டும் தான்ஏன் என்று பார்த்தால்நம்முடைய எதார்த்த உலகில் அந்த உச்சக்கட்ட அன்பும் பாசமும் நேர்வதில்லைஅதற்கான காரணம் அது அபரிமிதமாகவும்மிகையானதாகவும் இருப்பதாகஎண்ணுகிறான்தனிப்பட்ட முறையில் அது ஒரு சரியான அவதானிப்பாக என்னால்கருத முடிந்தாலும்அதற்கும் மேல் வேறு ஏதோ ஒன்று இந்த எதார்த்த உலகில்ஒளிந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்ஜடப் பொருட்களால் ஆன இந்த உலகில்நாம் பகல் கனவில் கண்ட காட்சிகள் நேரில் அரங்கேறும் போது ஏனோ அதனைமுழுமையாக கனவில் அனுபவித்தார் போல் அனுபவிக்க முடிவதில்லைஇதற்கானஎன்னுடைய தனிப்பட்ட காரணமாக நான் சிலவற்றை கருதுகிறேன்ஒன்றுமுன்னரேஅது போன்ற சம்பவம் நம் வாழ்வில் அரங்கேறி விட்டதுமனதளவில்எந்த ஒருசெயலும் மனிதனுக்கு முதல் முறை நடக்கும் போது ஏற்படும் பரவசம் பின்னர்எப்போதும் கிடைப்பதில்லைஅதேசமயம்பல நாட்கள் இடைவெளிவிட்டுசெய்யப்படும் பல விஷயங்கள் நமக்கு மேலதிகமான உணர்ச்சியை வழங்குகிறதுஉதாரணமாக நீண்ட நாள் கழித்து பிடித்த பாடலை கேட்பதுஅல்லது பலமாதங்களுக்கு பின் சுயமைதுனம் செய்வது… கற்பனை காணும் மனிதன் தான்விரும்பும் காட்சியை எப்போதும் மனதில் அரங்கேற்றி பார்த்துக் கொண்டே இருக்ககூடும்அந்த உணர்ச்சி நிலை அவனுடைய மூளையினுள் ஏதோ ஒரு பகுதியில்தாக்கிக்கொண்டே இருக்கிறதுஆதலால்அவனுடைய உணர்ச்சியின் வெளிப்பாடுபருப்பொருட்கள் அடைந்து கிடக்கும் உலகில் நடக்கும் போதுமூளையில் முன்னரேரசமிழந்து அமைந்திருக்கும் உணர்ச்சி நிலைக்கு பின்னதாக போய் சேர்ந்துகொள்ளும்.
நம் நிழல் மனிதன் இவ்வளவு கனவுகள் கண்டு அதனுள்ளேயே மூழ்கி கிடந்தாலும்அவனுக்கும் ஏதோ ஒரு சமயத்தில் தன்னுடைய போர்வையை விளக்கிக் கொண்டுவெளி உலகுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதுமனிதனுக்குபொதுவாக எந்த ஒரு மகிழ்ச்சி தரக் கூடிய விஷயமும் சொற்ப காலத்துக்குள் அலுக்கதொடங்கிவிடுகிறதுஅது எத்தனை பெரிய தீவிரமான விஷயமாக இருந்தாலும் சரிஏதேனும் ஒரு புள்ளியில் அது அலுக்கவே அவன் வேறு ஒரு இடம் தேடி ஓடுகிறான்மறுபடியும் தனக்கு பிடித்த செயலை சில நாட்கள் இடைவெளிக்கு பிறகுமீண்டும்செய்யத் தொடங்குகிறான்இங்கே நம் நிழல் மனிதனும் இயல்புக்கு மாறாக வெளிஉலகிற்கு சென்று ஒட்டு மொத்த மனித குலத்தையே அணைத்துக் கொள்ளவிரும்புகிறான்ஆம்அவனுடைய எண்ணங்களில் மிகையான பேரன்பும்அனைத்துமனிதர்களையும் அணைத்து நேசித்து உறவாடும் தாகமும் தோன்றுகிறதுஅவனுக்குஅப்படி சட்டென்று தோன்றவே அவனுடைய அந்த மனித குலத்தின் மீதுபொழியவேண்டிய அனைத்தையும் ஒரே ஒரு மனிதர் மூலமாக கடத்தநினைக்கிறான்அவனால் அந்த பேரன்பை வேறு எவ்வாறாகவும் வெளிப்படுத்தஇயலாதுஒரு அனாதை இல்லத்துக்கு போய்அங்கிருக்கும் குழைந்தைகளுக்குஉணவு வழங்கியோசாலையில் முடமாய் கிடக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்குஉதவியோமன நலம் குன்றிய அமைப்புக்கு சென்று அங்கிருப்பவர்களின் நலன்மேம்படும் செயலையோநிழல் மனிதனால் செய்ய முடியாதுபெரிய செயல்களைசெய்ய முடியாத அல்லது செய்ய துணிவில்லாத நிலவறைக்குள் மட்டுமே வாழ்ந்துபழகிய மனிதன் அவன்அவனால் முடிந்தது ஒரே ஒரு மனிதனை அணுகுவது மட்டும்தான்இப்படியாக தன்னுடைய மேலதிகாரி ஒருவரை அவருடைய வீட்டுக்கு சென்றுபார்க்க முற்பட்டு அவருடைய அருகாமையில் கழித்த சிறிது நேரத்தில் அவருக்கும்அவருடைய நண்பர்களுக்கும் நடக்கும் சராசரி சலிப்பூட்டும் சம்பாஷணைகளின்விளைவால் மனித குலத்தின் மீது பிறகு அன்பு செலுத்தி கொள்ளலாம் என்றுதன்னுடைய நிலவறைக்கே திரும்பி விடுகிறான்

பாகம் 2, அத்தியாயம் 3 – ‘பிறரின் அன்பைஅடைவது என்பது ஒரு மனிதனின் அகங்காரதன்னிறைவு

இனி வரும் அத்தியாயங்களில் குறிப்பிட்டுக் கூறவோ நீண்ட விவாதங்கள் புரியவோபெரிதாக ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன்ஏனென்றால் அடுத்த சிலஅத்தியாயங்களில் ஒரு நீண்ட நாடகம் ஒன்று அரங்கேற போகிறதுஅந்த நாடகத்தின்மைய சரடாக நிழல் மனிதனின் அகங்காரம் மட்டுமே விவரிக்கப்படுகிறதுஅதைவாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்இடையிடையே உளவியலில் ஆழ்ந்தநோக்கு கொண்ட சில எண்ணங்கள் வாசிக்கக் கிடைக்கிறதுஅதை மட்டும் இங்குஎடுத்துக் கூறலாம்சிமோனோவ் என்ற நண்பனின் வீட்டுக்கு இரட்டைமனநிலையுடன் சென்று அங்கிருக்கும் நண்பர் கூட்டத்துடன் முன்திட்டமின்றிசம்பாஷணையில் கலந்து கொள்ள நேர்கிறதுநிழல் மனிதன் வீட்டிற்கு வருவதுசிமோனாவிற்கு பிடிக்கவில்லை என்று அவன் எண்ணினாலும் ஏனோ அந்தஎண்ணத்தால் கட்டுப்படாமல் சிமோனாவின் வீட்டிற்கு செல்கிறான்இங்கிருந்துஆரம்பமாகிறது நிழல் மனிதனின் ஆக்கிரோஷமானகொந்தளிப்பான மனநிலைஅதன் பிறகு அரங்கேற போகும் நாடகத்திற்கு இந்த நிலையிலிருந்து நூல்பிடித்துஉச்சக்கட்ட காட்சியில் சென்று முடிகிறது இந்த புதினம்.
கலந்துரையாடலில் ஒரு மனதாக கலந்து கொண்டு பள்ளி நண்பர்களிடம் பேசும்பொழுது அவனுடைய பள்ளி காலங்களை பற்றி விவரிக்கத் தொடங்குகிறான் நிழல்மனிதன்பள்ளி பருவத்திலிருந்தே இவனுடைய தனிமைபிறரை ஆட்டு மந்தைகூட்டமென நினைப்பதுகூட்டத்திலிருந்து விலகியே காணப்படுவதுஇவைஅனைத்தும் இருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்குவது என்று இவனுடைய தன்வரலாறு விரிவாக சொல்லப்படுகிறதுஇடையே ஓரிடத்தில் தன்னிடம் முழுமையாகசரணடைந்துவிட்ட ஒரு நண்பனை பற்றி விவரிக்கிறான்அந்த நண்பனின் அன்பைவென்றுவிட்ட பிறகு அந்த நண்பனிடமிருந்து தனக்கு கிடைக்க ஏதுமில்லை என்றுஎண்ணுகிறான்அதாவது ஒரு மனிதனின் அன்பை வெல்வதினால் அவனைவெற்றியடைந்துவிட்ட மனப்பான்மையும் அதன் பிறகு அந்த மனிதனும் அவனுடையஅன்பும் இனி துச்சமாக மட்டுமே கருதப்பட்டு வெறுக்கும் மனநிலையும் உருவாகும்உளவியலை ஒரு பத்தியில் சொல்கிறான் நிழல் மனிதன்இதை படிக்கும் போதே நம்மனதில் எண்ணற்ற மனிதர்கள் வந்து போவார்கள்இந்த உளவியலின் கருத்து படிபார்க்கையில் சில மனிதர்களால் நாம் வெற்றி அடைந்தவர்களாகவும்சிலமனிதர்களால் கூனி குறுகிய நிலையிலும்அன்புக்காக ஏங்கியும் இருந்திருக்கிறோம்வாழ்க்கையில் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் வெற்றி பெற்று வேறு பலஇடங்களில் தோல்வியும் அடைகிறார்கள்அன்பை பொறுத்தவரைஇது மிகவும்இயல்புமிகுந்த அன்பை செலுத்தும் ஒருவரை நாம் உதாசீனப்படுத்தி இருப்போம்அவர் காட்டும் அந்த அன்பே அந்த மனிதனை முழுமையாக வென்றுவிட்டதற்கானஅறிகுறிஅதே சமயம் நாம் மிகவும் கவரப்பட்டு வேறொரு மனிதனிடம் முழுமையாகஅன்பின் வழி தோல்வியும் அடைந்திருப்போம்இரண்டையும் அனுபவித்தநிலையிலேயே பக்குவம் வந்து நம்மை தட்டிக் கொடுத்து வருங்காலங்களில்மனிதனின் அன்பும் பேராபத்து மிக்கசூட்சுமமாக பெற்று வழங்க வேண்டிய ஒன்றுஎன்று தெரியவருகிறதுகாயங்கள் பல உள்ளுக்குள் இருந்தாலும் அனைவரும்நம்புவது கால ஓட்டத்தைத் தான்இங்கே நிழல் மனிதன் தன்னுடைய அகங்காரவேட்கையால் தேவை இல்லாத ஒரு நாடகத்தில் சிக்கிக் கொள்கிறான்பள்ளிபடிப்பிற்கு சம்பந்தமான எதிலும் வேலை செய்யக் கூடாது என்று முடிவெடுக்கும்நிழல் மனிதன் வேலைக்கு சேர்ந்தவுடன் பள்ளி பருவத்துடன் தன்னை முழுமையாகதுண்டித்துக் கொள்கிறான்ஒரு மனிதன் தான் மிகவும் நொந்த காலங்களிலிருந்துமீண்டு வர அவனுடைய அடையாளத்தை மாற்ற முனைகிறான்பழைய மனிதர்கள்பழைய சூழ்நிலைபழைய பொருட்கள் என்று அவன் வெறுக்கும் அந்தகாலகட்டத்திலிருந்து வெளி வர தடையாக இருக்கும் அனைத்து பழையவஸ்துக்களையும் விட்டு அகல முடிவெடுக்கிறான்பழைய அடையாளங்களைபுறந்தள்ளிவிட்டு புதிய அடையாளத்தை ஏற்று வாழ்க்கை நடத்தவே அவன்எண்ணுகிறான்கசப்பின் வலிமை அதுஅது நம்மை எங்கோ துரத்தி ஏதோ ஒருஇடத்தில் இருத்தி வைக்கும்

பாகம் 2, அத்தியாயம் 4 – ‘காழ்ப்பும்அவமானமும்இருப்பின் அங்கீகாரத்திற்கு காத்திருத்தலால்அடைவது

இதற்கு அடுத்து வரும் நீண்ட அத்தியாயங்கள் அனைத்தும் அகங்கார நாடகத்தைவிரிவாக நம் கண் முன் காண்பிக்கிறதுஇடையில் நிழல் மனிதன் தான்போகவிரும்பாத விருந்துக்கு போக வேண்டும் என்று தூண்டப்படுவதை பற்றிகூறுகிறான்நாம் ஒன்றை செய்ய வேண்டாம்அதில் ஏதோ இருண்மையும்அவமானமும் காத்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணினாலும்மனம் அந்தபாதைக்கே நம்மை வழி நடத்தி செலுத்துகிறதுஇங்கு நிழல் மனிதன் தனக்குள்சம்பாஷணையை நடத்திவிட்டு இரட்டை மனநிலையுடன் விருந்துக்கு செல்வதாகக்முடிவெடுக்கிறான்சுற்றியிருக்கும் நண்பர்கள் அவன் வருவதைவிரும்பாததினாலேயே அவன் விருந்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறான்மிகதெளிவாக தான் துன்ப படப்போகிறோம் அவமானத்துக்கு ஆளாகப் போகிறோம் என்றுதெரிந்தும் நிழல் மனிதன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த துன்பத்தைஅனுபவித்தே தீர்வது என்று முடிவெடுக்கிறான்
நிழல் மனிதன் அடுத்த நாள் அங்கு எல்லோரும் பேசிக்கொண்ட படி 5 மணிக்குசென்றுவிடுகிறான்ஆரம்பத்திலிருந்தே அவனுடைய நிம்மதியை துளைக்கும்செயல்கள் அரங்கேறுகின்றன. 6 மணிக்கு தான் அவர்கள் வந்து சேர்கிறார்கள்ஒருமணி நேரம் சங்கடத்துக்குரிய இடத்தில் என்ன செய்வது என்று தோன்றாமல்பணியாட்களின் பரிதாப பார்வையை பெற்றுக் கொண்டு ஒதுங்கி நின்றிருக்கிறான்அவர்கள் வந்த உடன் நிழல் மனிதனின் மறைமுக யுத்தம் அவர்கள் மேல்விடுக்கப்படுகிறதுநிறைய உரையாடல்கள்அனைத்துமே நேராகவோ அல்லதுகுறியீட்டின் மூலமாகவோ அல்லது அவன் அப்படி நினைத்து கொண்டதை போலவோஅவன் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததுசிமோனோ மற்றும்ஸ்வெர்க்கோவ் சூழ்நிலை சூடு பறக்கும் போதெல்லாம் அதை சற்று தணிய வைக்கவிரும்பினாலும் நிழல் மனிதன் நேரடியாக எதிர் தாக்குதலை தொடங்கிவிடுகிறான்மிதமிஞ்சிய போதையும் அதற்கு காரணமாக அமைகிறதுபோதையின் வலிமைஅவனை யோசிக்கவிடாமல் செய்யக் கூடாததை செய் என்று வற்புறுத்தி அவனைமிகவும் இழிந்த நிலைக்கு அனுப்புகிறதுதான் செய்வது மிகவும் அசட்டுத் தனமானசெயல் என்றும் தற்போதைய சூழல் முற்றிலும் தனக்கு உகந்தது அல்ல என்றுதெரிந்தும் நிழல் மனிதன் அடுத்தடுத்த தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும்உரையாடலில் முற்படுகிறான்அவன் மனமும்பேச்சும் அன்று சொன்ன படிகேட்பதாக இல்லைமனிதன் எப்போதுமே ஏதோ ஒரு அருவருப்பான சம்பவத்தில்நுழைந்து விட்ட பிறகு அதை விட்டு விலக அவனுக்கு விருப்பமே இருப்பதில்லைஅதிலும் தான் காயப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்ததும் அவன் மேலும் மேலும்காயப்படவே உந்தப்படுகிறான்அவனை அப்படி ஒரு துன்ப நிகழ்வுக்கு செலுத்துவதுஎதுவெறும் அகங்காரம் என்று சொல்லிவிடலாம்ஆனால் கூர்ந்து நோக்கினால்அந்த சூழ்நிலையில் இழந்த மரியாதையை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்றவெறியும் அவனுடன் சேர்ந்து விடுகிறதுஇது வெறும் ஆக்கிரோஷமானசூழ்நிலையில் மட்டும் நிகழும் மன உந்துதல் இல்லைதான் மரியாதையைஎதிர்பார்க்கும் இடத்தில் அன்பின் மூலமாக கூட விடாப்பிடியாக அதை பெற முயற்சிசெயகின்றனர் மனிதர்கள்நாம் சூழ்நிலையில் நுழையும் பாதையே மரியாதையைபெற துடிக்கும் அணுகுமுறை அமைகிறது என்று எண்ணுகிறேன்உதாரணமாகஉங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரிடம் நீங்கள் அன்போ அல்லது மரியாதையோவேண்டி நிற்கும் போது நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி மிகவும் முக்கியம்நீங்கள் பணிந்து அவரிடம் உரையாட முற்படும் போது அதன் வழியே சிறிது நேரம்உரையாடி இழந்த மரியாதையை மீட்க விரும்புகிறீர்கள்நீங்கள் பணிந்துபோவதாலேயே கூட நீங்கள் விரும்பும் மரியாதை துச்சமாக கருதப்படுவதற்குவாய்ப்பிருக்கிறதுஆனால் உங்களுக்குள் மிகப் பெரிய அளவில் ஒரு மன போராட்டம்நடந்துக் கொண்டிருக்கும்ஒரு இருண்மை உங்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும்ஏதோ ஒரு சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்த அன்பு உங்களுக்கு கிடைக்கும் பொழுதுசிறிது காலம் வெற்றி களிப்பில் திளைக்கும் நீங்கள் அதற்கடுத்த சில நாட்களில்அகங்கார தன்னிறைவு அடைந்ததாக கருதுவீர்கள்இதற்கு மாறாக கூச்சலுடன்தொடங்கிய மரியாதையை மீட்டெடுக்கும் உரையாடல்கள் நிச்சயம்வன்முறையிலோ அல்லது மாபெரும் சண்டைகளிலோ தான் போய் முடியும்ஆக்கிரோஷமான பாதை என்றுமே வேகமாக முன்னேறி அடுத்தடுத்த கட்டங்களுக்குசென்று உச்சத்தை வெகுவிரைவில் அடையும்பாதிக்கப்படப்போவது யாராகவேண்டுமானாலும் இருக்கலாம்இங்கு நிழல் மனிதன் எடுத்துக் கொண்ட பாதையும்ஒரு வகையில் வன்முறையின் பாதையேகுடியின் விளைவும் சேர்ந்துகொண்டதால்அவனுடைய கட்டுப்பாடு முற்றாக இழக்கப்பட்டு அவனுடைய செயல்கள்அனைத்தும் எந்த வித நாகரீக வடிகட்டியும் இன்றி அகங்காரத்தின் மேலெழும்பியசெயல்களாகவே இருந்ததுஅதன் மூலம் இயல்பிற்கு மீறின செயல்கள் நடந்துநண்பர்கள் அனைவரும் நிழல் மனிதனை முழுமையாக ஒதுக்கிவிட்டனர்நிழல்மனிதன் கணப்பிற்கும் வெளி அறைக்கும் நடந்து கொண்டே அவர்களை கவனித்துக்கொண்டிருந்தது மன அலைச்சலின் உச்சம் எனலாம்பல மணி நேரம் போதையால்தூண்டப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான்அவர்கள் தன்னைகவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருக்கிறான்அவன் என்னஎதிர்பார்க்கிறான்தன்னுடைய இருப்பை மட்டுமாவது அவர்கள் அங்கீகரிக்கவேண்டும் என்றாயாராவது கருணை காட்டி அவனை சரி செய்ய வேண்டும் என்றாஇவனுடைய வித்தியாசமான செயலால் அவர்கள் அனைவரும் கோபமேற்பட்டுஇவனை தாக்க வேண்டும் என்றாகடைசியில் சொன்னதை தான் அவன்எதிர்பார்த்திருக்கிறான்இந்த மனஅலைச்சலுக்கு இன்றே ஒரு முழுக்கு போட்டுவிடவேண்டுமென்று தீவிர முனைப்பில் இருக்கிறான்ஆனால் அவர்கள் பெரிதாகஒன்றும் கண்டுகொள்ளவில்லைஇவனின் அகங்காரம் மேலும் மேலும் புண்பட்டதேஅன்றி இவன் எதிர்பார்த்த ஒன்றுமே நடைபெறவில்லைஒரு வழியாக அவர்கள்அனைவரும் விருந்திடத்தை விட்டு செல்லும் போதுஎதனாலோ தூண்டப்பட்டஇவன் தான் இருக்கும் இடத்தில் இருந்து இன்னும் கீழ்மையான நிலைக்குசெல்கிறான்சிமோனாவிடம் சென்று 6 ரூபிள் பணம் கேட்கிறான்நாடகத்தின்உச்சக்கட்ட காட்சி எனலாம்இதுவரை தான் மேற்கொண்ட எந்த பகட்டு செயலும்நிறைவேறாததானால் அடிமட்டத்துக்கு இறங்கி செல்கிறான்இங்கே நிழல் மனிதன்எப்படியாவது இந்த மாலை நேர நாடகம் அனைத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளிவைக்கவே ஆசைப்படுகிறான்குறைந்தது அடிபணிந்தாவது அவர்களுடன்சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்ஒரு முடிவைமட்டுமே அவன் மனம் ஏங்கிக்கொண்டிருக்கிறதுஅது வன்முறை அல்லதுசமாதானம் மூலமாகவோ நடைபெற்று ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றுஎண்ணுகிறான்மாறாக அந்த நண்பர்கள் அவனை மேலும் மேலும் அவனுடையஅகங்கார வெறியை தூண்டவே செய்கிறார்கள்அவன் மனதில் முடிவு பெறாமல்அலைச்சலும் தொந்தரவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதுநண்பர்கள் ஒருவனைமுழுமையாக தோற்கடித்து கொண்டிருக்கிறோம்அவன் தங்களை காட்டிலும்மிகவும் சிறுமையானவன் என்று எண்ணியிருப்பார்கள்ஒரு மனிதனை மீண்டும்மீண்டும் தோல்வி அடைய செய்வதை விட மிகுந்த மகிழ்ச்சி தர கூடிய செயல் எதுசிமோனோவ் எரிச்சலுற்றவனாக நிழல் மனிதன் மீது காசை விட்டெறிகிறான்இதைவிட அவன் காயப்பட வாய்ப்பில்லை.  

பாகம் 2, அத்தியாயங்கள் 5,6 & 7 – ‘கீழ்மையிலும்காழ்ப்பிலும்தாழ்வுணர்ச்சியிலும் உழலும் போதுநம்மை விட கீழ்மையில் இருப்பவரை நாம் சந்திக்கவிழைகிறோம்

அடுத்த அத்தியாயத்திலிருந்து ஆரம்பமாகிறது லிசா வின் பக்கங்கள்நண்பர்களைஎப்படியாவது நேருக்கு நேர் சந்தித்து மோதி விடுவது என்ற முடிவுக்கு வந்த நிழல்மனிதன் அங்கிருந்து ஒரு இரவு களியாட்ட இடத்திற்கு செல்கிறான்ஒரு குதிரைஓட்டியை பிடித்துக் கொண்டு அவனை ஏகத்துக்கு திட்டியும்அடித்தும் விரைவாகதான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல சொல்கிறான்இடையில் சிலமனமாறுதல்கள் அவ்வப்போது வந்து போனாலும் இறுதியில் சண்டை போட்டுவிடுவது தான் உகந்த வழி என்று நினைத்துக் கொள்கிறான்அங்கு சென்ற பிறகு தான்தெரிகிறது அவர்கள் அங்கே இல்லை என்றுலிசாவை தற்செயலாக நோட்டம்விடுகிறான்அதி உக்கிர மனநிலையில் இருக்கும் ஒருவன் திடீரென்று ஓர் அழகானகாட்சியை பார்க்கும் போது ஏற்படும் நிலைதடுமாற்றம்அந்த கொந்தளிப்பானமனநிலையிலிருந்து வெளிவர ஏதோ ஒரு அழகு நமக்கு துணைபுரிகிறதுலிசாஅப்படிப்பட்டவளாக நிழல் மனிதன் முன் நிற்கிறாள்அவனும் அவளின் அழகைமிகவும் ரசிக்கத் தொடங்குகிறான்அவள் மேல் ஏனென்று தெரியாமல் ஒரு இறக்கஉணர்வும் ஏற்படுகிறதுஅவள் தப்பித்தவறி இங்கு வந்தவளாக கருதுகிறான்நாவலின் அடுத்த அத்தியாயம் உச்சக்கட்ட அன்பின் வெளிப்பாடாகவும்உணர்வெழுச்சிமிக்க பிம்பங்களின் நிறையாகவும் அமைந்திருக்கிறதுலிசாவின்மேல் ஏற்பட்ட கருணையினால் அவளிற்கு நல்லுபதேசங்கள் சொல்லஆரம்பிக்கிறான் நிழல் மனிதன்மிகுந்த அவமானமடைந்த அவனுக்கு லிசா போன்றஒரு கீழான தொழிலில் இருக்கும் பெண் ஏனோ ஒரு வடிகாலாக அமைகிறாள்நாம்மிகவும் புண்பட்டிருக்கும் போதோ துன்பங்களை மிகுதியாக சுமந்து கொண்டு திரியும்போதோ நம்மில் பலர் கூறும் முக்கிய ஆறுதல், ‘உலகில் நம்மை விடபரிதாபத்துக்குரியவர்கள் இருக்கிறார்கள்உனக்கு ஏற்பட்டது ஒரு சிறிய சறுக்கு தான்‘. அந்த ஆறுதல் வார்த்தைகளே நம்மை ஏதோ ஒரு அனாதை இல்லத்திற்கு நன்மைசெய்ய வழிநடத்துகிறதுகூர்ந்து நோக்கினால்நம்மை விட உலகில் வேதனை படும்மக்களை பார்ப்பதினால் நமக்கு உள்ளூர உண்மையிலேயே ஒரு சந்தோஷமும் மனநிம்மதியும் ஏற்படுகிறது என்றே படுகிறதுசமூக அந்தஸ்தின்  படிநிலையில் நாம்பலரை விட மேலே இருக்கிறோம் என்ற உணர்தல் நமக்கு வர வேண்டியே நாம்இவ்வாறான நற்செயல் என்று சொல்லப்படும் சுயநலசெயலுக்கு (உண்மையிலேயேஉந்தப்படுகிறோம்படிநிலையில் தற்போது உயரத்தில் இருக்கும் நிழல் மனிதன்எப்படியாவது லிசாவை தன் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறான்இன்னொரு மனிதனை பேசி பேசியே சமாதானம் செய்து அவரை தன் வழிக்கோதான்மேற்கொள்ளும் செயலுக்கோ அழைத்து வருவது மிகப்பெரும் வெற்றியெனகருதப்படுகிறதுஒரு காப்பீட்டு முகவரின் சில நிமிடநேர மனத்திருப்தி போல
லிசா ஆரம்பத்தில் சற்று மெத்தனமாக நிழல் மனிதன் பேசுவதைகேட்டுக்கொண்டிருக்கும் போது அவளை நிச்சயம் தன் வழிக்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறான்இடையில் நிறைய வாழ்க்கை பாடங்களைஉணர்ச்சிமிக்க மொழியில் கூறுகிறான்மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் கூட அன்புஒன்று மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையை மென்மையானதாக நடத்திவிடலாம்அது காதலின் மூலமும்வருகின்ற நல்ல கணவனின் மூலமும் சாத்தியம்என்று எடுத்துரைக்கிறான்அவளை இந்த கீழான வாழ்க்கையிலிருந்து வெளியேகொண்டு வர மேம்பட்டதாக கருதப்படும் அனைத்து வாழ்க்கைசாத்தியக்கூறுகளையும் எடுத்து சொல்கிறான்குறைந்த பட்சம் ஒரு குடும்பமும்அன்பும் காதலும் வைக்க கூடிய மனிதரும் எவ்வளவு முக்கியம் என்று வலியுறுத்திகூறுகிறான்இங்கே நிழல் மனிதன் விவரிக்கும் கணவன் மனைவி வாழ்க்கை பற்றியதகவல் ஒரு பக்கத்திற்கு நீள்கிறதுஇந்த அத்தியாயத்தில் மேலதிக உணர்வெழுச்சிகொள்ள வைக்கும் இடம் இதுகடைசியில் லிசா ஓரளவுக்கு அவன் கூறுவதை உள்வாங்கிக்கொண்டு அவனிடம் ஏதோ சொல்ல முற்படுகிறாள்ஆனால் ஏதோ ஒன்றுஅவளை தடுக்கிறதுதனது அந்தரங்க அடுக்குகளை தொட ஒருவன்  நம் முன்இருக்கிறானே என்ற கூச்சம் தான். ‘அவள் அப்படிதான்‘ படத்தில் ஸ்ரீப்ரியா தனதுபால்ய கால துன்பங்களை கமலிடம் பகிர்ந்து விட்டுகமலை கடினமாக தாக்கும்ஓரிடம் வரும்எந்த மனிதனும் தனக்குள் இருப்பதை மற்றவர்கள் முழுதாக தெரிந்துகொள்ள கூடாது என்றே எண்ணுகிறான்அதுவும் அந்த அந்தரங்க ரகசியங்கள்ஏற்கனவே நிறைய காயங்களை ஏற்படுத்தி இருக்கலாம்அதை நோண்டி நோண்டிஒருவர் நம் அகத்தினுள் சென்று எளிதாக கண்டுபிடிக்கும் தருணம் நம்மால் தாங்கமுடியாததாக அமைகிறதுநம்முள் யாருக்கு தான் நாம் முழுமையாக உள்ளே வரஅனுமதி கொடுத்திருக்கிறோம்
லிசா இப்போது அவனை படிப்படியாக தன்னுள் அனுமதிக்கிறாள்அவன் கூறுவதைஎதிர்கொள்கிறாள்நிழல் மனிதன் அடுத்தடுத்த சொற்பொழிவுகளுக்கு தயாராகிறான்அன்பு எவ்வளவு வலிமையானது என்றும் இங்கே வருபவர்களில் எவ்வளவு பேர்அவள் மீது அன்பாக இருக்கிறார்கள் என்றும் துளைத்தெடுக்கிறான்லிசாஅனைத்தையும் முதல் முறையாக எதிர்கொள்வது போல் அவனுடைய கேள்விகளைபற்றி யோசிக்கத் தொடங்குகிறாள்அவளுடைய இருப்பு இந்த உலகில் என்னஅவள்இந்த இருட்டு வாழ்க்கையையே நடத்தி கொண்டிருந்தாள் என்றோ ஒருநாள் அவள்மரணம் அடைந்து அவள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகக் கூடும் என்றுஅவளை அச்சுறுத்துகிறான்மனித இருத்தலின் வினாவாக அது அவளுக்குள்முளைக்கிறதுஅன்பென்று ஒன்று இல்லையேல் உலகில் வாழ்வது கடினம் என்றகருத்தை அவளுக்கு புரியும்படி கூறுகிறான்லிசாவின் பார்வையில் பார்க்கும் போதுஇந்த கேள்விகளும் தத்துவார்த்த அல்லது வாழ்க்கை சார்ந்த இருத்தலியல்தர்க்கங்களும் நிச்சயம் அவளுள் முன்னரே இருந்திருக்க வேண்டும்ஆனால்வெளியாள் ஒருவர் அவற்றை வெளிப்படையாக கேட்கும் போது மட்டுமேகேள்விகளின் கூர்மையை உணர்ந்து கொண்டு அதற்கான செயல்களில் இறங்கஆரம்பிக்கிறாள்பொதுவாக இது தன்னெழுச்சி இல்லாத மனிதர்களின் சுபாவமாகஇருக்கலாம்அல்லது மிகவும் தாழ்வுணர்ச்சி மற்றும் சோம்பேறி தனம் கொள்ளும்குணமாகவும் இருக்கலாம்இவரை போன்றவர்களுக்கு பழக்கம் என்பது ஒருவியாதியை போல் அமைகிறதுலிசாவும் தனக்கு இந்த இருட்டு வாழ்க்கை பழகிவிட்டது என்கிறாள்பழக்கப்பட்ட அனைத்துமே நம்முடைய மேன்மையானவாழ்க்கைக்கு உகந்ததா என்ற கேள்வி எஞ்சி நிற்கிறதுலிசா போன்ற ஒரு உயிருக்குபுறவய ஆறுதலும்தூண்டுதலும்அன்பும் எப்போதுமே தேவை படுகிறதுஅதன்மூலம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் மாறுதலை உணர்கிறார்கள்மேம்பட்டவாழ்க்கையை பற்றி குறைந்தது கனவாவது காண்கிறார்கள்ஒருவழியாக லிசாவைதன் பக்கம் இழுத்து வந்துவிட்டான் நிழல் மனிதன்லிசா தனக்கு கொடுக்கப்பட்ட ஒருகாதல் கடிதத்தை அவனிடம் காண்பிக்கிறாள்தன் மீதும் அன்பு செலுத்த ஓர் உயிர்இவ்வுலகில் இருக்கிறது என்பதை பெருமையுடன் காண்பிக்கும் தருணம்விடைபெறும் போது லிசா எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டிற்கு வரலாம் என்றுமுகவரியை கொடுத்து விடுகிறான்இந்த ஒரு செயலே அடுத்த அத்தியாயத்தின்மூலமாக அமைகிறதுஉருகி வழியும் மன நிலையில் இருக்கும் ஒருவனதுஉணர்ச்சிகர சிந்திக்காமல் செய்யும் செயல் தான் இந்த முகவரி பரிமாற்றம் என்றுநிழல் மனிதன் பின்னே உணர்கிறான்

பாகம் 2, அத்தியாயம் 8 – ‘எதார்த்தம் வாழவிரும்பும் வாழ்க்கையை கண்டுபுன்முறுவலிடுகிறது’

நிழல் மனிதன் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுகிறான்ஆனால் அவனுள் ஏதோஒன்று அழுத்திக்கொண்டே இருக்கிறதுஅது என்ன என்பது விளங்கவே அவனுக்குசிறிய நேரம் தேவைப்பட்டதுசிமோனாவிடம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியாயிற்றுஅடுத்து லிசாவை பற்றிய நினைவுகள் தான்லிசாவிடம் அவன் ஆற்றியசொற்பொழிவுகள் பற்றி மீட்டெடுத்துக்கொண்டே இருக்கிறான்தான் கூறியஅனைத்தும் உண்மையா அல்லது வெறும் முகமூடி அணிந்து கூறிய வார்த்தைகளாஎன்ற அடிப்படையான கேள்வி அவன் முன் சுழன்று கொண்டே இருந்ததுமிதமிஞ்சியபோதை கொடுத்த உந்துதலால் தான் இப்படி பேசமுடிந்ததாஆனால் அவன் உள்ளம்உருகி உண்மையான வெளிப்பாடாக தானே அனைத்தும் லிசாவிடம் சென்றதுஇந்தஇடத்தில் நிழல் மனிதனின் இந்த தடுமாற்றத்துக்கு முக்கிய காரணமாக அவனுடையசொந்த வாழ்க்கைக்கும் அவனுடைய சொற்பொழிவும் ஒன்றுக்கொன்றுமுரண்படுவதனால் இருக்கலாம்யார் மீதும் அன்பு செலுத்தாமல்தன்னந்தனியனாகவாழ்ந்து கொண்டு பிறரை விட தான் மேலானவன் என்ற சுயநம்பிக்கை கொண்டுபிறரால் அவமதிக்கப்பட்டு வாழும் இவனிடமிருந்து வந்த லிசாவுக்கான அறிவுரைகள்அனைத்தும் அவன் வாழ்க்கையுடன் முரண்படுகிறதுஅவன் உள்ளம் பொங்கவார்த்தைகள் அனைத்தும் முகமூடியின்றி வந்ததாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்ஒரு வேளை நிழல் மனிதன் அவன் வாழ துடிக்கும் வாழ்க்கையாக கூட இருக்கலாம்அவனும் லிசாவை போன்ற ஒரு அடிமட்ட நிலையில் தான் இருக்கிறான்ஆனால்லிசாவிடம் தன்னை வேறொருவனாக காண்பிப்பதன் மூலம் அவன் அந்த நிகர்வாழ்க்கையையே வாழ்ந்துவிட்டதாக கருதுகிறான்வீடு வந்து சேர்ந்தவுடன்இருத்தலியல் உண்மை அவன் ஆன்மாவை கிழிக்கிறதுதாங்கவொண்ணா மனவேதனையில் அலையவைக்கிறதுதான் கூறியதற்கும்தான் இருக்கும் நிலைக்கும்உள்ள வேறுபாடு அவன் கண்முன் விரிகிறதுதான் மிகைப்படுத்தி கூறிவிட்டோம்என்றுணர்கிறான்வீட்டு வேலைக்காரனிடம் உள்ள தனது உறவை பற்றி விரிவாகசொல்லும் நிழல் மனிதன்தான் ஒரு முகமூடி அணிந்தே லிசாவிடம் அனைத்துபிரசங்கத்தையும் வழங்கியதாக கருதுகிறான்தான் கூறும் அனைத்தையும் கேட்கும்திறந்த மனதாக வார்த்தைகளுக்கு ஏங்கி வாழ்க்கை தடத்தையே மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரு மனித உயிராக லிசா இருந்திருக்கிறாள்இன்னொரு புறம்பார்க்கையில்நிழல் மனிதன் லிசாவிடம் கூறிய அனைத்தும் தனக்கு தானேகூறிக்கொண்டதாக கூட இருக்கலாம்சங்கடமும்வேதனையும்அவமானமும்உள்ளே புகும் வேளையில் அதை எளிதாக விரட்ட நமக்கு இருக்கும் வழி நம்மைநாமே சமாதானம் சொல்லிக் கொள்வது தான்புதினத்தின் முற்பகுதியில் கூறப்பட்டகற்சுவர் போல கருதிக்கொள்ளலாம்அந்த கற்சுவரை தனக்குள் எதிர்கொண்டு அதைவிதியின் செயலாக கருதி அதை கடந்து விடுவது ஒருபுறமாக இருக்கட்டும்தனக்குள்சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் அனைத்தும் பிறரிடம் சொல்லும் போது அதுஇன்னும் அழுந்த பதிகிறதுமனிதன் எப்போதும் தன்னை ‘இதுவாக‘ காண்பித்து அதன்மூலம் திருப்தி அடையவே விரும்புகிறான்பேருந்தில் அருகில் அமரும் முதியவர்ஒருவர் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து துயரங்களையும் பகிர்ந்து அதை தான்எப்படி மன வலிமையுடன் கடந்து வந்தேன் என்று கூறும் போதே அதில் எத்தனைசதவீதம் உண்மை என்பது தெரியாதுஇறுதியில் இன்னொரு மனிதரின் முன் தன்னைஒரு வீர சாகசனாகமுதிர்ந்த மனிதனின் இயல்புகளோடு காண்பித்துக்கொள்ளல்மட்டுமே இங்கு நிகழ்கிறதுநிழல் மனிதன் லிசாவை எதிர்பார்க்கிறான்அவனுடையவீட்டின் நிலைமை லிசாவிடம் காட்டிய முகத்திற்கு நேர்மாறானதுமுகமூடிஎப்போது வேண்டுமானாலும் கிழியலாம்.
எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் அவன் சற்று எதிர்காலத்தில்பயணப்படுகிறான்லிசாவிற்கு தான் ஒரு ஆதர்சமாக மாறுவதாகவும் அதன்மூலமாகவே அவளுடைய அன்பையும் காதலையும் பெற்று அவள் காதலைஉணராதவாறு நடிப்பவனாகவும் தன்னை கற்பனை செய்து கொள்கிறான்படிநிலையில் ஒருவரை விட தான் மேலே இருப்பதாலேயே தன்னை அவர்விரும்பக்கூடும் என்ற எளிய மனிதனின் சிந்தனைலிசாவை தன் வழிக்குக் கொண்டுவந்து அவளை ஒருவிதமான அடிமையாக்கி தன் செயல்களில் பெருமிதம் அடையும்கனவுக்காட்சிகளின் விளைவே நிழல் மனிதனின் தற்போதைய எதிர்காலகனவுகளுக்குக் காரணம்இப்படியாக இருவேறு மனநிலையிலும்உழன்றுகொண்டிருக்கும் நிழல் மனிதன் ஒரு கட்டத்தில் லிசாவின் மீதும்அவளுடைய வருகையின் மீதும் பேறெரிச்சல் கொள்கிறான்நம் மனதைஅலைக்கழிக்க வைத்த எவரையும் நாம் வெறுப்பது இயல்பேமற்றவரின் தவறுஎன்று எதுவுமே கண்ணில்படாத போதும் தன்னுடைய தேவைக்கு மீறியசுழற்சிந்தனையினாலேயே அடுத்தவரை வெறுப்போடும் அவரே அந்த கட்டற்றசிந்தனையின் மூலம் வரும் வேதனைக்கும் காரணம் என்று நினைத்து பகைமையைவளர்த்துக்கொள்வோம்ஒருவழியாக லிசா வந்தே விடுகிறாள்அதுவும் நிழல்மனிதன் சற்றும் எதிர்பாராத நேரத்தில்தன்னுடைய காரியதரிசியிடம் தான்அவமானப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில்நிழல் மனிதன் லிசாவிடம்கட்டிவைத்த அனைத்து கோட்டையும் ஒரே நொடியில் சரிந்துவிடுகிறதுஅந்த காயம்ஆழம் சென்றுபதிந்து அவனை நொந்துகொள்ளவும் கோபம் ஏற்படவும் செய்ததுஅனைத்திற்கும் காரணம் லிசா தான் என்று முழுமையாக நம்பினான்

பாகம் 2, அத்தியாயம் 9 – ‘எது நல்லதுமலிவானசந்தோஷமாஅல்லது உன்னதமான வேதனையாபெருந்துயர் கண்டு அஞ்சாமல் அதை சுமந்துதிரிதலும் உன்னதமே.’

லிசாவிடம் தன்னுடைய அனைத்து எண்ணங்களையும் எந்தவொரு வடிகட்டியும்இல்லாமல் நிலைதடுமாற்றத்துடன் கூறுகிறான்அன்றிரவு ஏன் அங்கு வந்தேன்ஏன்அவளிடம் அப்படியான அறிவுரைகளும் வாழ்க்கை பாடமும் கற்பித்தேன் என்றுஒன்று விடாமல் அனைத்தையும் கொட்டி தீர்க்கிறான்சமூக படிநிலையில்கீழிருக்கும் அவளை ஒரு கருவியாக உபயோகித்து தன்னுடையஅவமானங்களையும் துன்பங்களையும் அவள் மீது ஏற்றி மகிழ்ச்சி அடைந்ததாககூறிக்கொண்டே செல்கிறான்லிசா எதுவும் புரியாமல் அனைத்தும் ஏதோ மாயைபோல் நிற்கிறாள்நிழல் மனிதன் தன்னுடைய விளக்கத்தை அடுக்கிக்கொண்டேபோக லிசா ஒரு கட்டத்தில் தலையணையில் முகத்தை பதித்துஅழத்தொடங்குகிறாள்அப்போது நிழல் மனிதனுக்கு லிசா மீது இரு வேறுஉணர்வுகள் வந்து செல்கின்றனஒருபுறம் பேரிரைச்சலுக்கு காரணமானவள்மற்றொரு புறம் அவள் மீது கொள்ளும் இனந்தெரியாத அன்புஒன்று மற்றொன்றைமீறுகிறது
நாவலின் கடைசி அத்தியாயம்புதினத்தின் முடிவு என்றுமே அந்த புதினத்தைவேறொரு நிலைக்கு தூக்கி நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்நாவலின்தொடக்கத்திலிருந்து வரும் உளப்பகுப்பாய்வு பதிவுகளும்மனித மனத்தை பற்றியஆழ்ந்த தேடலும்வெவ்வேறு காட்சிகள் தந்த மனித இயல்புகளும் முடிவின்எதிர்பார்ப்பை அதிரிகரிக்கிறதுகாதல் என்பது ஒருவரை கட்டுப்படுத்துவதின்றிவேறல்ல என்ற எண்ணம் நிழல் மனிதனின் எண்ண ஓட்டத்தில் வந்து மறைகிறதுதன்னால் ஏன் லிசாவை காதலிக்க முடியாது என்று தனக்குள் விவாதம் செய்துகொள்கிறான்இங்கேயும் அவன் எண்ணங்களில் லிசா படிநிலையில் கீழே தான்இருக்கிறாள்தன்னுடன் ஒரு படி கீழே இருக்கும் ஒரு ஜீவனை நாம் என்றுமேமனமுவந்து காதலிக்கவே முடியாது என்பது தான் உண்மை போலஇங்கு லிசாஎன்பவள் வெறும் சமூக படிநிலையில் கீழிருக்கிறாள் என்பதை விட அவளிடம்வெளிப்புற அழகை விட வேறொன்றும் குறிப்பிட தகுந்தவாறு இல்லை என்றும் நிழல்மனிதன் எண்ணுகிறான் என்றே தோன்றுகிறதுதான் மேலே இருந்து கொண்டு கீழேஇருக்கும் அவர்களை கழுத்து வலிக்க குனிந்து பார்த்துக் கொண்டு அவர்கள் மீதுகருணையும்நிதானமான அன்பும்அவர்களின் வாழ்க்கையை நடத்த அறிவுரைகள்வழங்கிக்கொண்டிருக்க மட்டுமே முடியுமே அன்றி அவர்களை அகஎழுச்சிக்கொண்டுகாதலிக்க முடியாதென்பது வெறுக்கத்தக்க உண்மை தான்நிழல் மனிதன் இதன்பிறகு லிசாவிடம் 5 ரூபிள் பணத்தையும் கொடுக்கிறான்லிசா உடைந்து போகிறாள்பணத்தை அங்கேயே வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்நிழல்மனிதன் சற்று நேரம் கழித்தே அவள் வெளியேறியதை அறிகிறான்தகாத காரியம்செய்த்துவிட்டதாக வருந்தி சாலையில் இறங்கி அவளை தேடி ஓடுகிறான்ஆனால்அவள் தட்டுப்படவே இல்லைஅவளை கண்டால் அவள் கால்களை தொட்டுமுத்தமிடவேண்டும் என்று எண்ணுகிறான்அடுத்த நிமிடமேஅவள் மீது எவ்வளவுநாள் உண்மையாக அந்த அன்பை செலுத்த முடியும் என்று திசை மாறுகிறான்லிசாஇன்று இந்த அவமானத்துடன் போகட்டும்அவளுடைய வாழ்க்கையில் இந்தகாயமும்வேதனையும்அவமானமும் நிச்சயம் தேவை என்று தனக்கு தானேகூறிக்கொகிறான்வாழ்வில் அடுத்து வரும் அனைத்து துயர சம்பவங்களின் போதும்இந்த அவமானம் நிரம்பிய நாள் நினைவில் மேலோங்கி நின்று அவளை இன்னும்வலிமையாக்கும் என்று தன்னை அமைதிப்படுத்த முயல்கிறான்ஒரு துயரை கடக்கஅதை காட்டிலும் பெரியதொரு துயர் நமக்கு தேவை படும்கடந்த காலத்தில் நாம்அனுபவிக்கும் பேரிடி வாழ்க்கையை நாம் எளிதில் கடக்க உதவும்எந்த ஒருநெருக்கடியான நிலையிலும்பேரிடியின் தாக்கம் நம்மை அமைதியாகவும்உடைந்துகொள்ளாமலும் பாதுகாக்கும்அனுபவத்தின் வலிமை இது என்றேநினைக்கிறேன்.
எது நல்லதுமலிவான சந்தோஷமாஅல்லது உன்னதமான வேதனையா?” நிழல்மனிதனின் அடிப்படையான இந்த கேள்வி என்னை தனிப்பட்ட முறையில் தீவிரமாகசிந்திக்க வைத்ததுஒவ்வொருவரும் வலிந்து துன்பம் தரும் செயல்களில்ஈடுபடமுடியாதுஆனால் இயல்பாக மனிதர்கள் நடந்துகொள்ளும் போது சந்திக்கும்அனைத்தும் துயரங்களையும் கண்டு அஞ்சாமல் அதை முழுதாகஉள்வாங்கிக்கொள்ளுதல் மிகவும் முக்கியம் என்றே கருதுகிறேன்உள அழுத்தம்வரைக்கும் செலுத்தும் எந்தவொரு பெருஞ்சோகமும் மனித மனத்திற்கு மாபெரும்அனுபவமாகும்நிழல் மனிதன் மட்டும் அல்ல அனைத்து மனிதர்களுக்கும்அவர்களுடைய மதிப்பீட்டின் படி ஒரு பெருஞ்சோகத்தை சுமந்து கொண்டுதிரிவார்கள்அந்த சோகம் தாங்கும் மன வலிமையே இவ்வாழ்க்கையை நடத்திகொண்டிருக்கிறதுவாழ்க்கை என்பது பெருமுயற்சி எடுத்து வாழவேண்டியதுநம்மை அறியாமலேயே நம்மை சூழ்ந்திருக்கும் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள்அனைத்தையும் தளர்த்திவிடுவோம்எவராக இருந்தாலும் ஒரு நிமிடம்நிலைகொள்ளாமைக்கு தள்ளப்படுவர்சுதந்திரம் என்பது ஒரு சாபம்மனிதனாகஇருக்கும் வரையில் அவனுடைய வாழ்க்கையை நடத்த ஏதோ ஒரு விதத்தில்கட்டுப்பாடுகளும்தடைகளும் வேண்டும்சோகம் மீட்டெடுக்கும் பெருந்துயர்வேண்டும்அதை கண்டு அஞ்சி திரும்பி போகிறவர்கள் நிறைய பேர்அவர்கள்வாழ்க்கை முழுதும் எந்த உயிர்ப்போடும் இல்லாமல் வெறுமனே வாழ்ந்துவிட்டுசெல்லக்கூடிய அன்றாட மனிதர்கள்நிழல் மனிதனை போன்றோர்கள் துணிந்துதன்னுள் ஏற்படும் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அதை நேர்மையாகஆராய்ந்து அதற்கு எதிர்வினையாற்றி இந்த வாழ்க்கையை உயிர்ப்போடுநிலவறையில் வாழும் ஓர் உன்னத நிழலை நேருக்கு நேர் சந்தித்து வாழும்மனிதர்கள்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....