மொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,
தஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.