துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.4.11

இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும்,  கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,
நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்ய ...
விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00
ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
முன் பதிவுத் தொகையை
‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.
நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.
எண்; 1013256227
இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..
உடுமலை.காம்.


காண்க இணைப்பு;

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்



3 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு அப்பாதுரை எழுதிய கடிதம்;
கல்லூரியில் crime and punishment, idiot இரண்டுமே படித்திருக்கிறேன். தேர்வுக்காகப் படித்த சுருக்கமே மண்டையைக் குழப்பும் - முழு நாவலை மொழி பெயர்த்து வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது; மேலும், அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பு அசரவைக்கிறது. அனேக பேருக்கு இந்த உழைப்பு புரியாமல் போகலாம். இரண்டு புத்தகங்களும் நீங்கள் எண்ணியது போல் நிறைய பேரைச் சென்றடைவதில் உங்கள் நிறைவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.)

பெயரில்லா சொன்னது…

மனமார்ந்த பாராட்டுக்கள்! அப்பாதுரை அவர்கள் எழுதி இருப்பது போல் உங்கள் உழைப்பு அனேக பேருக்கு புரியாமல் போகலாம். புரிந்தவர்களுக்கு நிச்சயம் இது நிறைவை தரும். அதுவே உங்களுக்கும் வெற்றி, நிறைவு. உங்கள் தமிழ் பணியும், தமிழ் ஆர்வமும் அசாதாரணமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

Dr.Mahesh சொன்னது…

அன்புள்ள சுசீலா அம்மா,

தங்களின் ’அசடன்’ இணையத்தில் முன்பதிவு செய்வதற்கான உடுமலை.காம் இணைப்பு அதன் முகப்பு பக்கத்திற்கு மட்டும் செல்கிறது
இதோ சரியான இணைப்பு
http://www.udumalai.com/?prd=Asadan&page=products&id=9071
அன்புடன்
மகேஷ், நாமக்கல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....