இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல்.
இன்றைய நவீனப்படைப்புலகிலும்,திறனாய்வுத் தளத்திலும் பரவலாகப் பேசப்படும் கருத்தியல்களுள் - மறுவாசிப்பு /மீட்டுருவாக்கம் என்பது, சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ஒரு திறனாய்வாளன் மறுவாசிப்பு செய்கையில்
கீதா தர்மராஜன் என்பவரால் (1989ஆம் ஆண்டில்) புது தில்லியில் துவங்கப்பட்ட
’கதா’ என்னும் தன்னார்வ அமைப்பு,குழந்தைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது.
’கதா’ என்னும் தனது பெயருக்கேற்ப, நல்ல கதைகள் மற்றும் நூல் வாசிப்புக்களை அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோல் அளிப்பது கதாவின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக விளங்கி வருகிறது.
வாசிப்பை ஓர் இயக்கமாக்கியபடி, பிற பொது வாசகர்களிடம் நல்ல இந்திய மொழிக் கதைகளைக் கொண்டு செல்லும் பணியினையும்,அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியினையும் கூட