துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.7.16

’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’-வெளியீட்டுவிழா

தமிழின் தொல்இலக்கியங்களான சங்கக்கவிதைகளை,அவற்றில் உறைந்திருக்கும் உயிரான உள்ளடக்கத்தைத் தன்னுள் உட்கலக்க விட்டு,அவற்றோடு தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டபடி சங்ககாலத்து நிலவியலை, அன்றாடவாழ்வியலை,பண்பாட்டுப்பதிவுகளைப் பின்திரையாக்கி மலையாள மொழி நாவலாசிரியர் மனோஜ் குரூர் எழுதிய நாவல்,மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும் என் அன்புக்குரிய தோழியுமான கே வி ஜெயஸ்ரீயின் மிகச்சரளமான,உயிர்ப்பான மொழியாக்கத்தில்,மலையாளத்திலிருந்து நேரடியாகப்பெயர்க்கப்பட்டு ’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’என்னும் நூலாக வெளிவருகிறது.

வம்சி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன்,அதன் வெளியீட்டு விழா,  
ஜூலை 16 
மாலை,6 மணி அளவில் 
திருவண்ணாமலை,
திருக்கோவிலூர் சாலையிலுள்ள 
சாரோன் போர்டிங் பள்ளிவளாகத்தில் நடைபெற இருக்கிறது.

விழாவில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நூல்குறித்தும் மொழிபெயர்ப்பு பற்றியுமான என் கருத்துக்களை முன்வைத்து உரையாற்ற இருக்கிறேன். மூல நூலாசிரியர் மனோஜ் குரூர், மலையாளஎழுத்தாளர் சந்தோஷ் இச்சிக்காணம்,இசை ஆய்வாளர் நா.மம்முது,,எழுத்தாளர் சு வெங்கடேசன், விமரிசகர் முருகேச பாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள்.

தமிழுக்கு ஒர் அருங்கொடையான . இந்தநூலின் வரவைக்கொண்டாடி மகிழ இலக்கியஆர்வலர்கள்,வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.



8.1.15

சென்னையில் ‘சங்கவை’

11.1.2015 மாலை 6மணி அளவில் பேராசிரியை ஜெயசாந்தி அவர்களின்
                                                                       ’சங்கவை’
நாவல்  வெளியீட்டு விழா நிகழவிருக்கிறது.

நாள்; 11/1/2015
இடம்;ஜீவன் ஜோதி சென்டர்[இக்சா]-எழும்பூர் மியூசியம் எதிரில்
நேரம்;மாலை 6 மணி

எழுத்தாளர் இமையம்,டாக்டர் சேது குமணன்,பேரா சரசுவதி,ஓவியர் செந்தில் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கும் இவ்வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்று சங்கவை நாவல் குறித்த மதிப்புரையையும் வாழ்த்துரையையும் ஆற்ற இருக்கிறேன்.

சென்னை வாழ் இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். 

1.1.15

'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா




கோவை : ''வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. எழுத்தாளர்கள் இந்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்'' என, எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.
கோவையில் எழுத்தாளர் எம்.ஏ.சுசிலா எழுதிய 'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா ராஜஸ்தானி நிவாஸ் அரங்கில் நடந்தது. மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா தலைமை வகித்தார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார். நுாலை எழுத்தாளர் பாவண்ணன் வெளியிட, எழுத்தாளர் ஜெயமோகன் பெற்றுக்கொண்டு பேசியதாவது: வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. படைப்பாளர்கள் இந்த அனுபவங்களை தான் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டி எழுப்பும் நினைவுச் சின்னங்கள் அழிந்து போக கூடியவை. எழுத்தில் பதிவு செய்வது எதுவும் அழியாது. அது இலக்கியமாகி காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.சுசிலாவின், 'யாதுமாகி' நாவல், ஜெயகாந்தனின் 'யுகசந்தி' நாவலை நினைவுப்படுத்துகிறது. ஒரு காலகட்டம் சென்று மறைந்து இன்னொரு காலகட்டம் உருவாகும் பொழுது, அதன் இடுக்கில் மட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலி, யுகசந்தியில் சித்தரிக்கப்படுகிறது. அதே போல் இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக வாழ்க்கை அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, ஜெயமோகன் பேசினார்.

மத்திய கலால் வரித்துறை கூடுதல் கமிஷனர் மினுபிரமோத், மதுரை பாத்திமா கல்லுாரி முன்னாள் பேராசிரியர்கள் அனுராதா, பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....