துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.1.15

'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா




கோவை : ''வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. எழுத்தாளர்கள் இந்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்'' என, எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.
கோவையில் எழுத்தாளர் எம்.ஏ.சுசிலா எழுதிய 'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா ராஜஸ்தானி நிவாஸ் அரங்கில் நடந்தது. மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா தலைமை வகித்தார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார். நுாலை எழுத்தாளர் பாவண்ணன் வெளியிட, எழுத்தாளர் ஜெயமோகன் பெற்றுக்கொண்டு பேசியதாவது: வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. படைப்பாளர்கள் இந்த அனுபவங்களை தான் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டி எழுப்பும் நினைவுச் சின்னங்கள் அழிந்து போக கூடியவை. எழுத்தில் பதிவு செய்வது எதுவும் அழியாது. அது இலக்கியமாகி காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.சுசிலாவின், 'யாதுமாகி' நாவல், ஜெயகாந்தனின் 'யுகசந்தி' நாவலை நினைவுப்படுத்துகிறது. ஒரு காலகட்டம் சென்று மறைந்து இன்னொரு காலகட்டம் உருவாகும் பொழுது, அதன் இடுக்கில் மட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலி, யுகசந்தியில் சித்தரிக்கப்படுகிறது. அதே போல் இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக வாழ்க்கை அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, ஜெயமோகன் பேசினார்.

மத்திய கலால் வரித்துறை கூடுதல் கமிஷனர் மினுபிரமோத், மதுரை பாத்திமா கல்லுாரி முன்னாள் பேராசிரியர்கள் அனுராதா, பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....