’‘யாதுமாகி’ ஒரு பெண்ணின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை இயல்பாக நகரும் நதியின் ஓட்டத்தை விவரிக்கும் எளிமையுடன் எழுதப்பட்ட படைப்பு. கோஷமில்லாமல்., பந்தா இல்லாமல் சென்ற நூற்றாண்டின் இறுக்கம் மிகுந்த சமூகச் சூழலை மீறி தன் சுயம் உணர்ந்து நிமிர்ந்து நின்று தன்னைச் சுற்றியிருந்த பெண்களையும் சுயம் உணரச் செய்த ஒரு மாதரசியின் சரிதம் ; அந்த காலகட்டத்தின் சமூகக் கட்டமைப்பை மீறும் எண்ணமோ துணிச்சலோ பெண்களுக்கு இல்லாத நேரத்தில் , தனக்கு அரிதாக வாய்த்த சில வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிய அந்தப்பெண்ணின் வாழ்க்கை நிஜமானது . எம்.ஏ.சுசீலா அவர்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை , அவளது ஆளுமைகளை உணர்வு பூர்வமாக அறிந்திருந்ததாலேயே அதைப் பதிவு செய்யும் அவசியத்தை உணர்ந்து அதைப் புதினமாக அருமையாக வழங்கியிருக்கிறார். அந்தப் பெண் தனது சாதனைகளைப் பெரிதாக நினைக்காமல் அடக்கி வாசித்ததற்கு ஏற்ற வகையில் சுசிலா அடக்கமான நடையில் யதார்த்த நிகழ்வுகளைப் பின்னிக்கொண்டு போவது வாசிப்பு சுகத்தையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது’’
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக