துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.7.16

’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’-வெளியீட்டுவிழா

தமிழின் தொல்இலக்கியங்களான சங்கக்கவிதைகளை,அவற்றில் உறைந்திருக்கும் உயிரான உள்ளடக்கத்தைத் தன்னுள் உட்கலக்க விட்டு,அவற்றோடு தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டபடி சங்ககாலத்து நிலவியலை, அன்றாடவாழ்வியலை,பண்பாட்டுப்பதிவுகளைப் பின்திரையாக்கி மலையாள மொழி நாவலாசிரியர் மனோஜ் குரூர் எழுதிய நாவல்,மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும் என் அன்புக்குரிய தோழியுமான கே வி ஜெயஸ்ரீயின் மிகச்சரளமான,உயிர்ப்பான மொழியாக்கத்தில்,மலையாளத்திலிருந்து நேரடியாகப்பெயர்க்கப்பட்டு ’நிலம் பூத்து மலர்ந்தநாள்’’என்னும் நூலாக வெளிவருகிறது.

வம்சி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன்,அதன் வெளியீட்டு விழா,  
ஜூலை 16 
மாலை,6 மணி அளவில் 
திருவண்ணாமலை,
திருக்கோவிலூர் சாலையிலுள்ள 
சாரோன் போர்டிங் பள்ளிவளாகத்தில் நடைபெற இருக்கிறது.

விழாவில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நூல்குறித்தும் மொழிபெயர்ப்பு பற்றியுமான என் கருத்துக்களை முன்வைத்து உரையாற்ற இருக்கிறேன். மூல நூலாசிரியர் மனோஜ் குரூர், மலையாளஎழுத்தாளர் சந்தோஷ் இச்சிக்காணம்,இசை ஆய்வாளர் நா.மம்முது,,எழுத்தாளர் சு வெங்கடேசன், விமரிசகர் முருகேச பாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள்.

தமிழுக்கு ஒர் அருங்கொடையான . இந்தநூலின் வரவைக்கொண்டாடி மகிழ இலக்கியஆர்வலர்கள்,வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....