இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம்
16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில்
நடத்தவிருக்கும் பாராட்டுவிழாவில் நான் பங்கேற்று உரையாற்றவிருக்கிறேன்.
நடத்தவிருக்கும் பாராட்டுவிழாவில் நான் பங்கேற்று உரையாற்றவிருக்கிறேன்.
வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,தில்லியின் மூத்த இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோரும் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றவிருக்கும் இவ்விழாவுக்குக் கவிஞர் திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்கவிருக்கிறார்.
பி.கு;
நாஞ்சில் நாடனின் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியாகிய
‘சூடிய பூ சூடற்க!’என்னும் தொகுப்புக் குறித்த என் வானொலி உரை புது தில்லி வானொலி நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுத் ‘திரை கடல் ஆடி வரும் தமிழ்நாதம்’ என்னும் பகுதியில் 17.02.11 காலை 05.50க்கு ஒலிபரப்பாக இருக்கிறது.
இந்த ஒலிபரப்பின் அலை வரிசைபெரும்பாலும் தூத்துக்குடி,நாகர்கோயில்,கன்னியாகுமரி,திருவனந்தபுரம் நேயர்களிடமே தெளிவாகச் சென்றடையக் கூடியதாக இருக்கிறது.
எனவே.தென்மாவட்டத்துக்காரர்களில் யாரேனும் இந்த ஒலிபரப்பைக்கேட்டு விட்டு அஞ்சல் அனுப்ப முடிந்தால் மகிழ்வேன்
3 கருத்துகள் :
விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுவிழாவில் தாங்கள் பங்கேற்று உரையாற்றவிருக்கிறீர்கள் என்பதை அறிந்து பெருதும் மகிழ்ச்சியடைகிறேன்..
நன்றி திரு குணசீலன்..
நலம்தானே.
உயர் விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்...
இந்த மாபெரும் விழாவிற்கு உங்கள் உரை மேலும் சிறப்பு சேர்க்கும் என்று நம்புகிறேன்...
வாழ்த்துக்கள் சுசீலா மேடம்...
நேரமிருப்பின் எங்கள் முதல் முயற்சியில் உருவான “சித்தம்” குறும்படத்தை இங்கு கண்டு, கருத்து பகிரலாம்...
'சித்தம்' – குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html
கருத்துரையிடுக