மிகச் சிறந்த பாடகராக மட்டுமன்றி ஒரு தேர்ந்த நடிகராகவும் விளங்கியவர் திரு மலேசியா வாசுதேவன்.
’60களின் பிற்பகுதியில் எங்கள் சிறுநகரத்துக் கோயில் விழாக்களில் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினரோடு சேர்ந்து மேடையில் பாட வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் பிரபலமடைந்திருக்கவில்லை.
இளையராஜா போன்றோர் அளித்த வாய்ப்புக்களைப் பற்றிக் கொண்டபடி மேலேறிச் சென்ற வாசுதேவனின் குறிப்பிடத்தக்க பல பாடல்களில் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இசைப்பது..
‘பூங்காற்று திரும்புமா..?’
டி.எம்.எஸ்ஸை அடுத்து சிவாஜியின் குரலுக்குப் பொருத்தமானதாக அமைந்தது மலேசியாவாசுதேவனின் குரல் மட்டுமே..
பூங்காற்றாய் நெஞ்சை வருடும் ஒலியலைகள் அமரத்துவம் அடைந்து விட்ட அந்தக்கலைஞனை என்றென்றும்....சாஸ்வதமாக்கிக்கொண்டே இருக்கும்!
மலேசியாவாசுதேவனுக்கு அஞ்சலிகள்..

4 கருத்துகள் :
மலேசியா வாசுதேவனை அதிகம் கேட்டதில்லை - அவர் திரையுலக வளர்ச்சியை கவனிக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் முதல் மரியாதை படப்பாடல்களில் அவரது குரல் வண்மையை ரசித்தேன். பூங்காற்று பாட்டும் குருவி பாட்டும் அருமையாகப் பாடியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் வழியாக பல கேள்விப்பட்டிராத பாடல்களைத் தெரிந்து கொண்டேன்.
சுருக்கமான சுவையான அஞ்சலி.
பல அற்புத பாடல்கள் பாடி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுத நினைத்து நேரம் இன்றி தள்ளி போட்டு வருகிறேன்
அவருக்கு எனது அஞ்சலிகள்.
மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய காதல் பாடல்களில் குறிப்பிட்ட சில பாடல்களில் அவர் குரலை மிகவும் ரசிப்பேன். அதிலும் குறிப்பாக நான் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல்கள் 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு', 'ஆகாய கங்கை', 'மலர்களிலே ஆராதனை' போன்ற அற்புதமான பாடல்கள். 'சுகராகமே என் சுகபோகமே' என்ற காதல் பாடலை வாணியுடன் மிக வித்யாசமாக, அழகாக பாடி இருப்பார். ரஜினிகாந்த் அவர்களுக்கு இவர் குரல் மிகவும் பொருந்தியது போல், சிவாஜி அவர்களுக்கும் இவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பொருத்தமாய் இருந்தது. முதல் மரியாதை படத்தில் வரும் 'வெட்டி வேறு வாசம்' பாடலை இவர் மிகவும் அருமையாக பாடி இருப்பார். இவரது தனி பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 'கூடையிலே கருவாடு' மிகவும் அசால்டாக அற்புதமாக பாடி இருப்பார். இதுவும் நான் பலமுறை ரசித்து கேட்ட பாடல். 'வெத்தல வெத்தல', 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' 'ஆசை நூறுவகை.........' இவைகள் எல்லாம் தனிபாடல்களில் இவர் வித்தியாசமாக பாடிய பாடல்கள். இவர் மறைவு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கருத்துரையிடுக