மேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் நீந்திச்செல்லும் எழில்... |
இந்தப்பயணத்தில் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது...ஓய்வு ஒழிவின்றி வானில் ஊர்ந்து கொண்டும் மலை அடுக்குகளில் தவழ்ந்து கொண்டும் இருந்த மேகங்கள்..... மேகங்கள்....மேகங்கள் மட்டும்தான்.
’’மஞ்சு துஞ்சும் மலை’’ எனப் படித்ததெல்லாம் கண்ணில் காட்சியான தருணத்தில் திகட்டாத அந்தப் பேரனுபவத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் கண்ணுக்கும் மனதுக்கும் அலுக்கவில்லை....
[மரபான பழந்தமிழில் மஞ்சு என்பது மேகம்..மஞ்சூர் என்பதற்கும் பெயர்க்காரணம் அதுவாகவே இருக்கக்கூடும்.]
விண்ணில் நிகழும் மேக ஊர்வலம் எதுவரை எங்கே எதை நோக்கி நீண்டு செல்கிறது என அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சுகமான பிள்ளை விளையாட்டுத்தான்..ஆனாலும் சொல்லில் விளங்காத..சொல்லுக்கடங்காத புத்துணர்வளிக்கும் பேரானந்தப் பரவசம் அது..
முதிராத - முற்றாத இளம் மேகத்தை ’முகில் குழவி’[மேகக்குழந்தை]என்ற அற்புதமான வார்த்தையால் வடித்து வைத்திருக்கிறான் சங்கக் கவிஞன்.கவிதையில் கிடைத்த அதன் தரிசனம்...நேரில் கிடைத்த கிளர்ச்சியில் நெகிழ்ந்து கரைந்து நின்றேன்.....
கேரளப்பலவுடன்.... |
கிளைகளுக்கு நடுவே தன்னைப் பொதித்துக் கொண்டிருக்கும் சிறு பறவை.... |
சலசலக்கும் சிற்றோடை... |
5 கருத்துகள் :
படங்கள் அனைத்தும் அருமை! அதிலும எந்த பலாப்பிஞ்சுகள்......... ஹைய்யோ!!!
இயற்கையை நன்கு அனுபவிக்க உகந்த ஊர்.
நன்றி துளசி.அந்தப் பிஞ்சுகள் இந்த ஒரு மாதத்துக்குள் கனிந்து பழமாகி வயிற்றுக்குள்....
நன்றி திரு கந்தசாமி..கட்டாயம் ஒரு முறை சென்று வாருங்கள்.
வலைஞனுக்கும் நன்றி.வலையகத்தில் இணைத்து விட்டேன்.
மீனுவின் ஊர் சூப்பர் அம்மா.. பலாப்பழங்களும் மேகக் கூட்டங்களும் உங்கள் மந்தகாசப் புன்னகையும் ஈர்க்கின்றன.:)
வெண்மஞ்சுக் கூட்டங்கள் கொள்ளை அழகு.
கருத்துரையிடுக