துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
தில்லிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.3.13

தில்லிகை-மார்ச் நிகழ்வு


தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கவிதை
இலக்கியச் சந்திப்பு: 2013/03

தமிழில் தலித் கவிதைகளும் தன்நிலை போக்குகளும்
திரு. சு.அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

  இப்படிக்கு, அன்புள்ள அம்மா...
டேனிஷ் கவிதை மொழிபெயர்ப்பு நூல் குறித்து
பேரா.எச்.பாலசுப்பிரமணியம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்- 20 நி.

சாவின் மீதான பாடல்
- பா.அகிலனின் கவிதை மீதான அனுபவக் குறிப்பு
திரு. தி.சதீஷ்குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

                                                                                         கலந்துரையாடல் 30 நி.

                                                                                                      9 மார்ச் 2013, 

                                                                       இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு 


                                                                                  பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், 
                                                                                                    ராமகிருஷ்ணாபுரம் 

                                                                                இலக்கிய ஆர்வம் கொண்டோர்  நண்பர் சூழ வருக! 

10.1.13

தில்லிகை-ஜன.நிகழ்வு


ஜனவரி தில்லிகை - அழைப்பிதழ்
தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்


பெண்மை

இலக்கியச் சந்திப்பு: 2013/01

மாதவிடாய் –ஆவணப்படம்

இயக்கம்: திருமதி கீதா இளங்கோவன்

ஊடக தகவல் அதிகாரி – 38 நி.


பெண்மை

பேராசிரியர் உமா தேவி

தில்லிப் பல்கலைக்கழகம் - 20 நி.


பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பேராசிரியர் திரு கி. நாச்சிமுத்து

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.


இன்றைய சூழலில் பெண்மை

திருமதி சத்யா அசோகன்

பண்பாட்டு அமைச்சகம் - 20 நி.


12 ஜனவரி 2013, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

7.12.12

தில்லிகை-டிச.நிகழ்வு



தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கலை
இலக்கியச் சந்திப்பு: 2012/10

9.11.12

தில்லிகை-நவம்பர் நிகழ்வு

தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இலக்கியச் சந்திப்பு: 2012/9
பயணம்

தமிழ் இலக்கியத்தில் பயணம் 
அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்

பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல்
கயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்

கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் 
எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி  



10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


12.10.12

தில்லிகை-அக்டோபர் நிகழ்வு



                                                  தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8

பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.

வசனங்களில் உருவான நாயகத்துவம்
முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.

6.9.12

’தில்லிகை’-செப்டம்பர் நிகழ்வு

                                                         செப்டம்பர் மாதக் கூட்டம் ,
8- 9-2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.


இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

தமிழ்ச்சிறுகதைகளைப் பொருளாகக் கொண்டு நிகழும் இந்த இலக்கிய 

அரங்கிற்கு வருகை தரவும், தொடர்ந்து நிகழும் கலந்துரையாடலில் 

பங்கேற்கவும் 

தில்லி தமிழ் ஆர்வலர்களை தில்லிகை இலக்கிய வட்டம் அன்புடன் 

வரவேற்கிறது.


9.8.12

‘தில்லிகை’ -ஆகஸ்ட் நிகழ்வு


ஆகஸ்ட் மாதக் கூட்டம் 11 ஆகஸ்ட்  2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.

17.7.12

மொழி உறவுகள்-தில்லிகை

ஜூலை 14ஆம் நாளன்று நிகழ்ந்த தில்லிகை இலக்கிய வட்டக் கூட்டம் குறைவான பார்வையாளர்களோடு தொடங்கினாலும் நிறைவான மகிழ்வை அளிப்பதாக அமைந்திருந்தது.

இந்தி-தமிழ் உறவு பற்றிப் பேசிய திரு ஷாஜகான் அவர்களின் உரை வங்கம்,மராத்தி,மலையாளம் ஆகிய மொழிகளோடு தமிழுக்கு நேர்ந்திருக்கும் விரிவான தொடர்புகளையும் முன் வைத்தது.
திரு ஷாஜகான்(புதியவன்)

வங்கத்திலிருந்து தமிழுக்கு அரிய பல நூல்களைக் கொணர்ந்த தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த த.நா.சேனாபதி,த.நா.குமாரசுவாமி தொடங்கி இன்று அப்பணியை முழு மூச்சாகச் செய்து வரும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்களையும் சுட்டிக் காட்டிய ஷாஜகான், காண்டேகர் மராத்தியில் பெற்ற புகழை விடவும் அவரது மொழிபெயர்ப்பாளராக வாய்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீயால் தமிழில் பெரிதும் அறியப்பட்டதையும் எடுத்துக் காட்டினார்.இந்தியில் சரஸ்வதி ராம்நாத்தில் தொடங்கி இன்று தொல்காப்பியத்தை இந்தியில் கொணர அரிய முயற்சி மேற்கொண்டுவரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எச்.பாலசுப்பிரமணியம் வரை பலரின் செயல்பாடுகளும் அவரது உரையில் விரிவாகக் காட்டப்பட்டன.இன்றைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது உரை பெரிதும் முன்மாதிரியாக,பயனுள்ளதாக அமைந்திருந்தது.
[முழுஉரையினையும் திரு ஷாஜகானின் தளத்தில் காணலாம்]

கொங்கணி-தமிழ் உறவு குறித்துப் பேசியவர் ஜே என் யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன்..
கொங்கணி சார்ந்தே தன் முனைவர் பட்டத்தையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவை;பரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை.பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் தமிழ்ச்செல்வன்.அக்கதைகள் அவரது எம் ஃபில்பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான ’சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை ‘திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
பார்வையாளர்களில் நான்,பேராசிரியர் நாச்சிமுத்து
ஷாஜகான்,பதிவர் வெங்கட்
’’வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிறது அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்று...
அத்தகைய சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும்  இன்றில்லை எனினும் என்றோ...எப்பொழுதோ...எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனஎன்று நானும் ஜே என் யூ பேராசிரியர் திரு நாச்சிமுத்துவும் சொல்லிக் கொண்டோம்...

இக்கூட்டத்துக்கான முன் முயற்சிகளில் முழு வீச்சுடன் இயங்கி வரும் திரு ஸ்ரீதரன் ஐ எஃப் எஸ் அவர்களும் விஜய்ராஜ்மோகன் மற்றும் துணை நிற்கும் நண்பர்கள் அனைவரும் நம் பாரட்டுக்குரியவர்கள்...


7.6.12

தில்லிகை-ஜூன் நிகழ்வு


புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூன் மாதக் கூட்டம் 9 ஜூன் 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் ; தில்லியும் தமிழ் இலக்கியமும்

9.5.12

தில்லிகை-மே நிகழ்வு

புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் மே மாதக் கூட்டம்12 மே 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் போர்.

பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும்
மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் என்னும் தலைப்பில்  தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த திரு எஸ். ராஜேந்திரனும்,

நீதிக்கான போரும் நீதியான போரும்
பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில்  

 மொழிபெயர்ப்பாளர்,திரு க. திருநாவுக்கரசுவும் உரையாற்றவிருக்கின்றனர்..
தில்லி இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டுமென ‘தில்லிகை’இலக்கிய வட்டம் அன்புடன் அழைக்கிறது...


13.3.12

’தில்லிகை’யில் மதுரை

ராம் மோகன் ,                 நான் ,                                                     விஜய்ராஜ்மோகன்
மல்லிகைக்குப் பெயர் பெற்ற மதுரையைக் கருப்பொருளாகக் கொண்டே தில்லியில் தொடங்கிய தில்லிகை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டமும் நிகழ்ந்ததும் அதில் நானும் உரையாற்ற வாய்த்ததும் ஓர் இனிய பொருத்தம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....