துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.5.12

தில்லிகை-மே நிகழ்வு

புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் மே மாதக் கூட்டம்12 மே 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் போர்.

பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும்
மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் என்னும் தலைப்பில்  தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த திரு எஸ். ராஜேந்திரனும்,

நீதிக்கான போரும் நீதியான போரும்
பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில்  

 மொழிபெயர்ப்பாளர்,திரு க. திருநாவுக்கரசுவும் உரையாற்றவிருக்கின்றனர்..
தில்லி இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டுமென ‘தில்லிகை’இலக்கிய வட்டம் அன்புடன் அழைக்கிறது...


3 கருத்துகள் :

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

இது என்னங்க பேரு தில்லிகை'ன்னு?

ஏதாவது பெயர்க் காரணம் இருக்கா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி...தில்லியின் இலக்கிய வட்டம் என்பதால் தில்லிகை என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள் அறிவன்.ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை அன்று குறிப்பிட்ட ஒரு கருப்பொருளை மையமாக்கி சிலர் பேசவும் பலர் விவாதிக்கவும் களம் அமைத்துத் தரும் இலக்கிய வட்டம் இது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....