துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.4.13

தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்

தில்லி தமிழ்ச்சங்கம் ஏப்ரல் 6ஆம் நாள்[2013] மாலை வழங்கவிருக்கும் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகளுக்குரியவர்களில்  நானும் ஒருத்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.சிறுகதைத் துறைக்கான ‘அமரர் சுஜாதா விருது’ எனக்கு அளிக்கப்படவிருக்கிறது.

தில்லி தமிழ்ச்சங்கத்தாருக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் மூத்த எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.

எழுத்துத் துறையில் முனைப்போடும்,மேலும் உற்சாகத்தோடும் இயங்க இவ்வாறான விருதுகள் புத்துணர்வு நல்கும் என்ற நம்பிக்கையோடு அதனை ஏற்கவிருக்கிறேன்.

தினமணி செய்தி-கீழே...
http://dinamani.com/edition_new_delhi/article1526394.eceபுது தில்லி,
First Published : 02 April 2013 12:59 AM IST
தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது',பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.

7 கருத்துகள் :

தருமி சொன்னது…

வாழ்த்துகள்

NARAYAN சொன்னது…

வாழ்த்துகள் அம்மா

சிறியவன் சொன்னது…

வாழ்த்துகள் அம்மா. நிகழ்ச்சிக்கு அவசியம் வருவேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எழுத்தாளர் பாவண்ணனிடமிருந்துவந்த மின் அஞ்சலின் பகுதி;
தில்லி தமிழ்ச்சங்கம் உங்களைக் கெளரவிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
தடையின்றி ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் உழைப்புக்கும் அர்ப்பணிப்புணர்வுக்கும் கிடைக்கும்
சிறிய அங்கீகாரம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துகள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றி;முகநூல் வழி வாழ்த்துக் கூறிய நண்பர் ஷாஜகான்,ஷெரீன் ஆகியோருக்கும் தொலைபேசி மற்றும் இலக்கியகுழுமங்களின் வழி வாழ்த்துக்கூறியோர்க்கும் நன்றி.

VOICE OF INDIAN சொன்னது…

வாழ்த்துகள்!!!

எஸ் சம்பத் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக இது உங்களை சேர வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....