இந்த ஆண்டு 2013இல் நான் இதுவரை பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் நெஞ்சைப்பிழிந்து உலுக்கிப்போட்ட படம் பாலாவின் பரதேசி.
‘ரெட் டீ’ என்னும் நாவலின் தூண்டுதலால் இப்படம் உருவானதாக பாலா சொன்னபோதும் படம் முழுவதும் வெளிப்படிருப்பது அவரது உழைப்பும், தனித்துவமான ஆளுமையுமே. சேது, நந்தா,பிதாமகன்,நான்கடவுள் ஆகிய தன் படங்கள் வழியே தமிழ்த் திரையை அதற்குப் பரிச்சயமில்லாத ஒரு தளத்துக்கு முன்னகர்த்திச் சென்ற பாலா ‘அவன் - இவ’னில் சற்றே சறுக்கி விட்டதில் வருத்தம் கொண்டிருந்த நான்
’’பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’’என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது அந்த நல்ல நாளின் உதயத்தில்...
தன் ‘பரதேசி’யின் மூலம் தமிழ்த் திரைக்கு அவர் புதிய பரிமாணம் சேர்த்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
தில்லியில் அது வெளியிடப்பட்ட முதல்நாளே அதைப்பார்த்து மனம் கசிந்து, அதில் வசனப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடனுடன் தொடர்பு கொண்டு என் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்தேன்.விரிவான விமரிசனத்தை உடன் எழுத முடியாமல் வேறு ஏதேதோ வேலைகள். நான் அதை எழுத முனைவதற்குள் பல விமரிசனங்கள் இணையத்தில் குவிந்து விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்க எண்ணி எழுதாமலிருந்து விட்டேன்.
தற்போது பாலாவின் ‘பரதேசி’ பற்றி மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களது உரையடங்கிய காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காணொளிக்கான இணைப்பு;
குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர்.
குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர்.
dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி, கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் மு ராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.
அண்மையில் தன் திரை அனுபவங்களைத் தொகுத்து
‘திரை வளர்த்தநான்,நான் வளர்த்த திரை’ என்ற பெயரில் நூலாக்கியுள்ள திரு மு ரா , மிகச்சிறந்த திரை விமரிசகரும் கூட.
அவரது வழக்குஎண் 18/9 பற்றிய ஒரு விமரிசனக் காணொளியை இந்தத் தளத்தில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.
இணைப்புகள்;
ஏழாம் உலகமும் நான்கடவுளும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக