![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuTBXlKCl2ulwy5p0Hj64Gv7L2SZ4HRlr5wnj0HuoRBpqXtbZ6YdBwrXu23VOUby93tjPZj_-ci55lrTOT9jFK4wl9RLzvWw4UKa3Hl98ISh1VxVprqjUIY7afy58nTeFUgfCn5ejhbKk/s200/dostoevsky1.jpg)
(இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரவிருக்கும் அந்நூல் 700க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது)
மதுரை பாரதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் இந்நூலுக்கு
‘அசடனும் ஞானியும்’
என்ற தனது அற்புதமான ஆய்வுரையை முன்னுரையாக அளித்திருக்கிறார் எழுத்தாளர் திரு ஜெயமோகன்அவர்கள்.
4/7/11 தேதியிட்டு,அவரது இணைய தளத்திலும் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.
http://www.jeyamohan.in/?p=15045
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
1979 ஆம் ஆண்டு தொடங்கி நான் அவ்வப்போது எழுதி,இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் ஒரு சிலவற்றை (36) மட்டும் தேர்ந்து தொகுத்து,
‘தேவந்தி’
என்னும் தலைப்பில்,புது தில்லி ’வடக்கு வாசல்’ பதிப்பகம் ஜூலை 29ஆம் நாள் வெளியிடவிருக்கிறது.
‘வடக்கு வாசல்’இதழ் நடத்தவிருக்கும் இசை விழாவின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் எனது நூலையும்,
வடக்கு வாசல் வெளியீடாக வரவிருக்கும் வேறு நான்கு நூல்களையும் வெளியிடவிருக்கிறார்.
வடக்கு வாசல் வெளியீடாக வரவிருக்கும் வேறு நான்கு நூல்களையும் வெளியிடவிருக்கிறார்.
எனது சிறுகதைத் தொகுப்புக்குத் தன் முன்னுரையால் எழுத்தாளர் திரு பாவண்ணன் அவர்களும்,தன் பதிப்புரையால் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களும் அணி செய்திருக்கின்றனர்.
திரு ஜெயமோகன்,பாவண்ணன்,பென்னேஸ்வரன் ஆகியோர்க்கு என் நன்றி!
12 கருத்துகள் :
வாழ்த்துக்கள். அரிய முயற்சி.
பென்னேஸ்வரன் ஏற்கனவே வடக்குவாசல் வெளியீடு பற்றி சொல்லி இருந்தார். வாழ்த்துகள் அம்மா
வாழ்த்துக்கள் அம்மா, நூல்களை படிக்க ஆவலுடன் உள்ளேன்
வாழ்த்துகள்.
இங்கும் .. அங்கும் ..
எங்கும் வாழ்த்துகள்!!!
வாழ்த்துக்கள் அம்மா ..ஜெ அசடன் முன்னுரை வாசித்தேன் ..மிகவும் நன்றாக வந்துள்ளது என்றே எண்ணுகிறேன் .
ஜெயமோகன் முன்னுரை படித்தேன் - தவறாக நினைக்க வேண்டாம் - உங்கள் புத்தகத்தைப் படித்து விட்டுத் தானே எழுதினார்? ஒரு வேளை முன்னுரை என்றால் என்ன என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டேனோ?
வாழ்த்துகள் அம்மா... வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் முடிவானதும் சொல்லுங்கள்.... வடக்கு வாசல் மூலம் வெளியாகும் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா தில்லியில் தானே...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! ஜெயமோகன் அவர்களின் முன்னுரையையும் படித்தேன். மிகவும் அருமை. மேலும் அவர் உங்கள் 'குற்றமும் தண்டனையும்' மொழி பெயர்ப்பை தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்பில் ஒரு சாதனை என்று பெருமைபடுத்தி எழுதி இருந்ததை படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் இந்த சாதனைகளுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
'தேவந்தி' அழகான தலைப்பு. உங்கள் சிறுகதை தொகுப்பை படிக்க மிகவும் ஆவலாக உள்ளது. இந்தியா வரும்பொழுது நிச்சயம் இந்நூல்களை எல்லாம் படிப்பேன்.
வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.விழாவுக்கு வந்து சிறப்பிக்க அன்புக் கோரிக்கை விடுக்கிறேன்.அழைப்பிதழ் விரைவில் தளத்தில் வெளியாகும்.
திரு அப்பாதுரையின் வினாவுக்கு....
பொதுவாக இப்போதெல்லாம் உலகப் பேரிலக்கியங்களை மொழி பெயர்த்து மறு ஆக்கம் செய்கையில்,அப் படைப்பின்மூலத்தையும்,மூலநூலாசிரியரையும் நன்கு அறிந்து தேர்ச்சி பெற்ற ஒருவரின் முன்னுரை அதில் இடம் பெற்று வருகிறது;நூல் குறித்த வலுவான புரிதலுக்கும்,தெளிவுக்கும் அது பயன்படுகிறது.அந்த நோக்கிலேயே ஜெயமோகனின் முன்னுரை முக்கியத்துவம் பெறுகிறது.எனது முதல் மொழிபெயர்ப்பான ‘குற்றமும் தண்டனையும்’நூலைப் படித்து அதன் தரத்தின் மீது அவருக்குச் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருந்தது;அவரது பல நெருக்கடியான வேலைகளுக்கு நடுவே என் ’அசடன்’மொழியாக்கத்தை முழுவதும் படித்து மதிப்புரை எழுத அவருக்கு நேரம் கிடைப்பது அரிதென்பதால்வாழ்த்துரை மட்டுமே கேட்டிருந்தேன்; அவரோ மூலநூல் பற்றிய ஆய்வாகவே அதை எழுதி தஸ்தயெவ்ஸ்கியின் பல பரிமாணங்களையும் எடுத்துக் காட்டிவிட்டார்.
அது,மூல நூலுக்கு ஒரு முன்னோட்டம்.மொழியாக்கத்தில் நுழைய ஒரு வாயில்.
வாழ்த்துக்கள். இதுபோன்ற நூல்கள் இன்னும் பல எழுதி தமிழின் புகழுக்குப் பெருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)
கருத்துரையிடுக