துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.7.11

’தேவந்தி’சிறுகதைத் தொகுப்பு வெளியீடு...

1979ஆம் ஆண்டு முதல் 2009 வரை நான் எழுதிப் பல இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 36 சிறுகதைகளின் தொகுப்பான
                                                 ‘தேவந்தி’
இன்று- வெள்ளிக்கிழமை 29.7.11 மாலை வெளியாகவிருக்கிறது.




எழுத்தாளர் திரு பாவண்ணனின் முன்னுரையோடும்,
யதார்த்தா திரு கி.பென்னேஸ்வரன் அவர்களின் பதிப்புரையோடும் 
வடக்கு வாசல் வெளியீடாக வரவிருக்கும் இந்நூலினை முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள்வெளியிடவிருக்கிறார்.
(’தேவந்தி’நூல் அரங்கில் கிடைக்கும்.
இணைய வழி வாங்க விரும்பும் அன்பர்கள் உடுமலை.காமின் 
http://www.udumalai.com/index.php?prd=Devanthi&page=products&id=9882
என்னும் இணைப்பு வழி வாங்கலாம்.)
இவ்விழாவில் 
விஞ்ஞானி திரு ய.சு.ராஜனின் ’சிந்தனைச்சிதறல்கள்’
கல்வியாளர் திரு சி.டி.சனத்குமாரின் ’விருட்சங்களாகும் சிறுவிதைகள்’
வடக்கு வாசல் ஆசிரியர் திரு ராகவன்தம்பியின் ‘சனிமூலை’,’வடக்கு வாசல் நேர்காணல்கள்’
ஆகிய நூல்களும் வெளியிடப்படவிருக்கின்றன.


அமரர் சுப்புடு அவர்களின் நினைவாய்...
வடக்கு வாசல் இதழ் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் இசை விழா ஒன்றும் தொடர்ந்து துவங்கி நிகழவிருக்கிறது.
அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்...



3 கருத்துகள் :

Unknown சொன்னது…

அம்மா விழா சிறப்பாக நடைபெற்றது ,
தங்களது தேவந்தி புத்தகத்தை உலகமே போற்றும் ஆளுமை மிகுந்த திரு அப்துல்கலாம் அவர்களின் கரங்களில் பெற்றுக்கொண்டது , மிகுந்த உற்சாகத்தையும் , உத்வேகத்தையும் அளிக்கிறது .

தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

அன்பு மகன்
தேவராஜ் விட்டலன்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா. வணக்கத்துடன், பிரகாஷ்.

Unknown சொன்னது…

விழா இனிது நடந்தேறிதற்கும், புத்தகத்திற்கும் வாழ்த்துக்கள் அம்மா. வணக்கத்துடன், பிரகாஷ்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....