துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.9.11

இலக்கிய,சூழியல் ஆர்வலர்களின் பார்வைக்கு....




சம காலத்தில் வாழ்ந்து மறைந்த வன உயிர் மருத்துவரும், 
தனக்குக் கிடைக்கும் பணம்,புகழ்,விருது என எதிலும் நாட்டம் செலுத்தாமல் கானுயிர்களின் நலனையும், விலங்குகளின் பாதுகாப்பையுமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த உன்னத மனிதருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதை யானை டாக்டர்.

அவரது வலைத் தளத்தில் வெளி வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்த அற்புதமான அந்தச் சிறுகதை,சூழலியல் குறித்த விழிப்புணர்வை அழுத்தமாகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், அது பலரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டநண்பர்களால் ஒரு சிறு பிரசுரமாக- இலவச வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 


(தனிச் சிறுகதை ஒன்று இவ்வாறு சிறு பிரசுரமாகும் நிகழ்வு தமிழ்ச் சூழலில் அரிதான சில கணங்களில் நிகழ்வதுண்டு.
எழுத்தாளரும்,பள்ளி ஆசிரியருமான இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா’ என்னும் சிறுகதை முன்பு இவ்வாறு சிறு பிரசுரமாக்கப்பட்டுப் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்திருக்கிறது.ஆசிரிய-மாணவ உறவின் கோளாறு ஒரு ஏழை மாணவியின் எதிர்காலத்தைப் பலியாக்கியதைக் கூறிய நெகிழ்வான கதை அது.குறும்படமாகவும் வந்திருக்கும் ‘ஆயிஷா’குறித்த பதிவை இந்த வலைத் தளத்திலுள்ள கசங்கும் ரோஜாக்கள் என்னும் இணைப்பில் காணலாம்)


கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனக்காப்பகங்கள் எனப் பல தரப்பினருக்கும் யானை டாக்டர் கதையின் பிரதி அளிக்கப்படவேண்டுமென்பது நண்பர்களின் விழைவு என்பதால் அத்தகைய இடங்களுக்கு நூலைக் கொண்டு சேர்க்கக் கூடிய முனைப்புக் கொண்ட எவரும் கீழ்க்காணும் தொலைபேசியிலோ மின் அஞ்சலிலோ தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆர்வமாக உள்ளது.
94421 10123 (தொலைபேசி), 
vishnupuram.vattam@gmail.com 
http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/

புது தில்லியில் இருப்பவர்கள் எனது மின் அஞ்சலில் 
தொடர்பு கொண்டு நூலைப் பெற்றுக் கொள்ளலாம்;
தில்லி சார்ந்த - தமிழறிந்த இலக்கிய,சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும்,களப் பணியாளர்களுக்கும் நூலை அளிக்கலாம். 
susila27@gmail.com

பி.கு;
ஒரு மின்னஞ்சலில் தகவல் தெரிவித்துவிட்டு  யார் வேண்டுமானாலும் இந்தக் கதையை சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் என்னும் திறந்த காப்புரிமையும்-open copy right-இந்நூலைப் பொறுத்தவரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இணைப்புக்கள்;

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய விக்கி பீடியா குறிப்பு..



டாக்டர் கே

இணையத்தில் யானை டாக்டர் தமிழ்ச் சிறுகதை மூலம்;
Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433
Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439


யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்;
http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm


3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி! உடனே படித்து விட்டேன். கதையின் பாதிப்பில் இருந்து மனம் இன்னும் மீளவில்லை. கூடவே ஜெயமோகன் அவர்களின் எழுத்து நடை மனதை ஆக்கிரமித்து விட்டது.
// பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்.// மனதில் இருந்திக் கொள்ள வேண்டிய வரிகள்.
திரு. கிருஷ்ணமுர்த்தி என்ற உன்னதமான மனிதரை பற்றி ஒரு துளியாவது இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்ததை எண்ணி நெகிழ்ந்து போகிறேன்.
இதை நீங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டதன் மூலம் என்னை போல இன்னும் பலரை நிச்சயம் சென்றடையும். நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

நன்றி அம்மா , புத்தகத்தை தங்களிடம் பெற்றுக் கொண்டு வாசிக்க விரும்புகிறேன்

Unknown சொன்னது…

நன்றி அம்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....