துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.9.11

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம்’’ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு அணுசக்தி குறித்த உலகப் பார்வை ஒரு அதிரடி மாற்றத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அணு சக்தியை முற்றிலும் கைவிட முடிவெடுத்துள்ளன. அடுத்த சில வருடங்களில் அணுஉலைகளை ஒவ்வொன்றாக நிறுத்தப்போகிறார்கள். அவை மாற்று சக்தியை நோக்கி நகர முடிவெடுத்துள்ளன. மிகத் தீவிர  அணுசக்தி ஆதரவான நாடு ஃப்ரான்ஸ். அங்கேயே 63%மக்கள் அணுசக்திக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இத்தாலியில் 95%பேர் அணுசக்தி பயன்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மே 25, 2011ல் வியன்னாவில் கூடிய ஆஸ்ட்ரியா, கிரீஸ், அயர்லாந்து, லாத்வியா, போர்சுகல் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மந்திரிகளின் குழுஅணு சக்தி பயன்பாட்டுக்கு எதிராக பிரகடனம் ஒன்றை செய்துள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள் 18 பேர் ஒன்றுகூடி ஃபுக்குஷிமாவுக்குப் பின் உலகளவில் அணுசக்தி பயன்பாடு மெல்ல கைவிடப்படவேண்டும் என பிரக்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
ஆனால் இந்தியாவில் ஃபுக்குஷிமாவுக்குப் பிறகான அணுசக்தி அணுகுமுறை என்ற ஒன்றே வகுக்கப்படவில்லை. உலகின் மிகப் பெரிய அணுஉலை விபத்தை இந்தியா கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ’’

-சிறில் அலெக்ஸ் 


கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்து நண்பர் சிறில் அலெக்ஸ் 
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
என்னும் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார் .
அதன் இரு பகுதிகளையும்,
 தமிழ் பேப்பர் நெட்டின் கீழ்க்காணும் இணைப்புக்களில் காணலாம்.
http://www.tamilpaper.net/?p=4108
http://www.tamilpaper.net/?p=4115  
காண்க;
நஞ்சும் அமுதும்..கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....