5.8.16

தஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்


செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள
தஸ்தயெவ்ஸ்கி நினைவகத்தின் முன் 



தஸ்தயெவ்ஸ்கி
நினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையுடன்


நந்தகுமார்.

அன்புள்ள சுசீலாம்மா அவர்களுக்கு,

நன்றி அம்மா!

உங்களின் அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் மூன்றையும் படித்தேன்.
முரட்டு சூதாடியையும், கிறுஸ்துவான அசடனையும் ஒரு சேர மரணத்தின் விளிம்பினில் இருந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன். மனிதக் கீழ்மைகளின் அடி ஆழத்தைத் தோண்டி ஆன்மாவைக் கண்டடையும் பெரும் பிரவாகத்தில் அடித்து செல்கிறார்.

வார்த்தைகளில் என்னால்  நுட்பமாக விளக்க இயலவில்லை.

இந்த சிறந்த தமிழ் மொழிப்பெயர்ப்புகளுக்கு நன்றி அம்மா!

அவரின் மற்ற படைப்புகளையும் நீங்கள் தமிழில் கொண்டு வர வேண்டும்.

நன்றி!

அன்புடன்,

நந்தகுமார்.
................................................................


அன்பின் நந்தகுமார்
மிக்கநன்றி.......

இப்படிப்பட்ட எதிர்வினைகளே என்னை இயங்கவைத்துக்கொண்டிருப்பதால்  நன்றிசொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை.

இப்போதுதான் தஸ்தயெவ்ஸ்கி மண்ணை தரிசிக்கும் தீராத ஆசையுடன் ரஷ்யாசென்று மீண்டிருக்கிறேன்...

விரைவில் கீழுலகின் குறிப்புக்களும் [NOTES FROM THE UNDERGROUND]
இரட்டையர்-[THE DOUBLE] என்றநாவலும் என் பெயர்ப்பில் அடுத்த புத்தகக்கண்காட்சியில் உங்களுக்குக்கிடைக்கும்.

அதற்கேற்ற உடல் மனநலம் வாய்க்க மட்டும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அசடன், குற்றமும் தண்டனையும், ஆகியவற்றையும் நற்றிணை பதிப்பகத்தார் மிகவிரைவில் அடுத்த செம்பதிப்பாகக்  கொண்டு வருகிறார்கள் 

உங்கள் ஊக்க மொழிகள் என் உயிர்தீயை ஓங்கச்செய்யும் என்னும் நம்பிக்கையுடன்

எம் ஏ சுசீலா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக