துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.8.16

என் நாவலும்,ஓர் அஞ்சலும்...

’’ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம்  அவரது
படைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.’’

என் ’’யாதுமாகி’ நாவல் வெளிவந்து  கிட்டத்தட்ட ஒன்றரைஆண்டுகள்கடந்து விட்டன....

திண்ணைஆம்னிபஸ் ஆகிய  இணைய இதழ்களிலும்
,உங்கள் நூலகம் இதழிலும்  விமரிசனக்கட்டுரைகளும், அந்திமழை,
தினமணி,தினமலர் முதலிய இதழ்களில் சில அறிமுகக்குறிப்புக்களும் நாவல் குறித்து வெளிவந்தன.தனிப்பட்டமுறையில் நண்பர்களும், முகம்
தெரியாத சில நபர்களும் கூட எனக்கு அவ்வப்போது
நாவல்பற்றிமின்னஞ்சல் செய்ததுண்டு...ஆனாலும் கூட...என் படைப்பு,
அதன் மிகச்சரியான வாசகரை இன்னும் சென்று சேரவில்லையோ
என்னும் ஏக்கமும் , அது குறித்த  மிகச்சரியான வாசிப்பு இன்னும் கூட
நிகழ்ந்தாகவில்லையோ என்ற வருத்தமும், ஒரு புறம்  என்னுள்
ஓடிக்கொண்டே இருந்தது.

நூலின் உள்ளடக்கத்தைக்  கொஞ்சம் கூட உட்செரிக்காமல் முன்னுரை,
அணிந்துரை, பின்னட்டைக்குறிப்புக்கள் இவற்றிலிருந்து
ஒப்பேற்றி,,,ஒப்புக்கு எழுதப்படும் மொண்ணைத்தனமான குறிப்புக்களுடன் வெளிவரும் நூல்அறிமுகங்கள்..[அது கூடச்சொந்தமாக இல்லாமல்,மேற்சொன்னவற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்டவையே] ஒரு  பக்கம் என்றால் இதன் மறு பக்கம் இன்னும் மோசமானது..இது வாழ்க்கைச்சரித அடிப்படையிலான புனைவு என்பதால்  வரிகளுக்கு இடையே, வேறு பொருளைத் துருவித் தேடிப் பார்க்க எண்ணி வாய்க்கு
அவலும்  வம்பும் கிடைக்குமா என அலையும் இன்னொரு  கூட்டம்

எனக்கு அறிமுகமான நண்பர்கள்,மாணவிகள் என்னப்பலரும்-  என் நாவல்பற்றிக்கூறிய  பாராட்டுரைகள் எனக்கு உகப்பானவையாக இருந்தாலும் கூட  அவர்கள் என்  மீது வைத்திருக்கும் தனிப்பட்ட  அன்பின் சார்பும் அதில் பிணைந்து கிடந்தது.அதனால், அவர்கள்  முன் வைத்த ரசனையோடு கூடிய கட்டுரைகளிலும், கடிதங்களிலும்,விமரிசனங்களிலும்  அகவய நோக்கு[subjectivity] கலந்து விடுவதென்பது மிக இயல்பானது;  தவிர்க்க முடியாதது. அதன் காரணமாகவே - அவற்றோடு மட்டுமே  நிறைவு கண்டுவிட  என்னால் இயலவில்லை.

என்றேனும் ஒரு நாள்  ஒரு   மெய்யான...கறாரான, புறநிலை
விமரிசனத்தை [OBJECTIVE ] , இலக்கிய அணுகுமுறையோடு கூடிய
மதிப்பீட்டை நான் அடையக்கூடும் என்ற நம்பிக்கையில்... மாதக்கணக்கில்  காத்திருந்தேன்....

காரணம், நான் முன் வைத்தது ஒரு வாழ்க்கை என்றாலும் அதை
வெற்றுச்சரித்திரமாகச்சொல்லி விட்டுப்போகாமல்,முடிந்தவரை  ஒரு
புனைவு இலக்கியமாக மாற்றித் தருவதில் என் உயிரை உருக்கித் தவம்
இயற்றி இருந்திருக்கிறேன்....அதில் நான் எந்தஅளவு  வெற்றி
பெற்றிருக்கிறேன்,.... எந்தெந்தக் கட்டங்களில் புனைவுக்கலை என் கை
நழுவிப்போய் விட்டிருக்கிறது, நான் முன் வைக்க நினைத்த மையத்தை
சரியாக முன் வைத்திருக்கிறேனா.., அறிமுகமே அற்ற நல்ல
வாசிப்புக்கொண்ட எவரேனும் ஒருவர் அதைக்கண்டடைதல் என்றேனும்
கூடுமா  என்ற ஐயங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமிக்கத்
தொடங்கியிருந்தன.,  .

பேசாமல் நானே  இதற்கு ஒரு விளக்கம்தந்து இதை எந்த அடிப்படையில்
புனைவாக்கி எப்படியெல்லாம் கட்டமைத்திருக்கிறேன் என்று சொல்லி
விடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கியிருந்தஒரு கட்டத்திலேதான்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு,   வாசகி ஒருவரிடமிருந்து
கீழ்க்காணும், சுருக்கமான  ஆங்கில மின்அஞ்சல்,   எனக்கு வந்து
சேர்ந்தது....


//I just now finished reading your fictional autobiography ’Yadumagi’ which speaks about someone who was everything to those whom her life touched. You have reconstructed the past in a realistic and humane manner and therein lies the success of the work. 
We have spoken much about child marriages, child widows,  widow remarriages  and visionaries like sister Subbulakshmi in their respective slots.But we have not had any attempt made as you have done to bring out how the emotional havoc of one generation can affect the next generations too and what i liked best is the way out of such a one simply presented in the course of the work. 

The titles of the chapters do align well with 'Yadumagi ' though special mention should be made of "Asaivaru mathi Ketten".
The photographs/sketches belong well. Do have the work translated. I do so much want to see Devi.//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

’கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று இலங்கையில்
சீதையைக்கண்டதும் தாவிக்குதித்த அனுமனின் பரவச  நிலை எனக்கு
சித்தித்ததும்..., மிகத் தேர்ந்த வாசகி ஒருவரை நான் இனம் கண்டு
கொண்டதும் அந்தநொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயங்கள்....

என் படைப்புக்குழந்தையின் மிகச்சரியான வாசகி கிடைத்து விட்ட
மகிழ்வில் அஞ்சல் பார்த்த மறுநொடியே  
‘’என் படைப்பு ஓராண்டுக்கும் பிறகு அதன் சரியான வாசகரான உங்களை
இப்போதுதான் கண்டடைந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு
முக்கியத்தேவை புகழ் பணம் அல்ல,தன் படைப்பை அதன் ஜீவனோடு
புரிந்து கொள்ளும் சக ஆத்மா மட்டும்தான்.அது உங்கள் வழி வாய்த்ததில்
மகிழ்கிறேன்’’என்று  மறுமொழி அனுப்பி வைத்தேன்...

அதற்குப்பின்பு  தொடர்ச்சியாக நிகழ்ந்த   எங்கள் உரையாடல்களில்,,, மின் அஞ்சல்களில் ’யாதுமாகி’ குறித்து அவ்வப்போது அவர் வெளியிட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத்தந்திருக்கிறேன்...


//You know madam,
I have been trying to know what exactly i feel after reading the book. 
To put it in Tamizh Dukkamairukku. //
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//I spoke to one of my Tamil colleagues and  expressed my unhappiness over reading the book rather late (after almost a year i guess after its pub).. She wanted my opinion on the style. I liked the way you introduced Devi's life. I am not exaggerating - I read the book in two hours and am still thinking about - will continue to do so. What untold pain for all concerned. What callousness by all concerned - in the midst Devi with ’Asaivaru mathi’. I guess it was accidental that you linked ma’ ganga with her.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


//Devi, Charumma and Neena have become so close to me that i seem to be living their lives at times. Even Sambasivam and his wife are - i keep scolding Samba for not having the guts - ’Soozhnilai Kaithikal’.
Just before I read your ’Yadumagi’, I read Paul Kalanithi's  ’When Breath becomes Air’. An autobiography of a 36 year old Neuro scientist and surgeon - it left me bewildered - amazing wisdom of a different kind - economically written. Then Joe D'Cruz's ’Hasthinapuram’ - a 416 pages domestic novel where the author shows how each household is a hasthinapuram in microcosm - left me thinking. But yours is where i have ruminated for days at a stretch and feel as though the senseless injustice has been done to me.//
​,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//Well, I knew all about you in that first reading of ’Yadumagi’ the surface and the deeper meaning. If you remember my initial comments - i wrote Dukkamairrukku.  If you were to ask why? i have a thousand reasons but i felt and feel that you like me or may be vice-versa feel the Dukkam and it would haunt us through our lives - me without knowing Devi and you having lived her life, looking at her - when i read the lines"Appa varappogum seidi vandadume evaluvudan...thigattadu" a part of me said this Susila is great to understand and appreciate this feeling of a woman who reserves it for her child's father and the other side berated so many who were insensitive to it. I had objectivity and you were subjective despite maintaining an aesthetic distance...
You know ...you excelled yourself in your writing - but to be back to the point - i felt, feel and will feel when i recollect these and a thousand other things in the book.//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//The first that struck me when I read your 'Yadumagi' is this ruminative voice in the writing. It is the voice of the soul trying to grapple with life's experiences and with the incomplete in oneself. The book is a wonder, especially where you write about the 'agalin vemmai' [p 207-208] ,
it transcended the barriers of prose and became sheer poetry. Your short stories - everyone of them carry the voice of someone debating within about every issue. This is the reason why your translation of Dostoevsky  has become a possibility. An interior monologue at times dialogue too. There is no loneliness in your writings including your letters as much as aloneness. You have mastered the art of being alone//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//The success of the whole writing lies in not writing about the sadness or harassment but about taking it in the stride and standing tall despite everything.
All human life is one way or the other a tale of sadness and successful individuals have just gone on by laying it aside. 
An insightful reader and writer share this philosophical/ melioristic disposition.

May you get many more to urge  you to do your next.​//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அந்த வாசகி,சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய  ஆங்கிலப்பேராசிரியையான முனைவர் காதம்பரி  என்பதும்.., 
தமிழ் உட்படப் பல மொழிகளில் தேர்ச்சி  கொண்ட மிகச்சிறந்த
கல்வியாளர், கூர்மையானநுண்ணுணர்வு கொண்ட  திறனாய்வாளர் மற்றும்மொழிபெயர்ப்பாளர் என்பதும் ...அதன் பின்னால் நான்  அறிய நேர்ந்தவை.

ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் , அவரது
படைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.
என்னை எவரென்று  அறியாமல்.... என் படைப்பை மட்டுமே அறிந்தவராய் அவர் எழுதியமடல் ,எங்கள் நட்புக்குப்பாலம் அமைத்து விட…,.
 நாங்கள்  இருவரும், இப்போது இலக்கியப் பரிமாற்றங்களால்  அதை வளர்த்துக்கொள்ளும்  நல்ல தோழியராகி விட்டோம் 


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....