துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.8.10

சுதந்திரம்






சுதந்திரத்தின் மகத்துவம் பேசப்படுகிறது

குண்டு துளைக்காத 

கூண்டுகளிலிருந்து.......




13 கருத்துகள் :

உயிரோடை சொன்னது…

ந‌ல்லா இருக்கு :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஊருக்கு உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்ற கதை தான் அம்மா! வார்த்தைகள் நல்ல வீரியத்துடன் வெளிவந்திருக்கின்றன!

பொன் மாலை பொழுது சொன்னது…

இவைகளை டி.வி .யில் காணும் போது உள்ள வேட்ககேடும் அவலமும் என்னை சூழ்ந்து இருந்தது.
நீங்கள் பதிவாக இட்டுவிட்டீர்கள்.வேறு என்ன சொல்ல?

பெயரில்லா சொன்னது…

இது பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிரான சுதந்திர நாள். இன்னும் வெளிநாட்டு புனிதப்போர் வன்முறை, உள்நாட்டு நக்ஸலிச வன்முறை, நக்ஸலிசத்தை ஊக்குவித்த புண்ணியவான்களின் வன்முறை, ஆட்சியாளர்களில் கயவாளித்தனம் என்று எத்தணையோ விசியங்களில் நாம் சுதந்திரம் பெறவேண்டும். அட போங்கம்மா.. நாள் ஆக ஆக நம் மக்கள் பண்பற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

பாண்டியன், புதுக்கோட்டை

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விநாயகர் ஊர்வலம் காவலர் பாதுகாப்புடன் என்ற கவிதை நினைவுக்கு வந்தது..

உண்மைதான்..

Thenammai Lakshmanan சொன்னது…

மிகவும் அருமை அம்மா..

goma சொன்னது…

நறுக்கென்று சொல்லி விட்டீர்கள்

Unknown சொன்னது…

மிகவும் அருமை

பெயரில்லா சொன்னது…

புரட்சி வெடிக்கட்டும் உங்கள் கவிதை மூலமாக!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பெரிய புரட்சிகளை முன்னிறுத்தியெல்லாம் நான் ஒன்றும் எழுதி விடவில்லை.
விடுதலை நாளில் நாட்டின் மிகப் பெரிய பொறுப்பிலுள்ளவருக்குக் கூடக் கூண்டு வாசம்தான் என்பது மனதைத் தொந்தரவு செய்தது.அதன் வெளிப்பாடே அந்த எழுத்து.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பு அம்மா

உங்கள் வலைப்பூ பற்றிய பகிர்வை வலைச்சரத்தில் இன்றைய எனது தித்திக்கும் தமிழ் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன். அந்த பகிர்வை படிக்க...

http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_17.html

நன்றி.

பெயரில்லா சொன்னது…

விடுதலை நாளில் நாட்டின் மிகப் பெரிய பொறுப்பிலுள்ளவருக்குக் கூடக் கூண்டு வாசம்தான் என்பது ...

அன்னிலையை உருவாக்கியவர்கள் யாரென்பதையும் ஆராய்ந்து ஒரு பதிவு அல்லது கவிதை போடுங்களேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பதிவின் வழி ஒரு சிறு பொறியைப் பற்ற வைப்பதுதான் என் வேலை.
அந்த இழையைத் தொடர்ந்தபடி அவரவர் அனுபவத்துக்கு ஏற்ப ஆராய்ந்து கொள்ள வேண்டியதுதான்.
அந்த ஆய்வை முன் வைப்பதற்கான மன உந்துதல் எனக்காகவே எழும்போது கட்டாயம் அதைச் செய்வேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....