இணைய வழி அறிமுகமாகி என்னிடம் அன்பு கொண்டிருக்கும் நண்பர்,இலக்கிய ஆர்வலர் திரு ஆர் வி புத்தகங்களுக்காக ஒரு பிளாக் என்ற தலைப்புடன் படைப்பு,படைப்பாளி,படைப்பு சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றையே பெரிதும் முன்னிலைப்படுத்தும் சிலிகான் ஷெல்ஃப் வலைத்தளத்தை நடத்தி வருகிறார். நான் மிகவும் மதிக்கும் வலைத் தளங்களில் ஒன்றான சிலிகான் ஷெல்ஃப் பில் என் பேராசிரிய அனுபவங்களைச் சொல்லுமாறும் அது குறித்து ஒரு பதிவு வெளியிட இருப்பதாகவும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் என்னிடம் கேட்டுக்கொண்டபோது அவர் ஏதோ தமாஷ் செய்கிறார் என்றே நினைத்தேன்.
ஆனால் ....இத்தனை தீவிரமாய் அதைப்பதிவாக்கி ,
//எம்.ஏ. சுசீலா சிறந்த வாசகி. பல முக்கிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவ்வப்போது கதைகளும் எழுதுகிறார். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பேராசிரியர்கள்/பேராசிரியைகள் என்றாலே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவது நல்லது என்ற என் தப்பபிப்ராயத்தை மாற்றியவர் அவர்தான். என்றாவது அவர் மெச்சும்படி ஒரு கதை எழுத வேண்டும்…
அவரிடம் தொணதொணத்து வாங்கிய பதிவு கீழே…//என்ற முன் குறிப்போடு வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.[மதுரையிலிருந்து சக பேராசிரியத் தோழி ஒருவர் சொன்ன பின்பே இதைப்பார்த்தேன்... ]
இந்த ஆண்டு ஆசிரியர் நாளில் அந்தப்பதிவுகளுக்கான இணைப்பை என் தளத்தில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக