''ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’
உலக அளவில் எழுதப்பட்டிருக்கும் முன்னோடி இருப்பியல்வாத நாவல்களில் முக்கியமானது ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின்
Notes from Underground.
இருப்பியல் வாதம் என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக,அந்தக் கோட்பாட்டிற்கு ஒரு புனைவு வடிவமாகவே அந்நாவலைத் தந்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
நிலவறைக்குறிப்புக்கள்
என்ற பெயரில்
நற்றிணை பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிறது.
கபாடபுரம் மின் இதழில் நிலவறைக்குறிப்புக்கள்குறித்து திரு சபரிநாதன் எழுதியிருக்கும் கீழ்க்காணும் செறிவான கூர்மையான கட்டுரையை இத் தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக