துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.11.20

பொன்னை விரும்பும் பூமியிலே..’- ’In a Materialistic World…

 

         பொன்னை விரும்பும் பூமியிலே..’- ’In a Materialistic World…

கல்கி இதழில் (13.6.1982 ) முன்பு வெளியான என் ‘பொன்னை விரும்பும் பூமியிலே..’என்னும் சிறுகதையைப்  பேராசிரியை வி காதம்பரி அவர்கள் In a Materialistic World…என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மைஸூரிலிருக்கும் த்வன்யலோகா வெளியீடான சாரஸா இதழில் ( 2020- Vol.No.35&36 ) அது வெளிவந்திருக்கிறது.

பொன்னை விரும்பும் பூமியிலே

  பிருந்தாவனத்தைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகளுடனும், நெஞ்சு கொள்ளாத கற்பனைகளுடனும் அந்த ‘டூரிஸ்ட்பஸ்ஸிலிருந்து இறங்கிய நான்... ஒரு நிமிஷம் அதிர்ந்து போகிறேன்.

     இது என்ன..? நம்ம ஊர் ‘வைகை டேம்மாதிரி.. தான் இருக்கு!கூட வந்த நண்பர்களுக்கு ஆர்வத்தோடு அழைத்து வந்துவிட்டு, வருகிற வழியில், வண்டியெல்லாம் பிருந்தாவனத்தின் பெருமைகளை வாய் ஓயாமல் சளசளத்துக் கொண்டு வந்த நண்பர்களுக்குச் சப்பிட்டுப் போகிறது.

     நீ வரவரப் பெரிய ‘சினிக்ஆயிண்டு வரேப்பா!

            என் கலை உணர்வுகளும், ரசனை நரம்புகளும் கூர் மழுங்கிப்போய் க்ஷீணித்துக் கொண்டு வருவதை நாசூக்காய்ச் சுட்டிக் காட்டியவர்கள், ஆளுக்கொரு திசையில் நகர்ந்து போகிறார்கள்.

     நானும் கால்போன போக்கில் நடக்கிறேன்.  காவிரித் தாயைக் கட்டுக்குள் அடக்கி, அவளிடமிருந்து பொழியும் இயற்கைச் செழிப்புக்களைச் செயற்கைப் போலிகளுடன் கைகுலுக்க வைத்திருக்கும் அந்தப் பூமி.. இன்னும் என்னைக் கவர ஆரம்பிக்கவில்லை.  ஒரு வேளை.. நண்பர்கள் சொல்வது நிஜம்தானோ? என் பார்வையிலேதான் ஏதும் கோளாறோ? இத்தனை சுற்றுலா பஸ்களுக்கும், அவற்றிலிருந்து நெல்லிக்காய் மூட்டையாய் அவிழ்ந்து, ஏதோ சாம்ராஜ்யம் கொள்ளை போகிற அவசரத்தில், அந்த நந்தவனத்தின் அழகை அள்ளிக்கொள்ள விரைகிற கூட்டங்களுக்கும் இடையே.. நான்தான் முட்டாளாய்த் தெரிகிறேனோ? எத்தனை மாநிலங்கள்.. எத்தனை மொழிகள்.. ஒரு குட்டி இந்தியாவே அல்லவா இங்கே நகர்ந்து கொண்டிருக்கிறது!

     படிக்கட்டுக்களில் ஏறி மேலே போய், நீரைக் குடங்குடமாய்ப் பொழியும் பதுமைத்தாயின் கோயிலில் ஒரு வினாடி தாமதித்துவிட்டு அணைக்கட்டு மேலேறி நடக்கிறேன்.  இயந்திர வளர்ச்சியின் பிரம்மாண்டத்தில் அகண்ட காவிரி, சாதுப் பெண்ணாய் அடங்கி நடைபயிலும் காட்சி நெஞ்சை நெருடுகிறது.  மின் உற்பத்தியும், தொழிற் பெருக்கமும் அதன் பெரும் பயன்கள் என அறிவு இடித்துரைத்தாலும், உணர்வுகள் ஒத்துக் கொள்ளாமல் சண்டித்தனம் செய்கின்றன.  தன்னிச்சையாய்த் திரியும் காட்டு விலங்குகளைக் கூட்டிலடைத்துக் காட்சிப் பொருளாக்கும்போது மனதில் விளையும் சோகம், இப்போதும் சம்பவிக்கிறது.

     இரவு தன் ஆதிக்கக் கரங்களை நீட்டி அகிலத்தை அணைக்கத் தொடங்கும் வேளையில், குபீரென்று அந்த இருட்காட்டில் ஒளிப்பூக்கள் பற்றியெரிய ஆரம்பிக்கின்றன.

     ஓ.. இது.. பிருந்தாவனத்தின் இன்னொரு முகமோ?

     நடந்து கொண்டும், பேசிக்கொண்டும், கூட்டங் கூட்டமாய் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தவர்கள், அந்த ஒரு கணத்துக்காகவே காத்திருந்தவர்கள் போல நிதானமாய், மின்னொளியில் வண்ணத் தெளிப்பு கோலங்களை அசைபோடத் தொடங்குகிறார்கள்.

     அணையின் மீது நடந்தது போதுமென்று முடிவு செய்துவிட்டுக் கீழிறங்கி வருகிறேன்.  வரிசை வரிசையாய்ப் படிக்கட்டுகள்.. ஒவ்வொரு படிக்கட்டின் சரிவிலும் நின்றுகொண்டு நிறம் மாறும் ஜாலங்களையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு மோதிப் பொழியும் நீறூற்றுக்களையும் வாய் பிளந்து ரசிக்கும் கூட்டங்கள்! படிகளின் இருபுற மருங்கிலும் பசுமையாய்ப் பரவியிருக்கும் புல்வெளிகள்.. அவற்றில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஒரே அமைப்பிலான மண்டபங்கள்.. வெளிச்ச ஆரவாரங்களிலேயிலிருந்து விடுபட்டுத் தனிமையிலே இனிமை காண அங்கே விரையும் ஜோடிப் பறவைகள்... பிருந்தாவனம் என்ற பெயரை நியாயப்படுத்த வேண்டாமா என்ன ?

     கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன்.  ஏழு பத்தாகிறது, ஏழே முக்காலுக்குள் பஸ்ஸில் இருக்க வேண்டுமென்பது நினைவுக்கு வரக் கால்களை எட்டிப் போடுகையில்... எதிர்ச் சாரியில் தென்படும் காட்சி ஒன்று என் கண்களைக் கட்டி நிறுத்துகிறது.

     இளம் வாலிபன் ஒருவன் சக்கர நாற்காலியைத் தள்ளியபடி வர, அழகே உருவெடுத்தாற் போன்ற பெண்ணொருத்தி அதில் அமர்ந்திருக்கிறாள்.  புடவைக்குக் கீழ் தெரியும் அவள் பாதங்கள் சூம்பிப் போயிருப்பது, இங்கிருந்து பார்க்கையில் மங்கலாய்ப் புலனாகிறது.  வண்டியை நிதானமாய் ஓட்டியபடி, அந்தத் தோட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் கூட அவளுக்குச் சுட்டிக் காட்டி, அவன் விளக்கம் கொடுக்க...

     அந்த சந்தோஷத்தின் ஓர் இணுக்கைக் கூடத் தவற விட விருப்பமில்லாதவள் போல, அவள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்து அனுபவிக்கிறாள்.  நீர்ப் பொழிவுகள் குறுக்கிடும் போதெல்லாம் கஷ்டப்பட்டு எம்பிச் சரிந்து கைப்பிடி நீரை அள்ளியிறைத்துக் குதூகலிக்கிறாள்.

     கைகோர்த்து உலாவிக் களித்துத் திரிய வேண்டிய ஒரு இடத்தில், இப்படிக் கால்முடங்கி வரும் ஏக்கத்தையோ, தன்னிரக்க உணர்வையோ கொஞ்சமும் வெளிக்காட்டாது, அவளைச் சந்தோஷப்படுத்துவதே லட்சியமாய் அவனும், அந்த நிலையிலும் கூட அவனை உல்லாசமாய் வைத்திருப்பதே நோக்கமாய் அவளும் நடந்து கொள்ளும் முறை... குறையை இயல்பாய் ஏற்றுக் கொண்ட பாங்கு...., என் எண்ணத்தில் பிறந்த பச்சாதாப உணர்வை மாற்றி, வியப்புக் குடையை விரியச் செய்கிறது.

     அந்தத் தம்பதியர் பேசும் மொழி விளங்கா விட்டாலும், வார்த்தைகள் காதில் விழாவிட்டாலும், அவர்களில் பாசவிழிப் பார்வைகள் சொல்லும் நேசக் கவிதைகள்..., பரஸ்பரம் அவர்கள் பூண்டுள்ள அன்பின் ஆழத்தையும் உறவுப் பிணைப்பையும் கதையாய் வெளியாக்க.... அவர்களை மகிழ வைக்கும் பிருந்தாவனம், அந்தக் காரணத்தாலேயே எனக்கும் கூட இப்போது அழகாய்த் தெரிகிறது.  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! எங்கள் இறைவா!’ என்று நெஞ்சு இரைகிறது.

     கண் பார்வையிலிருந்து அவர்களைத் தப்ப விடாதபடி இக்கரையில் நடந்து வந்த நான், படிக்கட்டின் குறுக்கீட்டால் கொஞ்சம் தயங்கிப் பிறகு திரும்பிப் பார்க்கிறேன்.

     மேல்படிக்கட்டின் விளிம்பருகே வண்டியை நிறுத்தி விட்டு, ஒரு குழந்தையைப் போல் அவளைத் தாங்கிச் சுமந்தபடி.... படிக்கட்டுகளில் இறங்கி ஓடுகிறான் அவன்.  கணவனைச் சுமக்க வைத்துவிட்ட குற்ற உணர்வோ, தயக்கமோ சிறிதும் இன்றி, அதையும் இனியதொரு அனுபவமாய் ஏற்று அவள், பூவாய் மலர்ந்து சிரிக்கிறாள் அவள்.  அந்தக் குற்ற உணர்வு, அவளுக்கு ஏற்பட்டு விடாத வகையில், அவள் தனக்கொரு இனிய சுமையே என்று உணர்த்துவதைப் போல அவளை லகுவாய்ச் சுமந்து கீழ்ப்படியில் அவளை உட்காரவைத்துவிட்டு வண்டியை எடுக்க அவன் மீண்டும் மேலேறி வருகிறான்.

     போலிப் பாசாங்குகளற்ற, அசலான ஆத்மாக்களைத் தரிசித்துவிட்ட சந்தோஷம், என் அடி மனதிலிருந்து பீறிவருகிறது.  முடமான மனைவியை வீட்டுக்குள் முடக்கிப் போட்டு அவள் வாழ்வையும் நொண்டியாக்கி விடாமல், வெளி உலகம் பார்க்க வைத்து, அங்கே.. பலர் காணத் தானே பணிவிடையும் செய்யும் அந்தக் கணவனின் பௌருஷம், என் கண்ணெதிரே விசுவரூபமெடுக்கிறது.  சக்கர நாற்காலி தள்ளும் அந்தக் கரங்களைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்ள மனம் பரபரக்கிறது.

     இதோ!.. கடைசிச்சரிவு! பிருந்தாவனமும், இந்த அனுபவமும் இதனுடன் முடியப் போகிற வெறுமை.. ஏக்கம்.. லேசாய்த் தலை நீட்டுகிறது.

     இம்முறை.. ஏனோ? அவள் படிகளில் தன்னைச் சுமக்க வந்த கணவனைக் கையமர்த்திவிட்டு, அவன் துணையுடன் விந்தி விந்தி மெல்ல இறங்கிப் போகிறாள்.  காரணம் விளங்காமல் தவிக்கும் கணவனுடன் சேர்ந்து நானும் கஷ்டப்படுகிறேன்.  ‘ஒரு வேளை, நான் பார்ப்பதைக் கவனித்திருப்பாளோ?.. அப்படியும்.. அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து கொண்டுதானே நான் தொடர்ந்து கொண்டு வருகிறேன்.. ம்.. தானும் நடக்க வேண்டுமென்ற ஆசையில்.. தன்னாலும் நடக்க முடிகிறதா என்று பார்க்கும் துடிப்பில் கூட அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கலாமே! மனம், கேள்வியை எழுப்பிச் சமாதானமும் காண்கிறது.

     நதிக்கரையை ஒட்டி வேலியோரமாய் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும ஐஸ்கிரீம் சுவைக்கிறார்கள்.  இனியும் தொடர்வது நாகரீகமில்லை என்ற உணர்வுடன், அவர்களிடமிருந்து மானசீகமாய் விடைபெற்றபடி பஸ்ஸுக்கு விரைகிறேன்.

     “என்னப்பா ‘சினிக்’! வந்து இறங்கின உடனே என்னவோ கோளாறு சொன்னியே!... இப்ப ஒரேயடியாய் மயங்கிப் போயிட்டியா?... இவ்வளவு ‘லேட்டா வரே..‘?

            நண்பர்கள், கேலி செய்தபடி வரவேற்கிறார்கள்.

     வண்ணக் களஞ்சியமானதொரு உலகில்... “பலப்பல நல்லழகுகள் சமைத்தாய்!என்று மனதுக்குள் பாரதியைப் பாடியபடி பஸ்ஸில் ஏறி உட்காருகிறேன்.  எனக்குப் புதியதொரு போதிமரமான பிருந்தாவனம், வைரப் புள்ளிகளுடன் கொஞ்சங் கொஞ்சமாய் நகர்ந்து மறைகிறது.

     பஸ், பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

     தூக்கம், கண்களைச் சுழற்றிக் கொண்டு வரும் நேரத்தில் பின் சீட்டிலிருந்து உரத்த குரல் ஒன்று... பிருந்தாவனத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறது.

     “என்னய்யா... பிருந்தாவனம்! வரவர... இந்த இடம் ரொம்பத் தான் கெட்டுப் போச்சு போங்க.  இங்கே வந்ததுமே ‘லைசென்ஸ்கிடைச்சிட்ட மாதிரி, அசிங்கமெல்லாம் பண்றாங்க.  ‘ப்ப்ளிக் ப்ளேஸ்லே இப்படி நடந்துக்கலாமான்னு ஒரு கூச்ச நாச்சம் வேண்டாமா?... இன்னிக்குப் பாருங்க! படிக்கட்டிலே ஒரு பொம்பளையை அலாக்காகத்தூக்கிட்டு ஒரு ஆளு ஓடிவரான்!... என்னமோ சினிமாக் காட்டறதா நெனப்பு இவங்களுக்கு!... எனக்கு வயிறு பகீர்னு பத்திக்கிட்டது, கண்ணை மூடிக்கிட்டுச் ‘சடார்னு அந்தப் பக்கம் நகர்ந்து போயிட்டேன்.

            அந்த நாற்காலிக் கோலத்தையும் பார்த்துவிட்டு கண்ணைத் திருப்பிக் கொண்டிருக்கக் கூடாதா நண்பரேஎன்று நினைக்கிற எனக்கு.. அந்தப் பெண், கடைசிச் சரிவில் கஷ்டப்பட்டு இறங்கிப் போன காரணம் இப்போது நன்றாகவே விளங்கிப் போகிறது.

                                     In a Materialistic World…

(M.A.Susila, Ponnai Virumbum Boomiyile Tamil, Pub in Kalki,13.6.1982)

Translated by V.Kadambari

I was bewildered for a moment as I got down from the tourist bus with a heart full of expectations and imaginations.

“Oh! What is this? Just like our Vaigai dam!” For the friends who had brought me there extolling throughout the trip the beauty of Brindavan, it is a total shock.

“You are becoming a cynic of late”. Having hinted at in a thoroughly civilised manner, the dwindling artistic nature and taste for the exquisite in me, they moved on in various directions.

I too walked on where my feet would take me. The place which has kept mother Kaveri within bounds and has allowed the arcadian surroundings with artificial beautification shake hands is yet to attract me. ‘May be … what friends say is true? May be something wrong in my perspective! Maybe I look silly among the tourists who, sprinkled like gooseberries all over by the various tourist buses, are rushing to drink up the beauty of the garden! How many states… how many languages? - a veritable mini India indeed!’

I climb the steps, and pause for a moment outside the temple of the deity who is untiringly pouring pots of water and proceed to stroll the length of the dam. It disturbs me much to see the otherwise broad and exuberant Kaveri timidly flowing due to technology. Though intelligence tries to din about the advantages like production of electricity and flourishing of traders, emotions wouldn’t accept the confinement. The sadness that envelops while looking at the caged animals which have wandered at liberty is felt now.

The lights come alive in the dark forest exactly when night extends its powerful arms to hug the universe.

‘Eh! This is another face of Brindavan is it?’ Those who are walking, talking and sitting in groups to eat, begin to gulp the byplay of the luminous designs as though they were waiting just for that moment.

I walk down the steps of the dam, the steps in rows … on each row crowds looking open jawed at the magically changing colours and the majestic fountains that vie with them! On either side of the steps the green lawns with uniformly built, resting places and couples who rush there in search of privacy from the light and the crowd - should not the name Brindavan be justified?

I look at the watch. It says 7.10. I remember the instruction to be in the bus before 7.45 and take hasty steps … but what I see on the opposite side rivets me. A young man is pushing a wheel chair on which is seated a beautiful girl. Her feet within the folds of the saree dimly reveal them to be crippled … he pushes the chair slowly and gently as he points out and explains the various attractions of the garden….

She seems to be enjoying every iota of the pleasurable experience. Whenever the fountains are neared she stretches herself to hold a handful of water with a childish mirth only to fall back limply within seconds.

His evident joy in making her happy though he may wish to under the circumstances hold her hand and walk around, and her only aim of keeping him happy despite her condition spreads the umbrella of surprise in my thoughts. The ease with which they have accepted the handicap alters pity that was my first reaction.

Though the couple’s language is not known, and the words are not audible, the mutual love explicit in their glances unfold a poetry revealing the story of their trust in each other and the strong bonding between them. It is reason enough to make Brindavan bewitching to me. My heart heaves a prayer of thanks, ‘Oh! For the millions of pleasant things in the world’.

Keeping them in focus, I walk on and when the steps intervene lose them for a moment. I hesitatingly turn to look at them. Leaving the chair on the top step he carries her like a child, and runs down the steps. Her face blossoms in sheer joy of the experience with no trace of guilt about making the husband carry her. He seats her on the last step and goes up to get the chair, not allowing her to in any way feel guilty and on the other hand makes her understand that she is a happy burden to him.

From my heart happiness bubbles up at having seen such natural souls which have no artificiality in them. The masculine charm of the husband towers before me for not allowing the crippled wife to be confined to her home but has on the other hand brought her out to be with all. My mind wishes to hold the hands which take care of her.

Here! The last slope! Brindavan and the experience in it will end… and a yearning lingers.

This time for some reason, she stops the husband who extends his hands to carry her, and walks haltingly with his help. With the husband, who is in agony for not knowing the reason, I too, am troubled. Would they have seen me watching them? I have been following them unobtrusively isn’t it? Maybe she wants to walk and has done so to know that she can also walk. My mind raises the questions and also tries to answer them.

They park the chair on the banks of the river and take ice-cream. Feeling that it is not right to follow them anymore, I take leave of them mentally and rush to the bus.

“Eh cynic! You grumbled so much when you got down! Now you are thoroughly mesmerised is it? … You are the last to arrive!”

Friends welcome me teasingly.

I recall Bharathi, In this multicoloured world…you have created manifold charms! As I occupy my seat. Brindavan my new found Bodhi, leaves my view slowly with sparkling diamonds.

Bus is speeding towards Bangalore. As sleep tries to overtake me a loud voice from the seat behind comments about Brindavan.

“What kind of place is Brindavan? As days go by this place is becoming rotten. As soon as they come here all kinds of vulgarities are indulged in as though licence is given. Should they not have public etiquette? See, today a fellow ran down the steps with a woman in his arms! As though showing a film! My stomach churned. I just closed my eyes and moved away”.

I who was reminiscing, think, ‘Friend, could you not have moved away after seeing the wheel chair?’

I knew just then in a flash why the girl insisted on labouring down the last slope.

 

 

 

 

 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....