’’கள்ளங்கபடங்களும்,மன விகாரங்களும் இன்னும் வந்து ஒட்டிக்கொண்டு தீட்டாக்கி விடாத குழந்தைகள் உலகத்தை வாசகப் பார்வைக்கு விருந்தாகப் பரிமாறிவிட்டு விடைபெற்று விலகி நிற்கிறார் கதை சொல்லி’’.
கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’
கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’
கதைப் பிரியர்களின் நினைவிலும்,கதை சொல்லிகளின் நினைவிலும் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும் முன்னோடிக் கதை இலக்கியப் படைப்பாளி,திரு கு.அழகிரிசாமி .’அன்பளிப்பு’என்னும் தனது சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் கு.அழகிரிசாமி சிறுவர் இலக்கியம்,நாடகம்,மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.கம்பனின் மீது பிடிப்புக் கொண்டவர்.கி.ராஜநாராயணனின் இளமைக்கால நண்பரான இவர் அதே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். |
இயல்பான ஓட்டத்தில் எளிமையான சொற்களோடு ,படைப்பின் உட்குரல் எந்த மட்டத்து வாசகனையும் போய்ச்சேரும் வகையில் கத்தி நுனி மீது செயல்படுவது போன்ற நுட்பத்துடன் லாகவமாகத் தீட்டப்பட்டிருக்கும் ‘ராஜா வந்திருக்கிறார்’என்னும் அவரது சிறுகதை இந்தப்பதிவில்....