துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.6.17

தவறவிடக்கூடாத ஒரு குறும்படம்

கர்நாடக மாநிலம் உடுப்பியருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த [2015]
ஒரு மிகச்சிறிய உண்மைச்சம்பவத்தைத் துளு மொழியில்  சுவாரசியமான குறும்படமாக்கியிருக்கிறது கணேஷ் ஷெட்டியின் ’’பரோக்‌ஷ்’.

தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பை ஒட்டி அதையே வாழ்வாதாரமாய்க்கொண்டு வாழும் ஒரு சின்னக்குடும்பம்.
குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து அவ்வப்போதுகேட்கும் சின்னஞ்சிறு குழந்தையின்  அழுகுரலால் முதலில் திகிலாகிறாள் அதன் குடும்பத் தலைவி.

பிறகு மற்றவர்களையும் அது தொற்றிக்கொள்ள மாயம், மற்றும் மாந்திரீகத்துக்காகத் தன் சொத்து முழுவதையும் கூட  அவர்கள் செலவழிக்கத் தயாரான நிலையில் முடிவு என்ன என்பதை இயல்பான- யதார்த்தமான பாணியில் சொல்லும் இந்தப்படம்  இணையத்தின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது. பாலிவுட்டில் நுழைவதற்கான பொற்கதவுகளையும் இயக்குநருக்குத் திறந்து விட்டிருக்கிறது இந்த 13 நிமிடக்குறும்படம்.

 மிகை ஆரவாரங்கள் அற்ற அடங்கிய தொனியும்  கச்சிதமான சுருக்கென்ற முடிவும் தவற விடக்கூடாத குறும்படங்களில் ஒன்றாக  ’’பரோக்‌’’ஷை [PAROKSH / परोक्ष] ஆக்கி விடுகின்றன.













4.4.17

குற்றமும் தண்டனையும் புதிய பதிப்பு-செம்பதிப்பு

என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் ,தங்கள் சிறப்பு வெளியீடாக- செம்பதிப்பாக- வெளியிட்டுள்ளனர். 
தொடர்புக்கு; 
Natrinai Pathippagam,​6/84,​
Mallan Ponnappan Road,
​Triplicane, Chennai - 600005, 
044 28482818, 9486177208​.. 
natrinaipathippagam@gmail.com



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....