துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.6.12

’ஊர்மிளை’-சில எதிர்வினைகள்

 தினமணி கதிர்-13.05.12-இதழில் வெளியாகியிருக்கும் என் ஊர்மிளை சிறுகதை.பற்றி 27.05.12 தினமணி கதிரில் இடம்பெற்றிருக்கும் சில எதிர்வினைக்கடிதங்கள்..
’ஊர்மிளை’சிறுகதை கம்பராமாயண காலத்துக்கே அழைத்துச்சென்றுவிட்டது.ஒரு வரிச் செய்தியை உரையாடலாய் வடித்து வாசிக்க வைத்த விதமே அழகு.நிகழ்வுகளைக் கண் முன்னே நிறுத்தி விட்டது.வருணனைகள் மூலம் மீண்டும் இராம இலக்குவனின் பந்தபாசத்தைப் படைத்துக் காட்டிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
-அ.கருப்பையா,பொன்னமராவதி


எம்.ஏ.சுசீலாவின் ஊர்மிளை சிறுகதையில் எதிர்பாராத திருப்பம்;புதிய முடிவு,சீதையுடன் ஊர்மிளா வால்மீகி ஆசிரமத்தில் தங்க முடிவு செய்தது அதிர்ச்சியேயானாலும் ஆறுதல் அளிக்கிறது.இதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத அணுகுமுறை
-ஜே.துரைராஜ்,சென்னை


சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் வெளியாகியிருக்கும் நண்பர் ஆர்வியின் எதிர்வினை
-எம்.ஏ. சுசீலா சிறந்த ரசனை உள்ள வாசகி. முன்னாள் தமிழ் பேராசிரியை. தமிழ் பேராசிரியையாக இருந்தும் நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு உள்ளவர். (இது ஒரு முரண்பாடு என்று கல்லூரி தமிழ் பேராசிரியர்(யை)களோடு பழக்கம் உள்ளவர்கள் சொல்கிறார்கள்). டோஸ்டோவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை சமீபத்தில் “அசடன்” என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறப்பான மொழிபெயர்ப்பு என்று ஜெயமோகனே (வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!) சிலாகித்திருக்கிறார்.
அவரது சிறுகதை ஒன்று சமீபத்தில் தினமணியில் வெளியாகி இருக்கிறது. ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியதன் மறுவாசிப்பு இந்தக் கதை. என் கண்ணில் இது சுமாரான கதையே. குறிப்பாக நடை மீது எனக்கு விமர்சனம் உண்டு. இப்படி எழுதுவதால் சுசீலா மேடம் மனம் வருந்தமாட்டார் என்பதுதான் எங்கள் நட்பின் பலம். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு வெளிச்சம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். இருநூறு முன்னூறு பேர் படிக்கும் என் ப்ளாகில் குறிப்பிட்டால் என்ன வெளிச்சம் வந்துவிடப் போகிறது என்று ஒரு கேள்வியும் உண்டு. ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ள, எழுதும் ஆர்வம் உள்ள ஒரு கூட்டம் உருவாகி இருப்பது நல்ல விஷயம், 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....