துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.10.14

தென்னங்கீற்று ஊஞ்சலிலே.....


என் வளர் இளமைக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் கூட என்னைக் கிறங்க அடித்து மெல்லிய கனவின் லயத்துக்குக் கொண்டு செல்லும் சுகமான இந்தப்பாடல் குமரி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘
பாதை தெரியுது பார்’படத்துக்காக எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது .

’’அந்தப்படத்திற்கு [’ பாதை தெரியுது பார்’] நான் 2 பாடல்கள் எழுதினேன்.
அதில் ஒன்று மிகப்பிரபலமான  ’’தென்னங்கீற்று ஊஞ்சலிலே.....சிட்டுக்குருவி பாடுது’’என்ற பாட்டு. 
மற்றொரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. சுசீலா பாடிய அந்தப்பாட்டு,ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு. ‘’அழுத கண்ணீரும் பாலாகுமா’’ என்பது பல்லவி. இந்தப்பாடல் என்னைத் தவிர வேறு யார் நினைவிலும் இல்லை என்றே தோன்றுகிறது’’- என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஜே கே.

[சில நேரங்களில் சில மனிதர்களில் ஒலிக்கும் ‘வேறு இடம் தேடிப்போவாளோ’-வாணிஜெயராம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளில் வரும் ‘நடிகை பார்க்கும் நாடகம்..இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்’, புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் இடம்பெறும் ’சித்திரப்பூ சேலை..சிவந்த முகம்’-எஸ் பி பி முதலிய பாடல்களை எழுதியிருப்பவரும் ஜெயகாந்தனே]

வெளிப்பார்வைக்கு முரட்டுத்தனமாகக்காட்டிக்கொண்டாலும் அதற்குள் கசியும் மென்மனதை அவரது பல எழுத்துக்கள் வெளிப்படுத்துவதைப்போலவே மெல்லிய பூங்காற்றாய் வருடியபடி செல்லும் இந்தப்பாடலும் கூட நம் காதுக்குள் இலேசான இரகசியம் போல முணு முணுத்துச்செல்கிறது....






ஜே கே பத்மபூஷண் பெற்றபோது -புதுதில்லியில் அவருடன்...
[பி.கு
அவர் குறிப்பிட்டிருக்கும்  பி.சுசீலாவின் ’அழுத கண்ணீரும் பாலாகுமா’பாடலை நானும் கூட இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.
அப்பாடலின் ஒளி/அல்லது ஒலி வடிவ இணைப்பு எவருக்கேனும் கிடைத்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே....



2 கருத்துகள் :

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

ஜெயகாந்தன் ஐயா இத்தனை பாடல்கள், அதுவும் திரைப்படத்துக்காக இயற்றியிருக்கிறாரா! வியப்பாக இருக்கிறது! தகவலுக்கு நன்றி அம்மணி! எனக்கு அந்தப் பாடல் கிடைத்தால் கண்டிப்பாகத் தங்களுக்கு அனுப்புகிறேன்!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கட்டாயம் அனுப்புங்கள்..
பாதை தெரியுது பார் ஒன்றைத்தவிர நான் குறிப்பிட்டுள்ள மற்ற படங்களெல்லாம் அவரது கதைகள்தானே.அவர் எழுதிய பாடல்களே அவற்றுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....