துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.1.16

அந்தி மழை இதழில் ’’யாதுமாகி’’


என் ’’யாதுமாகி’’ நாவல் பற்றி 
வெளியாகி இருக்கும் சிறு அறிமுகக் குறிப்பு


[புகைப்பட எழுத்துக்கள் தெளிவின்றி இருப்பதால் தனியே தந்திருக்கிறேன்]
தலைமுறைகள்
‘யாதுமாகி’-ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப்பெண்களின் கதையைச் சொல்கிறது.கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது.அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது.கொள்ளுப்பேத்தி நீனா ஐ ஏ எஸ் படிக்கிறாள்.இந்தத் தலைமுறை இடைவெளியைத் தாங்கிக்கொண்டு கல்வியையும் நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கிறார் அன்னம்மாளின் மகள் தேவி.காலக்கடிகாரத்தின் பெண்டுலம் போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழ்க்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள்.யாருடைய கவனத்தையும் கவராமல் மணம் பரப்பும் ‘நைட் குயின்’மலரைப்போல வாழ்ந்து மறைந்த பெண்களைப்பற்றிய பதிவு இந்த நாவல்
-ஜா. தீபா

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....