துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.15

’சங்கவை’க்கு விருது


கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை  ஒவ்வொரு ஆண்டும் சிறந்ததமிழ் நாவல்களுக்கு திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் பரிசு வழங்கி சிறப்பித்து வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கான பரிசு எழுத்தாளரும் சென்னை லயோலா கல்லூரித்  தமிழ்ப்பேராசிரியருமான இ ஜோ ஜெயசாந்தி அவர்களின் ‘சங்கவை’நாவலுக்குக்கிடைத்திருக்கிறது.
[விருட்சம் வெளியீடு]


 900க்கு மேற்பட்டபக்கங்களைக்கொண்ட அந்த நாவல் உள்ளடக்கத்திலும் மிக வலுவானது. உயர் கல்விக்கூடங்களில் மாணவ நிலையிலும் ,ஆய்வுப்பணி மற்றும் ஆசிரியப்பணி மேற்கொண்டிருக்கும் நிலையிலும் பல தரப்பட்ட பல்வேறு வயதுடைய பெண்கள் ஆண்களின் ஆதிக்க அதிகார வெறிக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் ஆளாகும் அவலங்களை மிக விரிவாக,நடப்பியல் போக்கில் நாவலுக்குரிய அழகியல் குன்றாமல் எடுத்து வைக்கும் படைப்பு அது,

இவ்வாண்டு தொடக்கத்தில் சங்கவை நாவலின் வெளியீட்டு விழா சென்னையில் நிகழ்ந்தபோது எழுத்தாளர் இமையம் அவர்கள் நாவலைவெளியிட்டு வாழ்த்துரை வழங்க,நாவலை முழுமையாக மதிப்புரை செய்து சொற்பொழிவாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதே இந்த நாவலுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் காத்திருக்கிறது என்று எனக்குப்பட்டது.அதற்கேற்ப கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை இந்த நாவலைப்பரிசுக்குத் தேர்ந்திருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.


1983 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் ரசு நல்லபெருமாள்,இ பா., பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,நீல பத்மநாபன் போன்றோர். அந்தப்பட்டியலில் சிவசங்கரிக்குப்பின்பு இந்த விருதைப்பெறும் பெண் எழுத்தாளர்  ஜெயசாந்தி என்பதும் ஒரு சிறப்பு.

சகோதரி  ஜெயசாந்தி அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பரிசளிப்பு
நூலுக்குப் பரிசளித்து உரையாற்றும்
கவிஞர் சிற்பி



ஏற்புரை-ஜெயசாந்தி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....