துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.7.18

பாத்திமாவில் மீண்டும் ஒரு நாள்2006 இல் பணி ஓய்வு பெற்றபின் அவ்வப்போது மதுரை பாத்திமாக்கல்லூரிக்குச்செல்வதுண்டென்றாலும் இந்த ஆண்டு கல்லூரிப்பேரவைத் தொடக்க விழாவுக்கு[17/7/18] முதன்மை விருந்தினராய்ச்சென்றதும் ஆயிரக்கணக்கான இளம் மாணவியரிடையே தலைமைப்பண்புகள் குறித்துத் தொடக்க உரை ஆற்றியதும் பழைய மலரும் நினைவுகளை எழுப்பிய இனிய மறக்க இயலாத அனுபவம். பழகிய இடங்கள்..பயணப்பட்ட பாதைகள்..பார்த்த சில முகங்கள்...இவற்றின் ஊடே சஞ்சரிப்பதுதான் எத்தனை அலாதி இன்பம் தருவது? முன்னாள் முதல்வரான இந்நாள் கல்லூரிச்செயலரும் மற்றுமுள்ள அருட்சகோதரிகள் பலரும்...நான் ஓய்வு பெறும்முன் பழகியிருக்கும் சக பேராசிரியைகள் மற்றும் அலுவலர்களும் பொழிந்த அன்பு மழையில்  அருமையான ஒரு மறக்க முடியாத நாள் அது!கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....