"செஹ்மத் அழைக்கிறாள்"
ஹரீந்தர் சிக்கா எழுதிய "செஹ்மத் அழைக்கிறாள்" என்ற உண்மைச் சம்பவங்களைத் தழுவிய நாவல் எம்.ஏ.சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.நற்றிணை பதிப்பகத்தின் தரமான தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் மிக மிக முக்கியமானது.1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற காலத்தில் நிகழும் இந்த நாவல் - பல்வேறு திகில் தருணங்களைக் கொண்டது.
செஹ்மத் என்ற இளம்பெண் தன்னுடைய தேசமான இந்தியாவிற்காக பாகிஸ்தானுக்குள் நுழைந்து தகவல்களை திரட்டும் துணிச்சல் மிக்க உளவாளியாக உருமாறி அவள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பதைபதைப்புக்குரியதாக இருக்கிறது.இந்த நாவலை "ராஸி" என்ற பெயரில் திரைப்படமாக்கியுள்ளனர். எம்.ஏ.சுசீலாவின் மொழிபெயர்ப்பு எனக்கு எப்போதும் ஏமாற்றத்தை தந்ததில்லை.இந்த நூலிலும் அந்த நம்பிக்கை இன்னும் வலுவாகியிருக்கிறது.அப்படியொரு சரளமான மொழிபெயர்ப்பாளர் அவர்.அற்புதமான பணி.
"செஹ்மத் அழைக்கிறாள்" எனும் இந்த நூலின் உள்ளே அடர்த்தியாகப் பேசப்பட்டிருக்கும்
பல மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
"செஹ்மத் அழைக்கிறாள்" எனும் இந்த நூலின் உள்ளே அடர்த்தியாகப் பேசப்பட்டிருக்கும்
பல மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
-அகரமுதல்வன்
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAkaramuthalva%2Fposts%2F2937556849684516&width=500" width="500" height="796" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>
08.05.2020
08.05.2020
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக