ஓய்வுக்கே ஓய்வைத் தருவர்களாய் -ஊக்கமான மன எழுச்சியோடு ஆக்க பூர்வமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் காணும்போது மனம் சொல்ல இயலாத மகிழ்ச்சியில் மிதக்கும்; நாமும் அதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் பெருகும்.அண்மையில் அந்த மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் அளித்தவர்...80 வயதுக்கு மேலாகியும் தொடர்ந்து பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் புதுதில்லியைச் சேர்ந்த [ஓய்வு பெற்ற என்று அவரை எப்படிச் சொல்வது?] இந்திப்பேராசிரியர் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம் அவர்கள்.